JoomlaLock.com All4Share.net

Background Video

இன்றைய காலகட்டத்தில் தொலைபேசி இல்லாத நாட்களை நினைத்துக்கூட பார்க்க முடியாது.

ஒவ்வொருவரின் கைகளையும் அலங்கரித்துக் கொண்டிருக்கிறது, இந்த உன்னத சாதனத்தை உருவாக்கியவர் தான் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்.

கடந்த 1847ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் திகதி ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் என்னும் இடத்தில் பிறந்தார்.

சிறுவயதில் இருந்தே கல்வியில் ஆர்வம் காட்டி வந்தவர், படிப்பை முடித்துவிட்டு தன் தந்தையோடு காது கேளாதவர்களுக்கு பேசக் கற்றுக் கொடுத்தார்.

அவருடைய 23வது வயதில் காசநோய் ஏற்படவே, பெல்லின் உடல்நிலை கருதி அவரது குடும்பம் 1870ம் ஆண்டுகளில் கனடா நாட்டிற்கு குடிபெயர்ந்தது.

இதற்கு அடுத்த வருடம் பாஸ்டன் பல்கலைகழத்தில் பேராசிரியராக வேலைக்கு சேர்ந்தார்.

அறிவியல் ஆராய்ட்சிகளில் ஆர்வம் கொண்டிருந்த பெல் தனது ஓய்வு நேரங்களில் ஏதாவது சோதனை செய்துகொண்டே இருப்பார்.

காது கேளாதோருக்கும், வாய் பேச முடியாதோருக்கும் நிறைய செய்ய வேண்டும் என்ற அவரது உந்துதல்தான் தொலைபேசி என்ற உன்னத கருவியை கண்டுபிடிக்க அவருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது.

 

ஒருவர் பேசுவதை மின்சக்தி மூலம் இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்ல முடியுமா என்று ஆராயத் தொடங்கினார்.

தனது உதவியாளர் வாட்சன் என்பவருடன் சேர்ந்து பெல் சோதனைகளில் ஈடுபட்டார்.

பெல் வீட்டின் மேல் அறையிலும் வாட்சன் கீழ் அறையிலும் இருந்து கொண்டு கம்பிவழி ஒருவர் இன்னொருவருடன் பேச முடியுமா என்று பல்வேறு முறைகளில் சோதனைகளை செய்து பார்த்தனர்.

அவர்களது முயற்சிகள் இரவும் பகலும் என்று நாள் கணக்கில் தொடர்ந்தன.

1876ம் ஆண்டு மார்ச் 10ம் திகதி மதியவேளை கீழ் அறையிலிருந்த வாட்சன் காதில் கருவியை வைத்துக்கொண்டு கேட்டுக்கொண்டு இருந்தார்.

திடீரென்று அந்த கருவியிலிருந்து குரல் கேட்கத் தொடங்கியது. பெல்லின் குரல்தான் “திரு.வாட்சன் தயவுசெய்து இங்கு வாருங்கள் நான் உங்களைப் பார்க்க வேண்டும்” வாட்சனால் பெல் பேசியதை தெளிவாகக் கேட்க முடிந்தது.

வியப்பை அடக்க முடியாத வாட்சன் கருவியை கீழே போட்டுவிட்டு ஒரு பள்ளிச் சிறுவனைப்போல் துள்ளிக்குதித்து மேல் மாடிக்கு ஓடி பெல்லிடம் விசயத்தை சொன்னார், பெல்லின் கனவு நனவானது.

பிறகு ஒரு மாத்திற்குள் இரண்டு எளிமையான டெலிபோன்களையும், ஒரு மைக்ரோபோனையும் கண்டுபிடித்தார்.

பின்னர் 1876ம் ஆண்டு பெல் தனது புதிய கண்டுபிடிப்புக்கு உரிமை வாங்க பதிவு அலுவலகத்திற்கு சென்றார்.

 

அதற்கு சற்று முன்னால் எலிசா கிரே என்பவர் எலக்ட்ரிகல் ஸ்பீச் மெஷின்-க்கு உரிமை வாங்கி சென்றதாக தெரிவித்தனர்.

10 வருடங்கள் கழித்து டெலிபோனை கண்டுபிடித்தது யார் என்று நீதிமன்றத்தில் இருவரும் வழக்கு தொடர்ந்தனர், அந்த வழக்கில் பெல் வெற்றி பெற்று பெரும் செல்வந்தர் ஆனார்.

தொலைபேசி மட்டுமின்றி அரசு நிறுவனத்தின் மூலம் பொட்டோ போன், ஆடியோ மீட்டர், மெட்டல் டிடக்டர், இன்டக்‌ஷன் பேலன்ஸ், வாக்ஸ் ரிகார்டிங் சிலிண்டர், கிராமபோன் போன்ற கருவிகளைக் கண்டுபிடித்தார்.

பெல் விமானம் கண்டு பிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். ஆனால் அது அவருக்கு வெற்றி தரவில்லை, ஆனால் சில கண்டுபிடிப்புகளைச் செய்தார், விமானத்தின் எய்லிரான் என்ற பகுதியைக் கண்டுபிடித்தவர் பெல் ஆவார்.

பிறகு அவர் தன் வாழ்நாள் முழுவதையும் காது கேளாத குழந்தைகளுக்கு சேவை செய்வதற்கே அர்ப்பணித்தார்.

இவர் கண்டுபிடித்தவைகளில் பதினெட்டு வகை அறிவியல் சாதனங்களை மட்டுமே தனது பெயரில் காப்புரிமை பதிவுகளைச் செய்தார், இதர பன்னிரெண்டு வகைகளை மற்றவர்களின் பெயர்களில் காப்புரிமை பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

1920ல் தான் பிறந்த எடின்பெர்க் நகருக்கு வந்தபோது அந்த நகரம் பெல்லை கவுரவித்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து 1922 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 2ம் திகதி தனது 75 ஆவது வயதில் பெல் கனடாவில் காலமானார்.

அவர் நிறைவாகத்தான் இறந்திருக்க வேண்டும். ஏனெனில் அவரது கடைசிக் காலத்தில் அவரது கண்டுபிடிப்பான தொலைபேசி உலகம் முழுவதும், பட்டித்தொட்டிகளிலெல்லாம் பயன்படுத்தப்பட்டதை காணும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

ஆனால் தான் கண்டுபிடித்த தொலைபேசியை அவரே வெறுத்ததுதான் ஆச்சரியமான செய்தி. ஆம் பெல்லின் இறுதிக் காலங்களில் கிராமத்து வீட்டில் அவர் சோதனைகளில் ஈடுபட்டபோது தொலைபேசியை தொல்லையாகக் கருதி அதை செயல்படாமல் ஆக்கியதாக ஒரு வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது.

உலகையே சிறு கிராமமாக சுருக்கிய பெருமை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்லையே சாரும் என்று கூறினால் அது மிகையல்ல!...

 

 

 

அப்பிள் நிறுவனம் சமீபத்தில் நடந்த உலகளாவிய மேம்பாட்டாளர்கள் மாநாட்டில் புதிய இயங்கு தளமான iOS 10ஐ அறிமுகப்படுத்தியது.

இந்த புதிய இயங்குதளத்தில் உள்ள பல்வேறு வசதிகள் பற்றிய பல தகவல்கள் முன்னதாக வெளிவந்தன.

தற்போது இதில்அப்பிளிகேஷன்களை பதிவிறக்கம் செய்யும் போது முன்னுரிமை கொடுத்து பதிவிறக்கம் செய்துகொள்ளும் prioritize app downloads என்ற வசதியும் இருப்பது தெரிய வந்துள்ளது.

அப்பிள் நிறுவனம் iOS 10 இயங்குதளத்தை iPhone 7 மற்றும் iPhone 7 Plus போனுடன் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published in வணிகம்

ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் உச்சத்தில் இருக்கும் அப்பிள் நிறுவனத்திற்கு நேரடி போட்டியாக திகழ்கின்ற நிறுவனமாக சம்சுங் காணப்படுகின்றது.

இந் நிறுவனம் ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்களை கவர்வதற்கு பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றது.

இதன் ஒரு அங்கமாக தற்போது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள ரியோ ஒலிம்பிக்கை குறிவைத்துள்ளது.

அதாவது சம்சுங் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த Galaxy S7 Edge கைப்பேசிக்கு சந்தையில் சிறந்த வரவேற்பு காணப்படுகின்றது.

இதனால் இக் கைப்பேசியில் சில மாற்றங்களை மேற்கொண்டு Samsung Galaxy S7 Edge Olympic Edition எனும் புதிய பதிப்பினை வெளியிடவுள்ளது.

இது தொடர்பான தகவலை Evan Blass என்பவர் டுவிட்டர் ஊடாக தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் எதிர்வரும் தினங்களில் இக் கைப்பேசியின் சிறப்பம்சங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 
Published in வணிகம்
வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2016 00:00

ஹானர் 5சி எனும் புதிய பட்ஜெட் போன்...

ஹூவாய் இணைய பிரான்ட் ஹானர் 5சி எனும் புதிய பட்ஜெட் கருவியை அறிமுகம் செய்திருப்பது அனைவரும் அறிந்ததே. விலை உயர்ந்த சிறப்பம்சங்கள் கொண்ட ஹானர் 5சி ரூ.10,999 என விலையில் கிடைப்பதால் இந்தக் கருவி பலரையும் கவர்ந்திருக்கின்றது. இந்தக் கருவியில் வழங்கப்பட்டிருக்கும் 16nm கிரின் 650 சிப்செட் இந்தக் கருவியின் மிக முக்கிய அம்சமாக இருக்கின்றது.

இதோடு இல்லாமல் ஹானர் 5சி ஸ்மார்ட்போனினை பல்வேறு காரணங்களுக்காகவும் சிறப்பானது எனலாம். இந்தக் கருவியை கொண்டு செய்யக்கூடிய சில அம்சங்களை ஸ்லைடர்களில் பாருங்கள்..

அழகு

ஏர்கிராஃப்ட்-கிரேடு அலுமினியம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள ஹானர் 5சி கையில் கச்சிதமாக பொருந்துவதோடு எடையும் குறைவாகவே இருக்கின்றது. ஒற்றைக் கையிலும் எளிமையாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அளவு

5.2 இன்ச் ஃபுஎல் எச்டி ஐபிஎஸ் திரை மற்றும் 1920*1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட ஹானர் 5சி மூலம் தரவுகளை தெளிவாகவும், அதிக தரம் கொண்ட படம் மற்றும் வீடியோக்களை ரசிக்க முடியும்.

மல்டி டாஸ்கிங்

ஹானர் 5சி கருவியின் முக்கிய அம்சமாக இதன் சிப்செட் விளங்குகின்றது. இதில் வழங்கப்பட்டுள்ள 16nm கிரின் 650 சிப்செட், ஆக்டா கோர் சிபியு வழங்கப்பட்டுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸரை விடத் திறன் கொண்டதாகும்.

தரவுகள்

உங்களின் எல்லாத் தரவுகளையும் ஒரே கருவியில் சேமிக்க ஹானர் 5சி சிறப்பான தேர்வு. இதில் வழங்கப்பட்டுள்ள 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டர்னல் மெமரியை தவிர மெமரியை கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படம்

ஹானர் 5சி கருவியில் 13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இதில் நைட் மோடு, பியூட்டி மற்றும் பெயின்டிங் மோடு போன்றவை புகைப்படங்களை அழகாக எடுக்க வழி செய்கின்றது. மேலும் இதில் வழங்கப்பட்டிருக்கும் ப்ரோ மோடு மூலம் ISO, shutter speed, focus, white balance, மற்றும் exposure போன்றவற்றை இயக்க முடியும். செல்பீ எடுக்க ஏதுவாக 8 எம்பி வைடு ஆங்கிள் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

கைரேகை ஸ்கேனர்

ஹானர் 5சி கருவியின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்களில் கைரேகை ஸ்கேனர் அறிமுகம் செய்த நிறுவனங்களில் ஹானர் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கின்றது எனலாம். ஹானர் 5சி கருவியினை வேகமாக அன்லாக் செய்யக் கைரேகை ஸ்கேனர் வழி செய்கின்றது. இதன் மூலம் 0.5 நொடிகளில் கருவியை அன்லாக் செய்திட முடியும்.

மார்ஷ்மல்லோ

இன்று வெளியாகும் ஸ்மார்ட்போன்களில் மார்ஷ்மல்லோ இயங்குதளம் வெகு சில கருவிகளில் மட்டுமே வழங்கப்படுகின்றன. ஆனால் 5சி கருவியில் வாடிக்கையாளர்கள் நேரடியாக ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் பெற முடியும். இதோடு EMUI 4.1 வழங்கப்பட்டுள்ளது.

Published in வணிகம்
செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2016 00:00

ஐபோன் 6 vs ஒன்பிளஸ் 3

இன்றைய நவீன தொழில்நுட்ப உலகிற்கு ஏற்றவாறு புத்தம் புது அம்சங்களுடன் போட்டி போட்டு கொண்டு நிறுவனங்கள் ஸ்மார்ட் போன்களை வெளியிட்டு வருகின்றன.

இருந்தாலும் அப்பிள் ஐபோன்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

இந்நிலையில் OnePlus 3 vs iPhone 6S –களுக்கு இடையே நடத்தப்பட்ட சோதனையில் எந்த போன் வெற்றி பெற்றது என்பதை நீங்களே பாருங்கள்.

பக்கம் 1 / 2
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…