JoomlaLock.com All4Share.net

Background Video

நெல்லை மேக்கரை கிராமத்தில் 10க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதில் 5 பேருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே குடிநீர் குழாய் உடைப்பால் தேங்கிய தண்ணீர் காரணமாகவே அக்கிரமத்தில் காய்ச்சல் பரவுவதாக மக்கள் புகார் செய்துள்ளனர்.

Published in தமிழகம்

சென்னை அபிராமபுரத்தில் மருத்துவர் வீட்டில் 100 சவரன் நகைகள் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

பிரபல இதய மருத்துவ நிபுணர் மேத்யூ சாமுவேல் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். 

Published in தமிழகம்
சனிக்கிழமை, 11 ஜூன் 2016 00:00

மாணவிக்கு நிதியுதவி

புதுப்பட்டினம் மருத்துவக் கல்லூரி மாணவிக்கு சென்னை அணுமின் நிலையம் கல்வி கட்டணம் வழங்கியுள்ளது.

கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா. இவர் 2013-14-ம் ஆண்டு கல்பாக்கம் அணுசக்திதுறை மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து தேர்ச்சி பெற்றார். அவருக்கு சென்னை மருத்துவ கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்து.

ஏழை குடும்ப மாணவியான அவரின் கல்வி கட்டணச் செலவை அணு மின் நிர்வாகம் ஏற்றது. இதற்காக முதலாம் ஆண்டில் ரூ.50 ஆயிரமும், இரண்டாம் ஆண்டில் ரூ.71000 வழங்கியது. நடப்பு ஆண்டு கட்டணமாக ரூ.48 ஆயிரத்து 900-ஐ அணுமின் நிலைய நிர்வாகம் வழங்கியுள்ளது.

செவ்வாய்க்கிழமை, 24 மே 2016 00:00

மலர் டீச்சர் இனி 'டாக்டர்'!

பிரேமம் பட புகழ் நடிகை சாய் பல்லவி தற்போது தனது மருத்துவ படிப்பை முடித்து மருத்துவராகியுள்ளார்.

பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மலையாள ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ் ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் சாய் பல்லவி. மலையாளத்தில் இருந்து வந்த பல நடிகைகள் தமிழில் முன்னணி நாயகிகளாக வலம் வந்து கொண்டிருக்க, தமிழகத்தில் இருந்து போய் மலையாள ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறவர் இவர்.

பிரேமம் பட வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் சாய் பல்லவி நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜார்ஜியாவில் மருத்துவம் படிக்க பறந்தார் சாய் பல்லவி.

 

மணிரத்னம் படம்..

தனது படிப்பிற்கு இடையே மலையாளத்தில் களி படத்தில் நடித்தார் சாய் பல்லவி. பின்னர் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமாக இருக்கிறார் என்று கூறப்பட்டது.

கதையில் மாறுதல்...

ஆனால், கதையில் ஏற்பட்ட சில மாறுதல்களால் மணிரத்னம் படத்தில் இருந்து விலகினார் சாய் பல்லவி. இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் உரிய விளக்கமும் அவர் அளித்திருந்தார்.

மருத்துவரானார்...

இந்நிலையில், தற்போது தனது மருத்துவ படிப்பை முடித்து மருத்துவராகி இருக்கிறார் சாய்பல்லவி. இத்தகவலையும் தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

விரைவில் தமிழ்...

இதனால், மலர் டீச்சர் இல்லையில்லை, டாக்டர் சாய்பல்லவி இனி படங்களில் நடிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டுவார், விரைவில் தமிழில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published in சினிமா

லாஸ் ஏஞ்சல்ஸ்: 12 வயதுக்குள் 3 பட்டங்கள் பெற்று சாதனைபடைத்துள்ள சிறுவன், தனது 18 வயதில் டாக்டராக விருப்பம் தெரிவித்து உள்ளார்.பிறப்பிலேயே அசாத்திய திறமைகளை பெற்று ஒருசிலர் அதிபுத்திசாலியாக விளங்குவர். அந்த வரிசையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்துக்கு உட்பட்ட சக்ரமென்டோவில் வசித்து வரும் தனிஷ்க் ஆபிரகாம் என்ற 12 வயது சிறுவன் இடம் பிடித்துள்ளார். 12 வயதில் பல பட்டப் படிப்புகளை முடித்துள்ள தனிஷ்க் ஆபிரகாம், 18 வயதில் மருத்துவர் ஆவதே எனது லட்சியம் என்கிறார். பிஜு ஆபிரகாம்-தஜி ஆபிரகாம் என்ற சிறுவனின் பெற்றோர், கேரளாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து அங்கேயே செல்டில் ஆனவர்கள்.

தனிஷ்க் ஆபிரகாம் குழந்தையாக இருந்த போதே, மிகுந்த அறிவு மற்றும் திறமையுடன் இருந்ததால் அவரது பெற்றோர், அமெரிக்காவின் சிறந்த கல்விமான்களை உறுப்பினர்களாக கொண்ட மிக முக்கிய திறன் மையமான 'மென்சா'வில் 4 வயதிலேயே அவரை சேர்த்து விட்டனர். ஆபிரகாமுக்கு 7 வயது முடிவடைவதற்குள், வீட்டிலேயே பள்ளிக்கல்வியை கற்பித்து விட்டனர். இதனால் அவர், 2014-ம் ஆண்டு அதாவது, தனது 10-வது வயதிலேயே மாநில தேர்வு எழுதி உயர்நிலைப் பள்ளி டிப்ளமோவுக்கு இணையான பட்டம் பெற்று விட்டார்.தனிஷ்க் தனது 7 வயதிலே கல்லூரியில் சேர்ந்து படிக்க துவங்கினார். ஆம்பிரகாமின் வயது காரணமாக பேராசிரியர்கள், வகுப்பில் சேர்க்கவில்லை. கால்நடை மருத்துவரான அவனது அம்மாவுடன் வகுப்புக்கு வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் வகுப்பில் சேர்த்துக் கொண்டார்கள். மேலும் வகுப்பில் பல்வேறு வகையான வித்தியாசமான கேள்விகளை தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருப்பார் என்று ஆபிரகாமின் பேராசியர்கள் தெரிவிக்கிறார்கள்.அதன்பின், ரிவர் கல்லூரியில் பொது அறிவியல், கணிதம், இயற்பியல் மற்றும் வெளிநாட்டு மொழிக்கல்வி ஆகிய 3 பாடத்திலும் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவில், 11 வயதிலேயே பட்டதாரியான தனிஷ்க்கின் அபார சாதனை ஜனாதிபதி ஒபாமாவின் கவனத்தை ஈர்த்தது. இதைத்தொடர்ந்து அவர் தனிஷ்க்குக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து கடிதம் அனுப்பி இருக்கிறார்.தற்போது தனிஷ்க் மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பித்து உள்ளார். அவருக்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் டேவிஸ் மற்றும் சாந்தா குரூஸ் கிளைகளில் சேர்ந்து படிக்க அழைப்பு வந்துள்ளது. எதில் சேர்ந்து படிப்பது என்று இன்னும் தனிஷ்க் முடிவு செய்யவில்லையாம். இந்நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள தனிஷ்க், ''என்னுடைய 18-வது வயதில் நான் எம்.டி. (மருத்துவம்) படிப்பை நிறைவு செய்து டாக்டராவேன் என நினைக்கிறேன்.நானும் சாதாரண குழந்தைகளை போலத்தான் வீடியோ கேம் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுவேன். ஆனால், எதையாவது கற்றுக்கொள்ள விரும்புவேன். நான் சிறுவன் என்பதால், கல்லூரியில் நிறைய பேராசிரியர்கள் என்னை தங்கள் வகுப்பில் சேர்க்க விரும்பவில்லை. எதிர்காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஆக விரும்புகிறேன்" என்று கூறி உள்ளார்.

- ரூபாவதி

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…