JoomlaLock.com All4Share.net

Background Video

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% கூடுதல் இடஒதுக்கீடு அளித்து முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு 1 சதவீதமும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு ஒரு சதவீதமும் இடஒதுக்கீடு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

Published in தமிழகம்

அதிமுக ஆட்சி இன்னும் 2 மாதங்களில் கலைந்துவிடும் என்று மதுசூதனன் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். எடப்பாடி அணியில் உள்ள அதிமுகவினர் தங்களோடு வந்து இணைந்து விடுவார்கள் என்றும் கூறியுள்ளார். மதுரை திருப்பரங்குன்ற்ததில் ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த மதுசூதனன் தெரிவித்துள்ளார்.

இன்னும் 2 மாதங்களில் அதிமுக ஆட்சி கலைந்துவிடும்: மதுசூதனன்

 

Published in அரசியல்

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இன்று மீண்டும் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.. புதுக்கோட்டையில் உள்ள விஜயபாஸ்கரின் வீட்டில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

விஜயபாஸ்கர் வீட்டில் ஏப்ரல் மாதம் 7 ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ள நிலையில் இன்று மீண்டும் சோதனை நடக்கிறது.கடந்த ஏப்ரல் 7 ல் நடந்த சோதனையின் போது விஜயபாஸ்கர் வீட்டில் கிடைத்த நகைகள் ஆவணங்கள் ஆகியவை லாக்கரில் வைத்து சீல் வைக்கப்பட்டது.

Published in அரசியல்

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் தமிழகமே ஸ்தம்பித்துள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகளே இயங்கவில்லை.

மிகவும் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுவதால், மக்கள் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள் இன்று ஆலோசனையில் ஈடுபட்டன.


இந்தக் கூட்டத்தில் அரசியல் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்ட போக்குவரத்து ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

 இந்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக, நாளை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.


இது குறித்து தொமுச சண்முகம் கூறுகையில் வேலை நிறுத்தம் 100 சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் 99 சதவிகித பேருந்துகள் இயங்கவில்லை. பேருந்து சேவை குறித்து

 அமைச்சர் தவறான தகவலை அளிக்கிறார்.

Published in தமிழகம்

டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கறுப்பு பணத்தை மாற்றி பண மோசடியில் ஈடுபட்டதாக அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் டில்லியில் அளித்த பேட்டி: கெஜ்ரிவால் கறுப்பு பணம் மாற்றியதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது .

 அவர் பண மோசடியில் ஈடுபட்டார். அவருக்கு எதிராக சி.பி.ஐ  அணுகுவேன். மொகாலா கிளினிக் மோசடி யை வெளிப்படுத்துவேன்.

இது மிகப்பெரிய மோசடி திட்டம் இது பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும். கெஜ்ரிவாலுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஆதாரம் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் கூறுகிறேன்.

தேர்தல் ஆணையத்திற்கு ஆம் ஆத்மி தவறான வங்கி விபரத்தை தெரிவித்தது. நன்கொடை விபரத்தையும் ஆம் ஆத்மி மறைத்தது. இவ்வாறு அவர் கூறினார்.

 

 

Published in தமிழகம்
பக்கம் 1 / 91
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…