JoomlaLock.com All4Share.net

Background Video

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே ஜூன் 20-ம் தேதி முதல் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது 10 ஆம் வகுப்பு கல்வித் தகுதியினை பதிவு செய்த வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை எண், ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களுடன் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று எடுத்து வர வேண்டும்.

மேலும் 10 ஆம் வகுப்பு கல்வித் தகுதியினை பதிவு செய்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் தெரியவில்லையெனில் வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ள வேண்டும்.

வேலைவாய்ப்பு பதிவுப்பணி ஜூன் 20 ஆம் தேதி முதல் ஜூலை 4-ம் தேதி வரை அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும்.

பதிவுப்பணி நடைபெறும் 15 நாட்களுக்கும் மதிப்பெண் சான்று வழங்க தொடங்கிய முதல் நாளையே பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும்.

மேலும் www.tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்புத் துறை இணையதளம் வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற வேலைவாய்ப்பு பதிவு செய்ய விரும்பும் அனைத்து மாணவர்களும் தவறாது இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

எய்ம்ஸ்( The All India Institute of Medical Sciences(AIIMS)) மருத்துவ நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த தேர்வு கடந்த மே 29ம் தேதி நடந்தது. இந்த தேர்வில் சாத்விக் ரெட்டி எர்லா முதலிடம் பிடித்துள்ளார். 1,89,357 மாணவர்கள் கலந்து கொண்ட இந்த தேர்வில் 7,137 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக எய்ம்ஸ் தேர்விற்கான துணை டீன் டாக்டர் அசோக் ஜர்யால் கூறியுள்ளார். மருத்துவ கவுன்சிலிங் ஜூலை 4ம் தேதி துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியானாவில் பள்ளி ஆசிரியர்கள் ஜீன்ஸ் அணிய அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். இது போன்ற உடை கட்டுப்பாடு ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. நகரப் பகுதிகளில் ஜீன்ஸ் போன்ற உடைகள் முறையாக அணியப்படுவதில்லை என அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரியானா அரசின் இந்த உத்தரவு ஆசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அரியானா மாநில அரசு பள்ளிகளில் பணிபுரியும் 50,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் 40 வயதிற்கும் குறைவானவர்கள். இவர்கள் பெரும்பாலும் ஜீன்ஸ் அணிந்தே பள்ளிக்கு வருகிறார்கள்.

சனிக்கிழமை, 11 ஜூன் 2016 00:00

மாணவிக்கு நிதியுதவி

புதுப்பட்டினம் மருத்துவக் கல்லூரி மாணவிக்கு சென்னை அணுமின் நிலையம் கல்வி கட்டணம் வழங்கியுள்ளது.

கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா. இவர் 2013-14-ம் ஆண்டு கல்பாக்கம் அணுசக்திதுறை மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து தேர்ச்சி பெற்றார். அவருக்கு சென்னை மருத்துவ கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்து.

ஏழை குடும்ப மாணவியான அவரின் கல்வி கட்டணச் செலவை அணு மின் நிர்வாகம் ஏற்றது. இதற்காக முதலாம் ஆண்டில் ரூ.50 ஆயிரமும், இரண்டாம் ஆண்டில் ரூ.71000 வழங்கியது. நடப்பு ஆண்டு கட்டணமாக ரூ.48 ஆயிரத்து 900-ஐ அணுமின் நிலைய நிர்வாகம் வழங்கியுள்ளது.

பணிபுரியும் தொடக்கப்பள்ளியில் கற்பித்தல் பயிற்சி எடுக்க பாரதிதாசன் பல்கலைகழக அனுமதி கடிதம்,guide teacher  அந்த பள்ளியில் பணிபுரியும் b.ed முடித்தவராக இருத்தல் வேண்டும்,இல்லையெனில்  .அருகாமை பள்ளியில் பணிபுரியும் b.ed முடித்த ஆசிரியரை கொண்டு கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளலாம்.

பக்கம் 1 / 2
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…