JoomlaLock.com All4Share.net

Background Video

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், புதிய கல்வி கொள்கையை வகுத்துள்ளது. பொதுமக்களின் கருத்துகளை அறிவதற்காக, அக்கொள்கையின் முக்கிய அம்சங்களை தனது இணையதளத்தில் நேற்று வெளியிட்டது.அதில், தற்போது, 8-ம் வகுப்புவரை அனைத்து மாணவர்களையும் கட்டாயமாக தேர்ச்சி பெறச் செய்வதை மாற்றி, 5 ம் வகுப்புவரை மட்டுமே 'ஆல் பாஸ்' திட்டம் பின்பற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், 8-ம் வகுப்புவரை அனைவரையும் தேர்ச்சி பெறச் செய்வதால் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படுவதால், இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது. அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தாங்கள் விரும்பினால், 5ம் வகுப்புவரை தாய் மொழி அல்லது பிராந்திய மொழியை பயிற்று மொழியாக கொண்டு, பாடங்களை கற்பிக்கலாம். அப்படி செய்தால், இரண்டாவது மொழி ஆங்கிலமாக இருக்கும். மூன்றாவது மொழியை, அரசியல் சட்டத்துக்குட்பட்டு, மாநில அரசு தேர்வு செய்யலாம். பள்ளி, பல்கலைக்கழக அளவில் சமஸ்கிருதம் கற்பிப்பதற்கான வாய்ப்பு பரவலாக்கப்படும்.அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கும் கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்த பரிசீலிக்கப்படும். கல்வித்துறையில் முதலீடு அதிகரிக்கப்படும். வெளிநாட்டு முன்னணி பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் அமைய ஊக்குவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வந்த பின், மாணவர்கள் அவரவர் மதிப்பெண் அடிப்படையில், பிளஸ் 1 வகுப்புகளில் சேர்ந்துள்ளனர். இதில், தனியார் பள்ளிகள் முன்கூட்டியே நுழைவுத் தேர்வு நடத்தி, 10ம் வகுப்பு தேர்வு முடிவு வந்ததும், மதிப்பெண் அடிப்படையில், வேகமாக பிளஸ் 1 சேர்க்கையை முடித்து விட்டன. ஜூன், 6ம் தேதி முதலே தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்புகள் துவங்கி விட்டன. இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அதிகாரப்பூர்வமாக, இன்று முதல் வகுப்புகள் துவங்குகின்றன.

பிரிட்டனைச் சேர்ந்த "க்யூஎஸ்' என்ற தனியார் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஆசிய கண்டத்தில் உள்ள சிறந்த 50 பல்கலைக்கழங்கங்களின் தரவரிசைப் பட்டியலில் 4 ஐஐடி.க்கள் உள்பட 5 இந்திய உயர் கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.

பிரிட்டனில் உயர் கல்வி குறித்த ஆலோசனைகளை மாணவர்களுக்கு அளித்துவரும் "க்யூஎஸ்' என்ற நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழங்களை ஆண்டுதோறும் தரவரிசைப்படுத்தி வருகிறது.

அதன்படி, நிகழாண்டு தரவரிசைப்படுத்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் பட்டியலை "டாப்யுனிவர்சிடீஸ்.காம்' என்ற தனது இணையதளத்தில் "க்யூஎஸ்' நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில், ஆசிய கண்டத்தில் சிறந்த 50 பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் (ஐஐஎஸ்) 33ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இப்பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு 34ஆவது இடத்தில் இருந்தது.

மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) 35ஆவது இடத்தையும், தில்லி ஐஐடி 36ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

மெட்ராஸ் ஐஐடி 43 ஆவது இடத்திலும், கான்பூர் ஐஐடி 48ஆவது இடத்திலும் உள்ளன.

இந்தப் பட்டியலில் கடந்த ஆண்டை போல், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் முதலிடத்தையும், சீனாவின் ஹாங் காங் பல்கலைக்கழகம் 2-ஆவது இடைத்தையும் பிடித்துள்ளது.

பத்தாம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜூன் மற்றும் ஜூலை 2016-யில் நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வெழுத விண்ணப்பிக்க தவறி மாணவர்கள், தட்கல் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள் தங்களது மாவட்டத்திற்குரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஜூன் 13 மற்றும் ஜூன் 14 ஆகிய தேதிகளில் பதிவு செய்து கொள்ளலாம்.

மார்ச் 2016 பத்தாம் வகுப்பு தேர்வெழுதியவர்கள் தமது தற்காலிக மதிப்பெண் சான்றிதழின் நகலினையும், தேர்வெழுதாதவர்கள் (Absentees) தமது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டையும் விண்ணப்பத்தினை பதிவு செய்யும் அலுவலரிடம் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணமாக ரூ.125/-ம், சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.500/-ம், ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50/-ம் என மொத்தம் ரூ.675/- வசூலிக்கப்படுகிறது. தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் குறித்து பின்னர் அறிவுக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தேர்வு நடைபெற்று முடிந்து ஓராண்டு ஆகியும் முடிவுகள் வெளியிடப்படாமல் உள்ள குரூப் 1 மெயின் தேர்வு முடிவு 17-ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5, 6, 7 ஆகிய தேதிகளில் துணை ஆட்சியர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், உதவி வணிக வரித்துறை ஆணையர்கள், மாவட்ட பதிவாளர்கள் உள்ளிட்ட 79 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 1 மெயின் தேர்வு நடைபெற்றது.

குரூப் 1 மெயின் தேர்வை எழுதுவதற்காக 4, 282 பேர் தகுதி பெற்றிருந்த நிலையில் 3,450 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். சென்னையில் மட்டும் 43 மையங்களில் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிந்து ஓராண்டு ஆகியும் முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், குரூப்-1 மெயின் தேர்வு முடிவு 17-ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 
பக்கம் 1 / 2
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…