JoomlaLock.com All4Share.net

Background Video

காஞ்சிபுரம் வேகவதி ஆற்றின் குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

குட்டை நீரில் மூழ்கி சிறுவர்கள் தாமு, சிவா ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

Published in தமிழகம்

நெல்லை மேக்கரை கிராமத்தில் 10க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதில் 5 பேருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே குடிநீர் குழாய் உடைப்பால் தேங்கிய தண்ணீர் காரணமாகவே அக்கிரமத்தில் காய்ச்சல் பரவுவதாக மக்கள் புகார் செய்துள்ளனர்.

Published in தமிழகம்

மதுரை அருகே காஞ்சாரம்பேட்டையில் குளத்தில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த சிறுவர்களான திவாகர் மற்றும் குணால் இருவரும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் ஆவர். 

Published in தமிழகம்
வெள்ளிக்கிழமை, 10 ஜூன் 2016 00:00

குழந்தைகளுக்கான அளவு உணவு அறிமுகம்

ரயில் பயணத்தின் போது சாப்பிடுவதற்கு குழந்தைகளுக்கான 5 வகை உணவுகள் எழும்பூர் ரயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே அதிகாரி கூறுகையில், குழந்தைகள் எந்த அளவுக்கு சாப்பிடுவார்கள் என்று கணக்கிட்டு அந்த அளவுக்கான உணவு வகைகளை நாங்கள் தேர்ந்தெடுத்து பட்டியலிட்டு இருக்கிறோம். இதில் மினி ஊத்தப்பம் மற்றும் 100 மி.லி. ஜூஸ் சேர்ந்து ரூ.55-க்கும், மினி இட்லி (5 எண்ணிக்கை) மற்றும் 100 மி.லி. ஜூஸ் சேர்ந்து ரூ.60-க்கும், 1 பூரி, 1 இட்லி, ஐஸ் கிரீம் ஆகியவை சேர்ந்து ரூ.65-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இந்த 3 உணவு வகைகள் காலையில் கிடைக்கும். இதேபோல், 100 கிராம் நூடுல்ஸ், டிரை செய்யப்பட்ட காலிபிளவர் 100 கிராம், 100 மி.லி. ஜூஸ் சேர்ந்து ரூ.100-க்கும், 100 கிராம் பிரைடு ரைஸ், டிரை செய்யப்பட்ட காலிபிளவர் 100 கிராம், 100 மி.லி. ஜூஸ் சேர்ந்து ரூ.90-க்கும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த உணவு வகைகள் டிக்கெட் 'புக்கிங்' செய்யும்போதே இதையும் சேர்த்து 'புக்கிங்' செய்ய ஏதுவான வசதிகளை ஐ.ஆர்.சி.டி.சி. செய்து வருகிறது. விரைவில் அதை நடைமுறைக்கு கொண்டு வந்துவிடுவோம்.முதல்கட்டமாக தற்போது எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள புட் பிளாசாவில் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல், முக்கிய ரயில் நிலையங்களில் இந்த உணவு வகைகளை ரயில் பயணிகள் பெறுவதற்கு ஏதுவாக திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளார்.

Published in தமிழகம்

அகில இந்திய அளவில் நடத்தப்படும் தேசிய நீச்சல் போட்டிக்கான தமிழ்நாட்டு அணிக்கு ஈழத்தமிழ் சிறுமி தனுஜா ஜெயக்குமார் தேர்வாகியுள்ளார்.

தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் தமிழ்நாட்டு அணி சார்பில் பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்யும் தகுதிச்சுற்று போட்டிகள் சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது.

தமிழ்நாட்டுஅணித் தேர்வுக்காக கடந்த 3,4,5 ஆகிய நாட்களில் நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டிகளில் Sub-Junior பிரிவில் நடைபெற்ற நீச்சல் போட்டிகளில் திருச்சி SRM அணிசார்பில் கலந்து கொண்ட ஈழத்தமிழ் சிறுமி தனுஜா ஜெயக்குமார் இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலப்பதக்கங்களை வென்று தேசிய அளவிலான போட்டிக்கான அணியில் தேர்வாகியுள்ளார்.

100 மீட்டர் Freestyle பிரிவு நீச்சல் போட்டியில் குறித்த தூரத்தை 1:18.69 நேரத்திலும், 50 மீட்டர் Back Stroke பிரிவில் குறித்த தூரத்தை 0:41.90 நேரத்திலும் கடந்து இரண்டாவதாக வந்து இரண்டு வெள்ளிப்பதக்கங்களையும், 50 மீட்டர் Freestyle பிரிவில் குறித்த தூரத்தை 0:34.66 நேரத்தில் கடந்து மூன்றாவதாக வந்து வெண்கலப்பதக்கத்தையும் வென்றுள்ளார்.

இதன் மூலம் தமிழ்நாட்டு அணிசார்பிலான Sub-Junior பிரிவில் 50 மீட்டர் Back Stroke, 100 மீட்டர் Freestyle ஆகிய தனிநபர் பிரிவு நீச்சல் போட்டிகளுக்கும் 50x4 மீட்டர் Freestyle தொடர்நீச்சல் பிரிவு போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார் தனுஜா.

இலங்கை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்டு தற்போது தமிழ்நாட்டில் வசித்துவரும் ஈழத்தமிழ் சிறுமி தனுஜா தனது அபார நீச்சல் திறமையினாலும் கடுமையான பயிற்சியினாலும் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

சொந்த நாட்டில் இனப்பகையை முன்னிறுத்தி தமிழர்களுக்கான வாய்ப்புகள் அனைத்து துறைகளிலும் சிங்கள அரசால் திட்டமிட்டே மறுக்கப்பட்டு வரும் நிலையில் புலம்பெயர்நாடுகளில் வாழ்ந்துவரும் ஈழத்தமிழர்கள் தமது திறமையினாலும் விடாமுயற்சியினாலும் வெற்றிவாகை சூடி தமிழீழ தேசத்திற்கும் மக்களுக்கும் பெருமையினை தேடித்தந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்தவகையில் தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள தனுஜாவின் தொடர் வெற்றிகளும் எமது தேசத்திற்கும் மக்களுக்கும் பெருமை சேர்க்கிறது.

தமிழ்நாட்டில் உள் அரசியல் தலையீடுகள் மூலம் திறமையும் தகுதியும் இருந்தும் முக்கிய போட்டிகளில் பங்கேற்க முடியாத துயரம் தோய்ந்த வரலாறு விளையாட்டு துறையையும் விட்டுவைக்கவில்லை. அவற்றையெல்லாம் தனது திறமையின் மூலம் தகர்த்தெறிந்து வெற்றிகளை குவித்து வரும் தனுஜா தேசிய அளவிலான போட்டிகளிலும் வெற்றிபெற வாழ்த்துவோம்.

அகில இந்திய அளவிலான நீச்சல் போட்டிகள் இம்மாத இறுதியில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பக்கம் 1 / 2
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…