JoomlaLock.com All4Share.net

Background Video

ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் உச்சத்தில் இருக்கும் அப்பிள் நிறுவனத்திற்கு நேரடி போட்டியாக திகழ்கின்ற நிறுவனமாக சம்சுங் காணப்படுகின்றது.

இந் நிறுவனம் ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்களை கவர்வதற்கு பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றது.

இதன் ஒரு அங்கமாக தற்போது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள ரியோ ஒலிம்பிக்கை குறிவைத்துள்ளது.

அதாவது சம்சுங் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த Galaxy S7 Edge கைப்பேசிக்கு சந்தையில் சிறந்த வரவேற்பு காணப்படுகின்றது.

இதனால் இக் கைப்பேசியில் சில மாற்றங்களை மேற்கொண்டு Samsung Galaxy S7 Edge Olympic Edition எனும் புதிய பதிப்பினை வெளியிடவுள்ளது.

இது தொடர்பான தகவலை Evan Blass என்பவர் டுவிட்டர் ஊடாக தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் எதிர்வரும் தினங்களில் இக் கைப்பேசியின் சிறப்பம்சங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 
Published in வணிகம்

யூரோ 2016 கால்பந்து போட்டிகளை காண வந்துள்ள 150 ரஷியர்கள் அதீத வன்முறைகளை செயல்படுத்த நன்கு தயார் நிலையில் வந்தவர்கள் என்று பிரான்ஸ் ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் சிறப்பாக பயிற்சி அளிக்கப்பட்டு அதிவேக தாக்குதல்களை நடத்தியுள்ளதால் தான், மார்செய்யில் இங்கிலாந்து ரசிகர்களோடு மோதிய பின்னர் கைது நடவடிக்கையில் இருந்து ரஷியர்களால் தப்பிக்க முடிந்துள்ளது என்று மார்செய் தலைமை அரசு வழக்கறிஞர் பிரைஸ் ராபின் கூறியுள்ளார்.

இந்த கலவரத்தில் ஈடுபட்டதாக இரண்டு பிரிட்டன் ரசிகர்கள் மேல் பிரான்ஸ் நீதிமன்றம் ஒன்று குற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

ஒருவருக்கு இரண்டு மாதமும், இன்னொருவருக்கு மூன்று மாதமும் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரிய மற்றும் பிரெஞ்சு குடிமக்கள் உள்பட இன்னும் எட்டு பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.

இந்த வாரத்தின் இறுதியில் லீலில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கு முன்னதாக அங்கு ஆதரவாளர்கள் குவித்து வருகையில் ரஷிய, பிரிட்டன் ரசிகர்களுக்கு இடையில் மேலும் கும்பல் வன்முறை பிரச்சனைகள் தோன்றலாம் என்று அச்சங்கள் நிலவுகின்றன.

Published in உலகம்

2016-17-ம் ஆண்டு நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்த சீசனில் இந்திய அணி 13 டெஸ்ட், 8 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. மேலும் டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய மைதானங்களாக ராஜ்கோட், விசாகப்பட்டினம், புனே, தரம்சலா, ராஞ்சி மற்றும் இந்தூர் ஆகியவற்றையும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த சீசனில் நியூஸிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம் ஆகிய அணிகள் இந்தியாவில் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கின்றன. முதலில் நியூஸிலாந்து அணி செப்டம்பர் 23-ம் தேதி முதல் அக்டோபர் 30-ம் தேதி வரை இந்தியாவுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

இங்கிலாந்து இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவுக்கு நவம்பர்-ஜனவரி இடையே 5 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிப்ரவரி-மார்ச்சில் 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகின்றன. வங்கதேசத்துக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது, 2000-ம் ஆண்டுக்குப் பிறகு வங்கதேசம் இந்தியாவில் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

டோக்கியோ: ஜப்பான் நாட்டின் புகுவோகா விருது ஏ.ஆர். ரகுமானுக்கு வழங்கப்பட உள்ளது. 2016ம் ஆண்டிற்கான இந்த விருது, ரகுமானுக்கு வழங்கப்படுகிறது.

Published in சினிமா

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், காது கேளாதோர் மற்றும் வாய் பேசாத மாணவர்கள் மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களின் பட்டியல்......

விருதுநகர் அரசு மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த எஸ்.பிரகதீஸ்வரன் மற்றும் நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த மாணவர் அன்பரசு 377 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார்.

தருமபுரி அரசு மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த டி.மாரியப்பன் 375 மதிப்பெண்களை பெற்று இரண்டாம் இடமும், மதுரை செயின்ட் ஜோசப் மகளிர் மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த மாணவி கே.சாரதா 373 மதிப்பெண்களை பெற்று மூன்றாம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

பக்கம் 1 / 2
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…