JoomlaLock.com All4Share.net

Background Video

வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2016 00:00

ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு...

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (சி.டி.இ.டி.) ஜூலை 18-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேருவதற்கு "சி-டெட்" எனப் படும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வை மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆண்டுக்கு இரண்டு முறை (பிப்ரவரி, செப் டம்பர்) நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான சி-டெட் தகுதித் தேர்வு செப்டம்பர் 18-ம் தேதி நடத்தப்பட இருக்கிறது. இதற்கு இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும், பி.எட். பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா, நவோதயா, அரசு உதவி பெறும் பள்ளிகள், மத்திய திபெத்திய பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேருவதற்கு "சி.டி.இ.டி" எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.

இரண்டு தாள்கள் கொண்ட இந்த தேர்வில், ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை மட்டும் ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் தாள்-1 இல் மட்டும் பங்கேற்றால் போதுமானது. 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை மட்டும் ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் தாள்-2 இல் பங்கேற்றால் போதுமானது. இரண்டு நிலைகளிலும் பாடம் நடத்த விரும்புபவர்கள் இரண்டு தாள்களும் எழுத வேண்டும்.

செப்டம்பர் 18-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 12 மணி வரையிலும் தாள்-2 தேர்வும், பிற்பகல் 2 மணி முதல் 4.30 மணி வரை தாள்-1 தேர்வும் நடத்தப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: www.ctet.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தேர்வறை அனுமதிச் சீட்டை ஆகஸ்ட் 17-இல் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ஒரு தாள் மட்டும் எழுதும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600-ம் இரண்டையும் எழுதுபவர்களுக்கு ரூ.1000-ம், எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் ஒரு தாள் மட்டும் எழுத ரூ. 300-ம், இரண்டு தாள்களையும் எழுத ரூ.500-ம் செலுத்த வேண்டும்.

மேலும் கூடுதல் விவரங்கள் அறிய www.ctet.nic.in இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

மேலும் 500 டாஸ்மாக் கடைகளை 2 மாதத்திற்குள் மூட தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகம் முழுவதும் அண்மையில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில் மேலும் 500 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. பள்ளி, கல்லூரி மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என சட்டப் பஞ்சாயத்து இயக்கம் வலியுறுத்தியுள்ளது. பள்ளி, கல்லூரி, கோயில்களின் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என எதிர்பார்த்த நிலையில் வருமானம் குறைவாக உள்ள டாஸ்மாக் கடைகள் கணக்கெடுக்கப்பட்டு மூடப்பட்டன. இதில் பணியாற்றி வந்த சுமார் 2000 ஊழியர்களுக்கு மாற்றுப் பணி இன்னும் வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. ஆனால் 90 சதவீதம் பேருக்கு பணி வழங்கப்பட்டவிட்டதாகவும், எஞ்சியவர்களுக்கும் விரைவில் மாற்றுப் பணி வழங்கப்பட்டுவிடும் என டாஸ்மாக் அதிகாரிகள் கூறியுள்ளனர்

Published in தமிழகம்

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் சேர மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

தமிழகத்தில் 20 அரசு கல்லூரிகள் மற்றும் 6 சுயநிதி மருத்துவ கல்லூரிகள் உள்ளன.

அரசு கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு 2 ஆயிரத்து 650 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் அகில இந்திய ஒதுக்கீடு 15 சதவீதம் போக, 2 ஆயிரத்து 253 இடங்கள் மாநில ஒதுக்கீட்டுக்கு உள்ளன.

6 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 760 இடங்கள் உள்ளன. இவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 290.

அரசு ஒதுக்கீட்டுக்கு 470 இடங்கள் உள்ளன.

மேலும் 2 இ.எஸ்.ஐ.கல்லூரிகளில் படிக்க 200 இடங்கள் இருக்கின்றன. அவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 70 ஆகும். அந்த இடங்கள் தவிர அரசு ஒதுக்கீட்டாக 130 இடங்கள் உள்ளன.

ஆக, 28 கல்லூரிகளில் 3 ஆயிரத்து 610 இடங்கள் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டாக மொத்தம் 757 இடங்கள் இருக்கின்றன. தமிழக ஒதுக்கீட்டாக 2 ஆயிரத்து 853 இடங்கள் இருக்கின்றன.

அரசு பல் மருத்துவக்கல்லூரி ஒன்று உள்ளது. அதில் 100 இடங்கள். அகில இந்திய ஒதுக்கீடு 15 போக, மீதம் உள்ள 85 இடங்கள் மாநில ஒதுக்கீட்டுக்கு வந்துள்ளது.

சுயநிதி பல் மருத்துவக்கல்லூரிகள் 17 உள்ளன. அந்த கல்லூரிகளில் மொத்தம் 1,610 பல் மருத்துவ இடங்கள் உள்ளன. அவற்றில் அகில இந்திய மருத்துவ இடங்கள் 640.மீதம் உள்ள இடங்கள் 970. இந்த இடங்கள் மாநில ஒதுக்கீட்டுக்கு வந்துள்ளன.

மருத்துவக் கல்லூரி தரவரிசைப் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது. முதல் கட்ட கலந்தாய்வு இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறுகிறது.

இன்று விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கும், முன்னாள் ராணுவத்தினர் முதலிய ஒதுக்கீட்டுக்கும், உடல் ஊனமுற்றோருக்கும் கலந்தாய்வு தொடங்குகிறது.

பிரிட்டனைச் சேர்ந்த "க்யூஎஸ்' என்ற தனியார் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஆசிய கண்டத்தில் உள்ள சிறந்த 50 பல்கலைக்கழங்கங்களின் தரவரிசைப் பட்டியலில் 4 ஐஐடி.க்கள் உள்பட 5 இந்திய உயர் கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.

பிரிட்டனில் உயர் கல்வி குறித்த ஆலோசனைகளை மாணவர்களுக்கு அளித்துவரும் "க்யூஎஸ்' என்ற நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழங்களை ஆண்டுதோறும் தரவரிசைப்படுத்தி வருகிறது.

அதன்படி, நிகழாண்டு தரவரிசைப்படுத்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் பட்டியலை "டாப்யுனிவர்சிடீஸ்.காம்' என்ற தனது இணையதளத்தில் "க்யூஎஸ்' நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில், ஆசிய கண்டத்தில் சிறந்த 50 பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் (ஐஐஎஸ்) 33ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இப்பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு 34ஆவது இடத்தில் இருந்தது.

மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) 35ஆவது இடத்தையும், தில்லி ஐஐடி 36ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

மெட்ராஸ் ஐஐடி 43 ஆவது இடத்திலும், கான்பூர் ஐஐடி 48ஆவது இடத்திலும் உள்ளன.

இந்தப் பட்டியலில் கடந்த ஆண்டை போல், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் முதலிடத்தையும், சீனாவின் ஹாங் காங் பல்கலைக்கழகம் 2-ஆவது இடைத்தையும் பிடித்துள்ளது.

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 2016-17ம் கல்வியாண்டில் உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகள் வேளாண்மை பட்டப்படிப்பில் 2,600 இடங்கள் உள்ளன. ஒற்றை சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியுடன் முடிந்தது. மொத்தம் 39,872 பேர் பதிவு செய்தனர். இதில் 36,280 பேர் விண்ணப்பங்கள் முழுமையாக பூர்த்தி செய்து, உரிய கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. இவர்களது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் இன்று முதல் தயார் செய்யப்படுகிறது. தரவரிசை பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படுகிறது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடக்கிறது.

பக்கம் 1 / 2
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…