JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் சேர பொதுப்பிரிவுமாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களைப் பிடித்த மாணவர்களும் சென்னை மருத்துவக் கல்லூரியையே தேர்ந்தெடுத்தனர்.

தன்னுடன் படித்த தோழிக்காக தனக்கு கிடைக்க வேண்டிய மருத்துவக் கல்லூரி இடத்தை ஒரு மாணவி விட்டுக்கொடுத்துள்ளார்.

சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான பிரிவில் எஸ்.வர்ஷினி, என். ஜனனி ஆகிய இருவர் கலந்து கொண்டனர். இவர்கள் இருவரும் திருச்சி சமயபுரத்திலுள்ள ஒரே பள்ளியில் படித்தவர்கள். இருவரும் நெருங்கிய தோழிகள்.

இதில் வர்ஷினியின் கட்-ஆஃப் மதிப்பெண் 199 ஆகும். ஆனால் இவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். இவரது தோழியின் கட்-ஆஃப் மதிப்பெண் 198.75 ஆகும். ஆனால் இவர் பொதுப்பிரிவை(ஓ.சி.) சேர்ந்தவர்.

முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இவர்கள் இருவரும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருந்தனர்.

இந்த நிலையில், கலந்தாய்வில் சென்னை மருத்துவக் கல்லூரியில் தனக்கு கிடைத்த இடத்தை தனது தோழிக்காக விட்டுக் கொடுத்துள்ளார் வர்ஷினி.

இதுகுறித்து வர்ஷினி கூறுகையில், பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வில் எனக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் நிச்சயம் இடம் கிடைக்கும். ஆனால், எனது தோழி ஓ.சி. வகுப்புப் பட்டியலில் இருப்பதால் அவருக்கு அதே கல்லூரியில் இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

எனவே இந்த இடத்தை எனது தோழிக்கு விட்டுக் கொடுத்தேன். பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வில் கலந்து கொண்டு நானும் சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் பிடிப்பேன். அங்கும் எங்களது நட்பு தொடரும் என்றார் அவர்.

சனிக்கிழமை, 11 ஜூன் 2016 00:00

மாணவிக்கு நிதியுதவி

புதுப்பட்டினம் மருத்துவக் கல்லூரி மாணவிக்கு சென்னை அணுமின் நிலையம் கல்வி கட்டணம் வழங்கியுள்ளது.

கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா. இவர் 2013-14-ம் ஆண்டு கல்பாக்கம் அணுசக்திதுறை மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து தேர்ச்சி பெற்றார். அவருக்கு சென்னை மருத்துவ கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்து.

ஏழை குடும்ப மாணவியான அவரின் கல்வி கட்டணச் செலவை அணு மின் நிர்வாகம் ஏற்றது. இதற்காக முதலாம் ஆண்டில் ரூ.50 ஆயிரமும், இரண்டாம் ஆண்டில் ரூ.71000 வழங்கியது. நடப்பு ஆண்டு கட்டணமாக ரூ.48 ஆயிரத்து 900-ஐ அணுமின் நிலைய நிர்வாகம் வழங்கியுள்ளது.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…