JoomlaLock.com All4Share.net

Background Video

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) கீழ் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் செயல்பட்டு வரும் சத்தீஷ் தவான் விண்வெளி மையத்தில் 2016-17-ஆம் ஆண்டிற்கான 53 டெக்னிசியன் பி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். SDSC SHAR/RMT/01/2016

மொத்த காலியிடங்கள்: 53

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பதவி: Technician-B

1. Carpenter - 1

2. Diesel Mechanic with HVD License - 01

3. Draughtsman -B - Civil - 02

4. Technician-B - Electrical - 03

5. Technician-B - Electronic Mechanic - 08

6. Technician-B - Fitter - 18

7. Technician-B - Machinist - 01

8. Technician-B - Plumber - 01

9. Technician-B - Pumb Operator Cum Mechanic - 02

10. Technician-B - Refigeration & Air Conditioning - 03

11. Technician-B - Turner - 01

12. Technician-B - Fitter - 01

13. Technician-B Fireman-A - 11

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பணி இடம்: ஆந்திர பிரேசம்

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 21.07.2016 தேதியின்படி 18 - 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.isro.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.07.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.sdsc.shar.gov.in/advt_01_2016.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களின் கவனம் தற்போது சோனியா மகள் பிரியங்கா மீது திரும்பியுள்ளது. அவர் தனது பாட்டி இந்திராவை போல் உருவெடுப்பார் எனவும் அவர்கள் கருதுகின்றனர்.

சோனியா, ராகுல் போட்டியிடும் ரேபரேலி மற்றும் அமேதி தொகுதியில் மட்டுமே இதுவரை பிரியங்கா பிரசாரம் செய்து வந்தார். உ.பி., சட்டசபைக்கு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில், தீவிர பிரசாரம் மேற்கொள்வதன் மூலம் தீவிர அரசியலில் களமிறங்க உள்ளார். சுமார் 150 பொதுக்கூட்டங்களில் பிரியங்கா பேச உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது வெளிநாடு சென்றுள்ள ராகுல் இந்தியா திரும்பியதும், இது தொடர்பான அறிவிப்பு வெளிவரும்.

பிரியங்காவின் பிரச்சாரம் காங்கிரசுக்கு கூடுதல் பலமாக தெரிந்தாலும், அவரது கணவர் ராபர்ட் வதேரா மீதான நில மோசடி உள்ளிட்ட வழக்குகள் குறித்து எதிர்க்கட்சிகள் தங்களது பிரச்சாரத்தில் எழுப்ப திட்டமிட்டுள்ளன.

Published in இந்தியா

ஜூலை 11ம் தேதி முதல் நடைபெற விருந்த ரயில்வே ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக எஸ்ஆர்எம்யு பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கண்ணையா, ஜூலை 11ம் தேதி முதல் நடைபெறவிருந்த ரயில்வே ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

ரயில்வே ஊழியர்களின் கோரிக்கைகளை போச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்க்கலாம் என மத்திய அரசு உறுதி அளித்ததால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ஒத்திவைப்பது என்று எஸ்ஆர்எம்யு முடிவு செய்துள்ளது என்று கூறினார்.

மேலும், ரயில்வே ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை உயர்த்தி தரவும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கண்ணையா கூறினார்.

ரயில்வே தனியார் மயமாக்கத்துக்கு எதிராக வேலை நிறுத்தம் நடைபெறவிருந்தது. இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு அமைச்சர்கள் குழுவோடு நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Published in தமிழகம்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு தேஜாஸ் விமானங்கள் இந்திய விமானப்படையில் இன்று இணைக்கப்படுகிறது. அதற்கான நிகழ்ச்சி இன்று பெங்களூருவில் நடைபெறவுள்ளது.

Published in இந்தியா

மும்பையின் ஜூகு பகுதியில் உள்ள மருந்து கடை ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் 8 பேர் பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த 5 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. காலை 5.15 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

கீழ் தளத்தில் உள்ள மருந்துக் கடையில் பிடித்த தீ வேகமாக மேல்தளத்தில் உள்ள குடியிருப்புகளுக்கும் பரவியது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Published in இந்தியா
பக்கம் 1 / 2
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…