JoomlaLock.com All4Share.net

Background Video

இந்திய பங்குச்சந்தைகள் வரலாறு காணாத அளவிற்கு அதிரடியாக உயர்ந்துள்ளதன.

இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் முதல் முறையாக 30,000 புள்ளிகளை கடந்த புதிய சாதனை படைத்துள்ளது. சென்செக்ஸ் 30,030.80 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தையான நிப்டி 9328.75 புள்ளிகளாகவும் உள்ளன.

இதற்கு முன் 2015 ம் ஆண்டு மார்ச் 4 ம் தேதி 30,024 புள்ளிகளை தொட்டதே சென்செக்சின் அதிகபட்ச சாதனையாக கருதப்பட்டது. தற்போது இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. இருப்பினும் பிரான்ஸ் தேர்தலின் முதல் சுற்றில் ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளதன் காரணமாக வால் ஸ்ட்ரீட் 3வது நாளாக தொடர்ந்து உச்சத்தை எட்டி உள்ளது.

சர்வதேச பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள அதிரடி உயர்வு மற்றும் டில்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ. அதிரடி முன்னிலையில் இருந்து வருவதாலும் இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை எட்டி உள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Published in வணிகம்

USCIS என்றழைக்கப்படு அமெரிக்க குடியுரிமைத் துறை ஹெச்1 பி விசாக்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது குறித்து விரிவான செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

அமெரிக்காவில் திறமை வாய்ந்த ஊழியர்கள் கிடைக்காத பட்சத்தில் வெளிநாட்டிலிருந்து அழைத்து வருவதற்காக உருவாக்கப்பட்டது தான் ஹெச் 1 விசா திட்டம்.

ஆனால் ஏராளமான அமெரிக்கர்கள் தகுதி வாய்ந்தவர்களாகவும் குறிப்பிட வேலையில் சேர ஆர்வம் உள்ளவர்களாகவும் இருக்கும் நிலையில் அவர்களை புறந்தள்ளி விட்டு வெளி நாட்டு ஊழியர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள்.

ஹெச் 1 பி விசாக்களை தவறாக பயன்படுத்தி அமெரிக்க ஊழியர்களுக்கு எதிராக குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டு ஊழியர்களை நிறுவனங்கள் பணியில் அமர்த்தி வருகின்றன.

அமெரிக்க ஊழியர்களை பாதுகாப்பது தான் USCIS ன் தலையாய பணியாகும். இனி வரும் நாட்களில் கள ஆய்வுகளில் கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும்.

தொழில் பற்றிய தகவல்கள் அறியப்படாத நிறுவனங்கள் ஹெச் 1 பி விசா ஊழியர்களை பிரதானமாக நம்பி நடத்தப்படும் நிறுவனங்கள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும்.

தவிர  நிறுவன முதலாளிகளே இன்னொரு நிறுவனத்திலோ அல்லது இன்னொரு நிறுவன அலுவலகத்திலோ வேலை பார்த்து வந்தால் அந்த நிறுவன ஹெச் 1 பி விசா ஊழியர்கள் பற்றியும் முழு கள ஆய்வு செய்யப்படும்.

கள ஆய்வு மூலம்  அந்தந்த நிறுவனங்கள் உள்ளூர் அமெரிக்க ஊழியர்களை பணியில் அமர்த்த எடுக்கப்பட்ட முயற்சிகள் கண்டறியப்படும்.

ஹெச் 1 பி ஊழியர்களுக்கு பாதுகாப்பு

முன்னறிவுப்பு இல்லாமல்  தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்களின் விசா விண்ணப்பங்கள் மீதான கள ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த ஆய்வில் ஹெச் 1 பி ஊழியர்கள் மீது கிரிமினல் அல்லது நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்கப் பட மாட்டாது.

மாறாக  விசா திட்டத்தை ஏய்ப்பு செய்யும் நிறுவனங்களை கண்டறிவதற்காகத் தான் இந்த கள ஆய்வு மேற்கொள்ளப்படும்.

விசாவில் குறிப்பிட்டுள்ள ஊதியம் வழங்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட அமெரிக்க ஊழியர்கள் அல்லது ஹெ1 பி ஊழியர்கள் இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற இமெயிலுக்கு தகவல் அனுப்பலாம். அந்த தகவல்கள் துறை அலுவலர்களின் மேலதிக புலனாய்வுக்கு பயன்படுத்தப்படும்.

ஊழியர்கள் Form WH 4 ஐப் பயன்படுத்தியும் தகவல்களை சமர்ப்பிக்கலாம். முறைகேடுகள் பற்றிய தகவல் தெரிவிக்கும் ஹெச் 1 பி ஊழியர்களுக்கு குறிப்பிட்ட சில பாதுகாப்புகள் வழங்கப்படும்

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Published in உலகம்

புகைப்படங்களை பகிர உதவும் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அதிகமானோர் பின்தொடரும் உலகத் தலைவர்களின் கணக்குகளைக்கொண்டு 'பர்சன் மார்ஸ்டெல்லர்ஸ்' என்ற நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் 325 உலகத் தலைவர்களின் கணக்குகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

ஆய்வு முடிவில் உலக அளவில் அதிகம் பேர் பின் தொடரும் தலைவர் பிரதமர் மோடிதான் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. உலக மக்கள் அதிகம் பின்தொடரும் தலைவர்கள் பட்டியலில் மோடி முதல் இடத்திலும் ட்ரம்ப் இரண்டாவது இடத்திலும் போப் ஆண்டவர் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். 

பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் தன்னை இணைத்துக்கொண்டார். தற்போது மோடியை 6.9 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். டொனால்ட் ட்ரம்ப்பை 6.4 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். மோடியின் இன்ஸ்டாகிராம் கணக்கில் இதுவரை 53 புகைப்படங்களே பகிரப்பட்டுள்ளன. ஒவ்வொரு புகைப்படத்துக்கும் குறைந்தபட்சம் 2,23,000 லைக்குகள் வந்துள்ளன.

இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இணையத்தில் ஒரு தரப்பினர் 'பாரதப் பிரதமர் உலக அளவில் அனைவராலும் பின் தொடரப்படுகிறார் என்று மோடியைப் பாராட்டி வந்தாலும் நாட்டு மக்களின் நலனைவிட சமூக வலைதளங்களில் பிரபலமாவதில்தான் மோடி அதிக கவனம் செலுத்துகிறார்' என்று மற்றொரு தரப்பினரும் விமர்சித்துவருகின்றனர்.

Published in இந்தியா

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சமீபத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்தது. இதன் மூலம் பெருநகரங்களில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு, ஐந்து ரூபாய் வரை குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றவாறு அவ்வப்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் , பெட்ரோல் விலையில் லிட்டருக்கு, 3.77 ரூபாய்; டீசல் விலையில் லிட்டருக்கு, 2.91 ரூபாய் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மாநில அரசுகளின் வரி விதிப்பையும் கணக்கில் எடுத்து கொண்டால், பெட்ரோலுக்கு, லிட்டருக்கு, ஐந்து ரூபாயும், டீசலுக்கு லிட்டருக்கு, 3.5 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

 

இதற்கு முன் எப்போது? இதற்கு முன் மிக அதிகபட்சமாக, 2009 ஆண்டு ஜன., 29ம் தேதி தான், பெட்ரோல் விலையில், லிட்டருக்கு ஐந்து முதல், 5.50 ரூபாய் வரை குறைக்கப்பட்டது. 2015 ஆண்டு ஆக., 1ம் தேதி, டீசல் விலையில், லிட்டருக்கு, 3.60 முதல், 3.90 ரூபாய் வரை குறைக்கப்பட்டது. இது குறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ' சர்வதேச அளவில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளது.

ரூபாய் மதிப்பும் அதிகரித்துள்ளது. எனவே, அதற்கு உரிய பலன், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பாக நுகர்வோருக்கு அளிக்கப்பட்டுள்ளது' என, குறிப்பிடப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை (ஒரு லிட்டருக்கு ரூபாயில்)பெரு நகரங்கள் - பழைய விலை - புதிய விலை - குறைப்பு எவ்வளவுடில்லி - 71.14 - 66.29 - 4.85கோல்கட்டா - 73.66 - 68.97 - 4.69மும்பை - 77.46 - 72.66 - 4.80சென்னை - 74.43 - 69.28 - 5.15டீசல் விலை( ஒரு லிட்டருக்கு ரூபாயில்)பெருநகரங்கள் - பழைய விலை - புதிய விலை - குறைப்பு எவ்வளவுடில்லி - 59.02 - 55.61 - 3.41கோல்கட்டா - 61.27 - 57.86 - 3.41 மும்பை - 64.89 - 61.27 - 3.62சென்னை - 62.48 - 58.82 - 3.66

Published in வணிகம்

அமெரிக்காவில், துப்பாக்கிச்சூடு, 'விசா' கட்டுப்பாடு, போன்ற காரணங்களால், அங்கு சென்று உயர் கல்வி கற்கும், இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது.

அமெரிக்காவில் உள்ள பல்கலைக் கழகங்களில், இந்தியா, சீனா நாடுகளைச் சேர்ந்த, ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள், உயர் கல்வி படித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் தங்கி பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும், 'எச் 1- பி' விசாவிற்கு, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப், கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். மேலும் அந்நாட்டில் சமீபத்தில் அடுத்தடுத்து இந்தியர்கள் மீது துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்து வருகிறது.

 



ஒரு பக்கம் நிறவெறிடி தாக்குதல்களும் நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இதனால் வரும் கல்வியாண்டில், அமெரிக்க பல்கலைக் கழகங்களில் சேர்வதற்காக விண்ணப்பித்துள்ள இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென்று குறைந்து விட்டது.

அமெரிக்க பல்கலைக்கழக கூட்டமைப்பு நடத்திய ஆய்வுகளில், இது தெரிய வந்துள்ளது.

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பிற்காக விண்ணப்பித்துள்ள இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் குறைந்துள்ளது; மற்ற படிப்புகளுக்காக விண்ணப்பித்துள்ள இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, 26 சதவீதம் குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படிக்க வரும் மாணவர்கள் துப்பாக்கிச்சூடு, தாக்குதல் போன்ற சம்பவங்களால் அதிர்ந்து போய் உள்ளனர்.

Published in உலகம்
பக்கம் 1 / 4
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…