மருத்து நுழைவுத்தேர்வு அவசரச் சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
மருத்து நுழைவுத்தேர்வு அவசரச் சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்த மருத்துவ பொது நுழைவுத்தேர்வை இந்த ஓராண்டுக்கு மட்டும் நிறுத்தி வைக்கும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார். அதன்படி எம்.பி.பி.எஸ், பல் மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு இந்த ஆண்டு மட்டும் பொது நுழைவுத்தேர்வு கிடையாது. பிளஸ் -2 மார்க் அடிப்படையில் சேர்க்க மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடங்கியது.
எம்.பி.பி.எஸ், பல் மருத்துவ விண்ணப்பப் படிவங்கள் வினியோகம் இன்று தொடங்கி உள்ளது.
இந்நிலையில் மருத்து நுழைவுத்தேர்வு அவசரச் சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் வியாபம் ஊழலை வெளிக்கொண்டு வந்த ஆனந்த்ராய் என்பவர் அவசரச் சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து உள்ளார். இம்மனுவை விரைந்து விசாரிக்க அவரது தரப்பில் நாளை கோரிக்கை விடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.