JoomlaLock.com All4Share.net

Background Video

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% கூடுதல் இடஒதுக்கீடு அளித்து முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு 1 சதவீதமும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு ஒரு சதவீதமும் இடஒதுக்கீடு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

Published in தமிழகம்

மத்திய அரசின் வெற்றிக்கு கதைகளை தயாரிக்கும் தமிழக அரசின் செயல் மன்னிக்க முடியாத துரோகம் என திமுக செயல்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Published in அரசியல்

சேலம்

சேலம் அரசு மருத்துவமனை அருகே 2 அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பேருந்துகளின் கண்ணாடிகளை கல்வீசி உடைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Published in தமிழகம்

கடந்த சில நாட்களாக உயர்நீதிமன்ற ஆணைக்கிணங்க அனைத்து மதுபானக்கடைகளும் மூடப்பட்டு வந்தன.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே சின்னசேராம்பட்டுவில் மதுக்கடை மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். அனுமதியின்றி புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையில் மது பாட்டில்களை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். 

Published in தமிழகம்

இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் இயக்கப்படும் மருத்துவச் சேவைக்கான ஊர்திகளின் ஓட்டுநர்களைத் தேர்வு செய்யும் வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் வருகிற 11, 13 ஆகிய நாள்களில் காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

எழும்பூர் மாண்டியத் சாலையில் இயங்கி வரும் சங்க அலுவலகத்தில், தாய் சேய் பாதுகாப்பு ஊர்திக்கு 11-ஆம் தேதியும், இலவச அமரர் ஊர்திக்கு 13-ஆம் தேதியும் ஓட்டுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தகுதிகள்: எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, 25 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தது 3 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும். தகுதியுடையோர் அசல் சான்றிதழ்களுடன் முகாமில் நேரில் பங்கேற்கலாம். விவரங்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்தை 044-42147572 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

பக்கம் 1 / 3
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…