JoomlaLock.com All4Share.net

Background Video

இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் இயக்கப்படும் மருத்துவச் சேவைக்கான ஊர்திகளின் ஓட்டுநர்களைத் தேர்வு செய்யும் வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் வருகிற 11, 13 ஆகிய நாள்களில் காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

எழும்பூர் மாண்டியத் சாலையில் இயங்கி வரும் சங்க அலுவலகத்தில், தாய் சேய் பாதுகாப்பு ஊர்திக்கு 11-ஆம் தேதியும், இலவச அமரர் ஊர்திக்கு 13-ஆம் தேதியும் ஓட்டுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தகுதிகள்: எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, 25 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தது 3 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும். தகுதியுடையோர் அசல் சான்றிதழ்களுடன் முகாமில் நேரில் பங்கேற்கலாம். விவரங்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்தை 044-42147572 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

7 வது சம்பள கமிஷன் பரிந்துரை அமல்படுத்தப்பட்டுள்ளதால், மத்திய அரசு ஊழியர்களின் ஆரம்ப நிலை சம்பளம் ரூ.7 ஆயிரத்திலிருந்து ரூ.13 ஆயிரமாக உயரும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. இதில் 7 வது சம்பள கமிஷன் பரிந்துரை அமல்படுத்துவது மற்றும் சில முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன் பின்னர் மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது: விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு தனியார் நிறுவன ஊழியர்களின் சம்பளத்தை ஈடு செய்யும் வகையில் மத்திய அரசு ஊழியர்கள் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. 7 வது சம்பள கமிஷன் பரிந்துரை 2016 ஜனவரி 1ம் தேதி முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும். ஓய்வூதியதாரர்களுக்கு சம்பள கமிஷன் அறிக்கை மகிழ்ச்சியை அளித்துள்ளது. சம்பள கமிஷன் பரிந்துரைகள் பெரும்பாலானவை ஏற்கப்பட்டுள்ளது. அலவன்ஸ் தொடர்பான பரிந்துரை தொடர்பாக ஆய்வு செய்ய செயலர் தலைமையிலான குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சம்பள கமிஷன் பரிந்துரையால் மத்திய அரசுக்கு ரூ.1.02 லட்சம் கோடி செலவு ஏற்படும். கமிஷன் பரிந்துரையால், 47 லட்சம் அரசு ஊழியர்கள், 43 லட்சம் பென்சன்தாரர்கள் பயன்பெறுவார்கள். மத்திய அரசு ஊழியர்களின் ஆரம்பநிலை சம்பளம் ரூ. 7 ஆயிரத்திலிருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் பிடித்தம் தொடர்பான பரிந்துரையை மத்திய அமைச்சரவை ஏற்கவில்லை. புவனேஸ்வர், காந்திநகர், ஐ தராபாத், இந்தூர், ஜோத்பூர், மாண்டி, பாட்னா, ரோபாரில் அமைய உள்ள ஐ.ஐ.டி.,க்களின் மறுமதிப்பீடு செலவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்றார்.

Published in இந்தியா

சென்னை பெண் என்ஜினீயர் சுவாதியை கொலை செய்த கொலைகாரனை நுங்கம்பாக்கம் ரெயில் நிலைய ‘கேன்டீன்’ ஊழியர் போலீசுக்கு அடையாளம் காட்டினார்.

கொலை நடந்தது எப்படி? என்பது பற்றி அவர் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.

தமிழகத்தை உலுக்கிய வழக்கு

கடந்த 24–ந் தேதி காலை 6.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி துடிக்க, துடிக்க வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தையே உலுக்கிவிட்டது.

சுவாதியை கொடூரமாக வெட்டி கொன்ற கொலைகாரனை போலீசார் இன்னும் பிடிக்கவில்லை. கண்காணிப்பு கேமராவில் பதிவான கொலைகாரன் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டனர். அந்த புகைப்படத்தில் இருப்பவன் தான், சுவாதியை கொலை செய்த கொலைகாரன் என்று அடையாளம் காணப்பட்டு உள்ளது.

twist-in-the-murder-of-female-engineer_SECVPF

கேன்டீன் ஊழியர்

நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் காலை நேரத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், கண்காணிப்பு கேமரா படத்தில் இருக்கும் கொலையாளியை அடையாளம் காட்டி உள்ளார்.

சுவாதி கொல்லப்பட்ட நுங்கம்பாக்கம் ரெயில் நிலைய 2–வது நடைமேடையில் ரெயில்வே கேன்டீன் உள்ளது. அன்றைய தினம் காலை வேளையில் இட்லி, தோசை விற்பனை ஆகிக்கொண்டு இருந்தது. சிலர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர்.

வியாபாரம் நடந்து கொண்டிருந்த அந்த நேரத்தில் தான், சுவாதி வெட்டி கொல்லப்பட்டார். இதை கேன்டீனில் இருந்த ஊழியர் ஒருவர் நேரில் பார்த்து உள்ளார். அதிர்ச்சியில் அவர் உறைந்து போய்விட்டார். பயத்தில் இதுகுறித்து பேசாமல் இருந்து வந்தார்.

swathimurder2

கண்கண்ட சாட்சி

இந்த நிலையில் போலீசார் அந்த ரெயில்வே கேன்டீனில் விசாரணை மேற்கொண்டபோது, கேன்டீன் ஊழியர்களிடம் கொலைகாரனின் புகைப்படத்தை காட்டினார்கள்.

அப்போது கொலை சம்பவத்தை நேரில் பார்த்த அந்த கேன்டீன் ஊழியர், சுவாதியை கொன்ற கொடூர கொலைகாரன் இவன் தான் என்று அடையாளம் காட்டினார். கொலைக்காட்சியை பற்றியும் அவர் போலீசாரிடம் விவரித்தார். இந்த வழக்கில் அவர் முக்கியமான கண்கண்ட சாட்சி ஆவார்.

கொலை சம்பவம் குறித்து அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–

வாக்குவாதம்

கொலைகாரனும், கொலை செய்யப்பட்ட அந்த பெண்ணும் சிறிது நேரம் கடை அருகே நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் என்ன பேசினார்கள்? என்பதை நான் கவனிக்கவில்லை. ஆனால் காரசாரமாக சிறிது நேரம் பேசினார்கள்.

திடீரென்று ‘அய்யோ… அம்மா…’ என்று குரல் கேட்டது. கொலைகாரன் பக்கவாட்டில் சற்று பின்பக்கமாக நின்று அந்த பெண்ணை அரிவாளால் வெட்டினான். உடனே அந்த பெண் ரத்தம் பீறிட்ட நிலையில் அருகில் இருந்த இருக்கையில் விழுந்தார். பின்னர் தரையில் சாய்ந்து விட்டார்.

Swathi_ENS

சிறிது நேரம் அவர் உயிருக்கு போராடியபடி இருந்தார். அதிர்ச்சியில் இருந்த எங்களால் அப்போது ஒன்றும் செய்யமுடியவில்லை. உடனே அந்த கொலைகாரன் மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டான். அதன்பிறகு ஓடிச்சென்று பார்த்தோம். அந்த பெண் அதற்குள் இறந்துவிட்டார்.

இவ்வாறு கேண்டீன் ஊழியர் தெரிவித்து உள்ளார்.

8 தனிப்படைகள்

இந்த படுகொலை சம்பவம் பற்றி சென்னை மாநகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எழும்பூர் ரெயில்வே போலீசார் முதற்கட்டமாக வழக்குப்பதிவு செய்திருந்தனர். தற்போது அந்த வழக்கு நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது. போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் நேரடியாக இந்த வழக்கை தினமும் ஆய்வு செய்துவருகிறார்.

கூடுதல் கமிஷனர் சங்கர், இணை கமிஷனர் மனோகரன், துணை கமிஷனர் பெருமாள் ஆகியோர் மேற்பார்வையில் உதவி கமிஷனர்கள் தேவராஜ், முத்துவேல்பாண்டி, கலிதீர்த்தான் ஆகியோர் தலைமையில் 8 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 8 தனிப்படை போலீசார் கொலையாளியை பிடிக்க களத்தில் இறக்கப்பட்டு உள்ளனர்.

கூடுதல் கமிஷனர் சங்கர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

சுவாதிக்கு மிரட்டல்

கண்காணிப்பு கேமரா புகைப்படத்தில் உள்ள வாலிபர் தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று சந்தேகித்தோம். தற்போது அவர்தான் கொலையாளி என்று உறுதிபட தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட சுவாதிக்கு, ஏற்கனவே மிரட்டல் இருந்துள்ளது. ஆனால் அவர் அதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்கவில்லை.

ஆனால் அவர் தனது பெற்றோர், நெருங்கிய தோழி மற்றும் தனது அக்காவிடம் இந்த மிரட்டல் குறித்து கண்டிப்பாக தெரிவித்திருக்க வேண்டும். துக்கத்தில் இருந்த சுவாதியின் பெற்றோரிடமும், தோழியிடமும், அக்காவிடமும் முதலில் இதுதொடர்பாக விசாரிக்க முடியவில்லை.

தற்போது தான் மெதுவாக விசாரணையை தொடங்கி உள்ளோம். தகவல்கள் கிடைத்தவண்ணம் உள்ளது.

கொலைகாரன் பற்றி ஏராளமான தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது. கொலைகாரன் தப்பமுடியாது. கொலைகாரன் பற்றி தகவல்களை நாங்கள் வெளிப்படையாக சொல்லமுடியாது. இந்த விவகாரம் சென்னை ஐகோர்ட்டு விசாரணையில் உள்ளதால், விசாரணை விவரங்களை ரகசியமாக வைத்துள்ளோம். கண்டிப்பாக கொலைகாரனை இன்னும் ஓரிரு நாட்களில் பிடித்து விடுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SWATHICANDLE

100 பேரிடம் விசாரணை

கொலை நடந்த தினமான கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து இதுவரை போலீசார் 100–க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

கொலைக்கு முக்கிய தடயமாக கொலையாளி பயன்படுத்திய அரிவாள் மட்டும் கிடைத்து உள்ளது. அரிவாளில் இருந்த கொலையாளி கைரேகை பதிவு செய்யப்பட்டு உள்ளது. சுவாதியின் கைப்பை கொலை நடந்த இடத்திலேயே கிடந்தது. அது கைப்பற்றப்பட்டு உள்ளது.

Published in தமிழகம்

மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் சார்பில், நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இதன்படி, தேசிய தலைநகர் வலயப் பகுதியான நொய்டாவில் ஜூலை 20-ஆம் தேதி முதலாவது வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக அந்த அமைச்சக வட்டாரங்கள் தில்லியில் கூறியதாவது:

வேலை தேடும் இளைஞர்களுக்கும், திறமையான பணியாளர்களை எதிர்பார்த்திருக்கும் நிறுவனங்களுக்கும் இடையே ஒரு பாலமாக இருந்து, தேசிய அளவில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நோக்கில் இந்த முகாமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 20-ஆம் தேதி நொய்டாவில் உள்ள தேசிய வேலைவாய்ப்பு சேவை மையத்தில் நடைபெறவுள்ள முதலாவது முகாமில், குறைந்தபட்சம் 50 தொழில் நிறுவனங்களும், 5,000 வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நொய்டாவை தொடர்ந்து பெங்களூரில் ஆகஸ்ட் மாதமும், உத்தரகண்ட் மாநிலம், ஜாஸ்பூர் மாவட்டத்தில் செப்டம்பர் மாதமும் இந்த முகாம் நடத்தப்படவுள்ளது.

மாநில, மாவட்ட அளவிலான அரசு வேலைவாய்ப்பு மையங்கள் நடத்தும் முகாம்களிலிருந்து தொழிலாளர் அமைச்சகம் நடத்தவுள்ள வேலைவாய்ப்பு முகாம்கள் பல வழிகளில் மாறுபட்டதாக இருக்கும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தேசிய வேலைவாய்ப்பு தினம்: இளைஞர்கள் மத்தியில் பல்வேறு துறைகள் சார்ந்த வேலைவாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் ஜூலை 20-ஆம் தேதி, தேசிய வேலைவாய்ப்பு தினம் கொண்டாடவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் மூடப்பட உள்ள டாஸ்மாக் கடை ஊழியர்கள் வேறு துறைக்கு மாற்றப்பட உள்ளனர். இதற்காக சீனியரிட்டி பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 2003ம் ஆண்டு நவம்பர் மாதம் தனியார் வசம் இருந்த டாஸ்மாக் கடைகள் டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள 6 ஆயிரத்து 500 டாஸ்மாக் கடைகளுக்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பட்டப்படிப்பு படித்தவர்கள் சூப்பர்வைசர்களாகவும், 10ம் வகுப்பு, பிளஸ் டூ படித்தவர்கள் விற்பனையாளர்களாகவும் சுமார் 32 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர்.

டாஸ்மாக் கடைகள் மூலம் கிடைத்த பல ஆயிரம் கோடி ரூபாயை வைத்து அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தன. முதலில் மதுவிலக்கு சாத்தியமில்லை என கூறி வந்த முதல்வர் ஜெயலலிதா பின்னர் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.

தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் முதல்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தெரிவித்தார். அதன்படி மாவட்டம் தோறும் பள்ளி, கல்லூரிகள், கோவில்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள கடைகள் முதல் கட்டமாக மூடப்படுகின்றன.

இந்நிலையில் மூடப்படும் கடைகளில் பணிபுரியும் 500 சூப்பர்வைசர்கள், 2 ஆயிரம் விற்பனையாளர்களை மற்ற துறைகளுக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி பட்டதாரிகள் ஆசிரியர்கள் பணியிடத்திற்கும், விற்பனையாளர்கள் வருவாய் துறை உள்ளிட்ட வேறு துறைக்கும் மாற்றம் செய்யப்பட உள்ளனர்.

இதற்காக சீனியாரிட்டி பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்டியல் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. இதை பார்த்து திருத்தம் செய்ய வேண்டியதிருப்பின் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மேலாளரை சந்தித்து திருத்தம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ஏற்கனவே

வேலையில்லாமல் அரசு போட்டி தேர்வை எதிர்கொண்டு வரும் பட்டதாரிகளும், பள்ளி இறுதி படிப்பை படித்தவர்களும் விரக்தியில் உள்ளனர்.

Published in தமிழகம்
பக்கம் 1 / 2
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…