JoomlaLock.com All4Share.net

Background Video

ஈழத்தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தியதாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இலங்கை தமிழர்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் கடந்த 2009-ஆம் ஆண்டு ராஜபட்ச ராணுவத்தால் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் மே மாதம் 17-ஆம் தேதி நடைபெற்றது. இதை கண்டித்தும் உயிரிழந்த தமிழர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக மே 17 இயக்கத்தினரும், தமிழ் அமைப்புகளும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு ஈழத்தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து மே 17 இயக்கத்தினர் மே 21-ஆம் தேதி அனுமதியின்றி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். இதைத் தொடர்ந்து திருமுருகன் காந்தி உள்ளிட்ட 17 பேரை கைது செய்த போலீஸார் புழல் சிறையில் அடைத்தனர்.

இதனிடையே அவர்களது சிறை காவல் முடிவடைந்தபோதும் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் காவிரி பிரச்சினையின்போது கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மீது மே 17 இயக்கத்தினர் தாக்குதல் நடத்தியதாக அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த 2016-ஆம் ஆண்டு மத்திய அரசின் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை கண்டித்து வள்ளுவர் கோட்டம் அருகே திருமுருகன்காந்தி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுதொடர்பாக நுங்கம்பாக்கத்தில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு திருமுருகன் காந்தியை மீண்டும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Published in இந்தியா

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதமாக சரிவடைந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.1 சதவீதமாக குறைந்ததே பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 2017 ம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் இந்தியாவின் வளர்ச்சி சீனாவின் 6.9 சதவீதம் வளர்ச்சியை விட குறைவு.பொருளாதார வளர்ச்சி சரிவு எதனால் :1. மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2016 - 17 நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.1 சதவீதமாக உள்ளது. 2015-16 ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.2. ஊழல் மற்றும் கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம், பிரதமர் மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பிற்கு பிறகே மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) குறைய துவங்கி உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.3. 2014 ம் ஆண்டு டிசம்பர் மாத காலாண்டிற்கு பிறகு தற்போது தான் மிக குறைந்த அளவு பொருளாதார வளர்ச்சியை இந்தியா அடைந்துள்ளது. 2014 ம் ஆண்டு டிசம்பர் மாதம் பொருளாதார வளர்ச்சி 6.0 சதவீதமாக இருந்தது.4. ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் மொத்த மதிப்பு (ஜிவிஏ) 5.6 சதவீதம் மட்டுமே வளர்ச்சி பெற்றுள்ளது. முந்தைய காலாண்டில் இது 6.7 சதவீதமாக இருந்தது.

பண மதிப்பிழப்பு அறிவிப்பு காரணமாக டிசம்பர் மாதத்தில் பணப்புழக்கம் கடுமையான பாதிப்பிற்கு உள்ளானதே இதற்கு காரணம்.5. மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற கடந்த வாரத்துடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது ஜிடிபி பலவீனமடைந்துள்ளது, ஆளும் மோடி அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.6. ஜூலை 1 ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கான மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் பொருளாதார வளர்ச்சியில் சரிந்துள்ளது மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.7.
பொருளாதார வளர்ச்சி சரிவின் காரணமாக, உலகில் பொருளாதாரத்தில் வேகமாக உயர்ந்து வரும் நாடு என்ற பெருமையை இந்தியா இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.8. மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தின்படி, கட்டுமான துறை 3.7 சதவீதம், உற்பத்தி துறை 5.3 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளன. இது முந்தைய ஆண்டுகளின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும்.9. வர்த்தகம், ஓட்டல்கள் மற்றும் போக்குவரத்து சேவைகளின் ஆண்டு வளர்ச்சியும் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 6.5 சதவீதமாக மட்டுமே உள்ளது.

முந்தைய காலாண்டில் இத்துறைகளின் வளர்ச்சி 8.3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.10. பணக்கொள்கை மீதான எதிர்ப்பு இருந்த போதிலும் ஜிடிபி.,யில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

Published in இந்தியா
செவ்வாய்க்கிழமை, 30 மே 2017 00:00

கேரளாவில் தென்மேற்கு பருவமழை!

இரண்டு நாளுக்கு முன்னதாகவே, தென்மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நாடு முழுவதும்  மார்ச் மாதத்தில் கோடைக் காலம் துவங்கியது. வெயிலின் தாக்கத்தால்  தமிழகம் முழுவதும் அனல் காற்று வீசியது. மே  4ல் துவங்கிய கத்திரி வெயில்  24 நாட்கள் அனலாய் ஆட்டம் போட்டு கடந்த ஞாயிறுடன் முடிவுக்கு வந்தது. இந்நிலையில்  மேற்கு திசையிலிருந்து நம் நாட்டை நோக்கி வீசும் கடல் காற்று  வலுவடைய துவங்கி உள்ளது. அதனால்,.தென் மேற்கு பருவமழை, கேரளாவில் துவங்கும் சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. அதற்கேற்ற படி  'தென் மேற்கு பருவமழை, எதிர்பார்த்தபடி கேரளாவில் இன்று(மே 30)  துவங்கும் என  வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

கணிப்புபடி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மைய இயக்குநர் ஜெனரல் கேஜே ரமேஷ் கூறியதாவது: தென்மேற்கு பருவமழை கேரளாவிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் துவங்கியுள்ளது. பருவமழை முன்கூட்டியே துவங்கியதற்காக மோரோ புயல் காரணம் இதற்காக புயலுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். தென் மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1 முதல் துவங்கும்.

Published in இந்தியா

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் என்ற இடத்தில் மோட்டார் குண்டு வெடித்து 5 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published in இந்தியா

போபோர்ஸ் பீரங்கி ஊழல் நடந்து 30 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்காவிடமிருந்து எம்-777 அதிவேக பீரங்கிகளை இந்தியா வாங்குகிறது. 700 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் 145 பீரங்கி துப்பாக்கிகள் வாங்கப்பட உள்ளன. இதன் மூலம் நிமிடத்திற்கு 30 கி.மீ தூரம் வரை 5 சுற்றுகள் குறிவைத்து தாக்குதல் நடத்த முடியும்.ராணுவத்தை ரூ.22 ஆயிரம் கோடி மதிப்பில் நவீனப்படுத்த இந்திய ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது பயன்பாட்டில் உள்ள பீரங்கிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், 5 வகையான பீரங்கிகளை கொள்முதல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தற்போது வாங்கப்பட உள்ள பீரங்கிகள் கிழக்கு பிராந்தியத்தில் சீன எல்லையில் பயன்படுத்தப்பட உள்ளது.இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில் முதற்கட்டமாக பீரங்கிகள் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு ராஜஸ்தானின் பொக்ரான் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு சோதனை செய்யப்பட உள்ளது. பீரங்கி கொள்முதல் செய்ய அமெரிக்க அரசுடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் மார்ச் 2019ல் துவங்குகிறது. ஒவ்வொரு மாதம் 5 பீரங்கிகள் இறக்குமதி செய்யப்படும். இவ்வாறு 25 பீரங்கிகள் இறக்குமதி செய்யப்படும். மற்ற 120 பீரங்கிகள் இந்தியாவில் மஹிந்திராவில் செய்யப்படும்.


Published in உலகம்
பக்கம் 1 / 135
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…