JoomlaLock.com All4Share.net

Background Video

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை குழுக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெற உள்ளது. மோடி தலைமையிலான ஆட்சி அமைத்து 2 ஆண்டுகœ முடிவடைந்துள்ள நிலையில், அமைச்சரவையில் இன்று மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை மாற்றத்தின் மூலம் புதிய அமைச்சர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தகவல் தெரியவந்துள்ளது.

Published in இந்தியா

சுவாதி கொலை வழக்கு தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் கி.கே ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது சுவாதி கொலைக்குற்றவாளி ராம்குமாரை கைது செய்தது எப்படி என்பது பற்றி அவர் விளக்கம் அளித்தார்.

Published in தமிழகம்

 

டில்லியில் 7 வது சம்பள கமிஷன் தொடர்பாக ஆலோசனை

 இந்த கூட்டத்தில் 7 வது சம்பள கமிஷன் கமிட்டி அளித்த அறிக்கை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சம்பள கமிஷன் பரிந்துரை குழுவின் கோரிக்கைகள் தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்காக இக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் 7 வது சம்பள கமிஷன் அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பு எந்த நேரமும் வெளியாகலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 7 வது சம்பள கமிஷன் அமல்படுத்தப்படுவதன் மூலம் சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 55 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைய உள்ளனர். 7 வது சம்பள கமிஷன் அமல்படுத்தபட்டால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் வெகுவாக உயரும். அவர்களின் வருமானம் அதிகரிக்கும் என்பதால் கார்கள் மற்றும் வீடு விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Published in இந்தியா

பொது இடத்தில் புகை பிடித்ததாக, 4,178 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு கூறியுள்ளது. மேலும் 3579 இடங்களில் பள்ளிக்கு அருகில் புகையிலை விற்பனை தடுக்கப்பட்டுள்ளது. அரசு எடுத்து வரும் நடவடிக்கை தொடரும் எனவும் கூறியுள்ளது. அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்யவும், மனுதாரர் தரப்பு கருத்தை பரிசீலனை செய்து அரசு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்ட ஐகோர்ட் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

Published in தமிழகம்

முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த அனுமதிக்க முடியாது. அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக தமிழகத்தின் கோரிக்கையை ஏற்க முடியாது. தேவைப்பட்டால் கோர்ட்டை நாடவும் கேரள அரசு தயாராக உள்ளது. புதிய அணை கட்டும் விவகாரத்தில் சர்வதேச குழு அமைக்க கேரள முயற்சி மேற்கொண்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

Published in இந்தியா
பக்கம் 2 / 3
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…