JoomlaLock.com All4Share.net

Background Video

தூய்மை இந்தியா திட்டத்தைக் கையிலெடுத்து  அதைச் சிறப்பாகச் செயல்படுத்தி  பலரது வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் பிரதமர் மோடி  என  மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனரும்  உலகின் பெரும் பணக்காரருமான பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

 

நேற்று  பில் கேட்ஸின் அதிகாரபூர்வ தளத்தில்   மனிதக் கழிவுகளுக்கு எதிரான போரில் இந்தியா வென்றுவருகிறது  என்ற தலைப்பில் பில் கேட்ஸ் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அந்தக் கட்டுரையில், பிரதமர் மோடிக்குப் பாராட்டுப்பத்திரம் வாசித்துள்ளார் பில் கேட்ஸ்.

 

இன்று  இந்தியாவில் 30 சதவிகிதத்துக்கும் அதிகமான கிராமங்களில் திறந்தவெளிக் கழிப்பிடங்களைப் பயன்படுத்துவதை மக்கள் நிறுத்தியுள்ளனர். இந்த மாதிரியான ஒரு முயற்சியை மேற்கொண்ட முதல் தலைவர் மோடியாகத்தான் இருப்பார். இந்தத் திட்டத்தை பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே செயல்படுத்தினார்.

 

மேலும் ஸ்வச் பாரத்  திட்டம்  அதன் வெற்றி, செயல்படுத்தப்பட்ட வீடியோக்கள் எனப் பல தகவல்களையும் தன்னுடைய கட்டுரையில் இணைத்துள்ளார். இறுதியாக நாடு சுகாதார மேம்பாட்டுடன் திகழ இந்தியாவின் முயற்சிகளைப் பல நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

Published in உலகம்

இந்திய பங்குச்சந்தைகள் வரலாறு காணாத அளவிற்கு அதிரடியாக உயர்ந்துள்ளதன.

இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் முதல் முறையாக 30,000 புள்ளிகளை கடந்த புதிய சாதனை படைத்துள்ளது. சென்செக்ஸ் 30,030.80 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தையான நிப்டி 9328.75 புள்ளிகளாகவும் உள்ளன.

இதற்கு முன் 2015 ம் ஆண்டு மார்ச் 4 ம் தேதி 30,024 புள்ளிகளை தொட்டதே சென்செக்சின் அதிகபட்ச சாதனையாக கருதப்பட்டது. தற்போது இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. இருப்பினும் பிரான்ஸ் தேர்தலின் முதல் சுற்றில் ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளதன் காரணமாக வால் ஸ்ட்ரீட் 3வது நாளாக தொடர்ந்து உச்சத்தை எட்டி உள்ளது.

சர்வதேச பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள அதிரடி உயர்வு மற்றும் டில்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ. அதிரடி முன்னிலையில் இருந்து வருவதாலும் இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை எட்டி உள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Published in வணிகம்

வடகொரியா வீசும் குண்டுகள் அமெரிக்க நகரத்தை தாக்குவது போலவும், அதில் அமெரிக்க தேசியக்கொடி எரிந்து சாம்பலாவது போன்றும் சித்தரித்து வடகொரியா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

வடகொரியாவின் மூத்த தலைவரான இரண்டாம் கிம் சங்க்கின் 150 வது பிறந்த நாள் நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. இது குறித்து கடந்த ஒரு வாரமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் நிகழ்ச்சி ஒன்றின் போது ஒளிபரப்பப்பட்ட வீடியோ ஒன்றில் v வடகொரியா வீசும் குண்டு அமெரிக்க நகரை தாக்குவது போன்றும்  அந்த வீடியோவின் முடிவில் அமெரிக்க தேசியகொடி எரிவது போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

வடகொரியா  அமெரிக்காவை வம்புக்கு இழுப்பது இது முதல் முறையல்ல இதற்கு முன் 2013 ம் ஆண்டும் கொலம்பியா, கலிபோர்னியா, ஹவாய் மாகாணங்களில் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்படுவது போன்ற வீடியோவை வடகொரியா வெளியிட்டவது. மேலும்  அமெரிக்க ராணுவத்தினரை குழந்தைகள் அழுவதை போன்ற போஸ்டர்களை வடகொரிய அரசே வெளியிட்டது. தொடர்ந்து அமெரிக்காவை கடந்து செல்லும் ரயிலை பார்த்து குரைக்கும் நாய் போன்றும் சித்தரித்து போஸ்டர் வெளியிடப்பட்டது. வடகொரியாவின் இந்த தொடர் அத்துமீறல்களால் இரு நாடுகளிடையே பதற்றமான நிலை உருவாகி உள்ளது.

Published in உலகம்

USCIS என்றழைக்கப்படு அமெரிக்க குடியுரிமைத் துறை ஹெச்1 பி விசாக்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது குறித்து விரிவான செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

அமெரிக்காவில் திறமை வாய்ந்த ஊழியர்கள் கிடைக்காத பட்சத்தில் வெளிநாட்டிலிருந்து அழைத்து வருவதற்காக உருவாக்கப்பட்டது தான் ஹெச் 1 விசா திட்டம்.

ஆனால் ஏராளமான அமெரிக்கர்கள் தகுதி வாய்ந்தவர்களாகவும் குறிப்பிட வேலையில் சேர ஆர்வம் உள்ளவர்களாகவும் இருக்கும் நிலையில் அவர்களை புறந்தள்ளி விட்டு வெளி நாட்டு ஊழியர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள்.

ஹெச் 1 பி விசாக்களை தவறாக பயன்படுத்தி அமெரிக்க ஊழியர்களுக்கு எதிராக குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டு ஊழியர்களை நிறுவனங்கள் பணியில் அமர்த்தி வருகின்றன.

அமெரிக்க ஊழியர்களை பாதுகாப்பது தான் USCIS ன் தலையாய பணியாகும். இனி வரும் நாட்களில் கள ஆய்வுகளில் கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும்.

தொழில் பற்றிய தகவல்கள் அறியப்படாத நிறுவனங்கள் ஹெச் 1 பி விசா ஊழியர்களை பிரதானமாக நம்பி நடத்தப்படும் நிறுவனங்கள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும்.

தவிர  நிறுவன முதலாளிகளே இன்னொரு நிறுவனத்திலோ அல்லது இன்னொரு நிறுவன அலுவலகத்திலோ வேலை பார்த்து வந்தால் அந்த நிறுவன ஹெச் 1 பி விசா ஊழியர்கள் பற்றியும் முழு கள ஆய்வு செய்யப்படும்.

கள ஆய்வு மூலம்  அந்தந்த நிறுவனங்கள் உள்ளூர் அமெரிக்க ஊழியர்களை பணியில் அமர்த்த எடுக்கப்பட்ட முயற்சிகள் கண்டறியப்படும்.

ஹெச் 1 பி ஊழியர்களுக்கு பாதுகாப்பு

முன்னறிவுப்பு இல்லாமல்  தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்களின் விசா விண்ணப்பங்கள் மீதான கள ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த ஆய்வில் ஹெச் 1 பி ஊழியர்கள் மீது கிரிமினல் அல்லது நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்கப் பட மாட்டாது.

மாறாக  விசா திட்டத்தை ஏய்ப்பு செய்யும் நிறுவனங்களை கண்டறிவதற்காகத் தான் இந்த கள ஆய்வு மேற்கொள்ளப்படும்.

விசாவில் குறிப்பிட்டுள்ள ஊதியம் வழங்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட அமெரிக்க ஊழியர்கள் அல்லது ஹெ1 பி ஊழியர்கள் இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற இமெயிலுக்கு தகவல் அனுப்பலாம். அந்த தகவல்கள் துறை அலுவலர்களின் மேலதிக புலனாய்வுக்கு பயன்படுத்தப்படும்.

ஊழியர்கள் Form WH 4 ஐப் பயன்படுத்தியும் தகவல்களை சமர்ப்பிக்கலாம். முறைகேடுகள் பற்றிய தகவல் தெரிவிக்கும் ஹெச் 1 பி ஊழியர்களுக்கு குறிப்பிட்ட சில பாதுகாப்புகள் வழங்கப்படும்

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Published in உலகம்

குடியுரிமை சட்ட அமலாக்கத்தைப் பொறுத்தவரையில் அதிபர் ஒபாமா ஆட்சியிலும் அதிபர் ட்ரம்ப் ஆட்சியிலும் மிகப்பெரிய மாறுதல்கள் இல்லை.. இருவரின் அணுகுமுறையில் தான் வித்தியாசாம் இருக்கிறது என்றார்.

விதிகளை தீவிரமாக அமல்படுத்திய ஒபாமா

ஒபாமாவின் முதல் நான்காண்டு காலத்தில் குடியுரிமைச் சட்ட விதிகளை மிகவும் தீவிரமாக அமல்படுத்தினார். கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

சட்டபூர்வமற்ற முறையில் குடியேறியவர்களை நாடு கடத்தியவர்களில் முதலிடம் ஒபாமாவுக்குத் தான். ஹெச் 1 பி விசா சட்டங்களையும் கடுமையாக பின்பற்றச் செய்தார்.

கேள்விகள், விசாரணைகள், விசா மறுப்பு, 100 சதவீத களஆய்வு என விசா அனுமதி பெறுவதை மிகவும் கடுமையாக்கினார்.

இரண்டாவது முறையாக போட்டியிடுவதற்கு ஆறேழு மாதங்களுக்கு முன்பாக, சட்டபூர்வமற்றமுறையில் பெற்றோருடன் குடியேறிய குழந்தைகளுக்கு அனுமதி வழங்கும் DACA என்ற சட்டத்தை இயற்றினார்.

அதன் மூலம் அவருடைய மறுதேர்தல் வெற்றி எளிதானது. முற்பகுதியில் குடியுரிமை சட்டம் அமலாக்கத்தில் மிகவும்கடுமையாக நடந்து கொண்டால் கூட அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அது குறித்து அவர் எதிர்மறையாக பேசியதே இல்லை

ஒபாமா வழிதான் ட்ரம்ப் வழியும்

அதிபர் ட்ரம்பும் , ஒபாமவைப் போல் , ஆட்சியின் தொடக்கத்தில் கடுமையாக நடந்து கொள்கிறார். அவர் தேர்தலில் சொல்லி வாக்கு பெற்றதைத் தான் செய்கிறார்.

ஆனாலும் அவரால் பேசாமல் இருக்க முடியவில்லை. ட்விட்டரில் எழுதாமலும் இருக்க முடியவில்லை. மீடியாக்களுக்கு சரியான தீனியாக அவரது கருத்துக்கள் அமைந்து விடுகிறது.

மீடியாவில் சொல்வதைப் போல் எல்லாம் மோசமான நிலை இல்லை. ஒபாமாவைப் போல் ட்ரம்பும் சட்டத்திற்கு உட்பட்டுத் தான் செயல்பட முடியும்.

மெக்சிகோவுக்கு இடையே சுவர் கட்டுவேன் என்கிறார். ஏற்கனவே மெக்சிகோ பார்டரில் கம்பி தடுப்பு, சுவர்கள் இருக்கின்றன. பார்டர் செக்யூரிட்டியினரின் சேவை சிறப்பாகவே இருக்கிறது.

சுவர் என்பது வெறும் அடையாளமாகத் தான் இருக்குமே ஒழிய, அதனால் எந்த பெரிய மாற்றமும் ஏறபடப் போவதில்லை.

சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய ஒருத்தரை நாடுகடத்த வேண்டுமென்றால், கிட்டத்தட்ட 12 ஆயிரத்து ஐநூறு டாலர்கள் தேவைப்படும்.மேலும் குடியுரிமை நீதிமன்றத்தில் வழக்கு முடிந்து தீர்ப்பு வருவதற்குள் 3 வருடங்கள் கூட ஆகலாம்.

வழக்கு முடிந்து தீர்ப்பு வந்த பிறகு தான் வெளியேற்ற முடியும். சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்கள் அனைவரையும் வெளியேற்ற வேண்டுமென்றால், கூடுதல் நீதிமன்றம், நீதிபதிகள் வேண்டும். அதெல்லாம் நடைமுறை சாத்தியம் இல்லாதது ஆகும்.

சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய குற்றவாளிகளை, அமெரிக்காவில் குற்றம் செய்பவர்களை நாடு கடத்துவதில் ஒபாமாவுக்கும் ட்ரம்புக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. முந்தைய அதிபர்கள் புஷ்ஷும், க்ளிண்டனும் கூட இதே அணுகுமுறையைத் தான் பின்பற்றினார்கள்.

ஆகவே ட்ரம்பின் ஆட்சியில் குடியுரிமை விவகாரத்தைப் பொறுத்தவரை தலைகீழான மாற்றங்கள் ஏதும் இல்லை. ஆறு நாடுகள் தடை கூட, ஏற்கனவே ஒபாமா ஆட்சியில் அமலில் இருந்ததை ஒட்டியே விதிக்கப்பட்டுள்ளது

ட்ரம்பின் அதிகமான பேச்சுக்களும் அவை மீடியாவில் வெளியாகும் விதமும், நிஜத்தை வேறுவிதமாக பிரதிபலிக்கின்றன.

நாட்கள் செல்லச் செல்ல, ட்ரம்பும் ,ஒபாமாவின் பிந்தைய காலத்தைப் போல் மென்மையான போக்கை கடைப்பிடிப்பார் என்று எதிர்ப்பார்க்கலாம் என்று கூறினார்.

முறையான அனுமதியுடன் விசா, உரிய நிறுவனத்தில் வேலை மற்றும் எந்த குற்ற பின்னணியும் இல்லாதவர்களுக்கு, அமெரிக்காவிற்குள் வரும் போது எந்த சிக்கலும் ஏற்பட வாய்ப்பில்லை, கவலைப் பட தேவையில்லை என்றும் கூறினார்.

நிகழ்ச்சியில் அருண் வரவேற்புரை ஆற்றினார். புரவலர் பால்பாண்டியன்கேரிக்கு நினைவுப்பரிசை வழங்கினார். மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்க தலைவர் கால்டுவெல் நன்றியுரை கூறினார். கிருஷ்ணராஜ் தொகுத்து வழங்கினார்.

 

Published in உலகம்
பக்கம் 1 / 7
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…