JoomlaLock.com All4Share.net

Background Video

திங்கட்கிழமை, 05 ஜூன் 2017 00:00

ஜூன் 14ல் கூடுகிறது தமிழக சட்டசபை...!

தமிழக சட்டசபை கூட்டம் ஜூன் 14 ம் தேதி கூடுகிறது என சட்டசபை பொறுப்பு செயலாளர் பூபதி அறிவித்துள்ளார்.ஜூன் 14ம் தேதியன்று காலை 10 மணிக்கு கூடும் இக்கூட்டத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் நடந்த தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, பட்ஜெட் மீதான விவாதம் மட்டுமே நடந்தது. பின்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் காரணமாக கூட்டத்தொடர் முடித்து வைக்கப்பட்டது. இதனால் ஜூன் 14ம் தேதி கூடும் கூட்டத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கும் என கூறப்படுகிறது.சட்டசபை அலுவல் கூட்டத்திற்கு பிறகு இந்த கூட்டம் எத்தனை நாட்கள் நடக்கும் என முடிவு செய்யப்பட உள்ளது. அனேகமாக 30 முதல் 35 நாட்கள் வரை இக்கூட்டம் நடக்கலாம். இந்த கூட்டத்தின் போது நாள்தோறும் ஒவ்வொரு துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கும்.

Published in தமிழகம்

பத்தாம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜூன் மற்றும் ஜூலை 2016-யில் நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வெழுத விண்ணப்பிக்க தவறி மாணவர்கள், தட்கல் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள் தங்களது மாவட்டத்திற்குரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஜூன் 13 மற்றும் ஜூன் 14 ஆகிய தேதிகளில் பதிவு செய்து கொள்ளலாம்.

மார்ச் 2016 பத்தாம் வகுப்பு தேர்வெழுதியவர்கள் தமது தற்காலிக மதிப்பெண் சான்றிதழின் நகலினையும், தேர்வெழுதாதவர்கள் (Absentees) தமது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டையும் விண்ணப்பத்தினை பதிவு செய்யும் அலுவலரிடம் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணமாக ரூ.125/-ம், சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.500/-ம், ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50/-ம் என மொத்தம் ரூ.675/- வசூலிக்கப்படுகிறது. தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் குறித்து பின்னர் அறிவுக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…