JoomlaLock.com All4Share.net

Background Video

வியாழன் கிரகத்தை ஆய்வு செய்ய கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், 110 கோடி அமெரிக்க டாலர் செலவில் ஜூனோ விண்கலத்தை அமெரிக்காவின் நாசா ஏவியது. இந்த விண்கலம், சுமார் 270 கோடி கிலோ மீட்டர் தூரத்தை கடந்து, இன்று வெற்றிகரமாக வியாழனுக்குள் நுழைந்தது. அமெரிக்க நேரப்படி, 4ம் தேதி இரவு 11.53 மணியளவில், ஜூனோ நுழைந்தது. இதனை நாசா விஞ்ஞானிகள் வெற்றிகரமாக கொண்டாடினர்.

பசு மாட்டின் கோமியத்தில் தங்கம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

குஜராத்தின் ஜூனாகத் வேளாண் பல்கலைகழகத்தை சேர்ந்த அறிவியலாளர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆய்வு செய்தனர்.

400 கிர் பசுக்களின் கோமியத்தை ஆய்வு செய்தததில், 1 லிட்டம் கோமியத்தில் 3 மி.கி முதல் 10 மி.கி வரை தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து ஆய்வு குழுவின் தலைவர் கோலக்கியா கூறுகையில், எருது, ஒட்டகம், ஆடு போன்றவற்றின் கோமியத்தை ஆய்வு செய்ததாகவும், ஆனால் பசுவின் கோமியத்தில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சரியான வேதியியல் பிரித்தெடுத்தலின் மூலம் நாம் அதனை கண்டுபிடிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Published in இந்தியா

ஸ்ரீஹரிக்கோட்டா: பூமியை படம் எடுக்கும் கார்டோ சாட்-2 உட்பட 20 செயற்கைகோள்களை சுமந்து சென்ற PSLV C-34 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, கனடா உட்பட 17 வெளிநாட்டு செயற்கைகோள்களும் PSLV C-34 ராக்கெட்டில் வைத்து ஏவப்பட்டது. சத்தியபாமா மாணவர்களின் சாட், புனே பொறியியல் கல்லூரியின் ஸ்லயம் உள்ளிட்ட உள்நாட்டு செயற்கை கோள்களும் ஏவப்பட்டுள்ளன. புவியியல் ஆய்வு, சாலை மற்றும் கடல் போக்குவரத்தை கண்காணிக்க கார்டோ சாட்-2 செயற்கைகோள் பயன்படுத்தப்படும். 727.5 கிலோ கொண்ட இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள். இது பூமியிலிருந்து 505 கி.மீ தொலைவில் நிலைநிறுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

தமிழக சட்டசபை 2ம் நாள் கூட்டம் இன்று துவங்கியது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெரம்பூர் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., வெற்றிவேல் பேசி வருகிறார். அவர், 23ம் புலிகேசி போல் தேர்தல் பிரசாரத்திற்கு சென்றவர்களை மக்கள் புறந்தள்ளிவிட்டதாகவும், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது யாருடைய ஆட்சி தமிழகத்தில் இருந்தது. தி.மு.க., ஆட்சியில் தான் மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி தரப்பட்டது. எனக்கூறினார். வெற்றிவேலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.,வினர் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து பேசிய சபாநாயகர், சட்டசபை மரபுகளுக்கு புதிய உறுப்பினர்கள் மதிப்பளிக்க வேண்டும்.அவை உறுப்பினர்கள் கூச்சலிட்டு நேரத்தை வீணடிக்கக்கூடாது எனக்கூறினார்.அப்போது ஸ்டாலின் பேசியதாவது: மீத்தேன் திட்டத்திற்கு தி.மு.க., ஆட்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டும் தான் போடப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் இதை கவனித்திருக்க வேண்டும் எனக்கூறினார்.அமைச்சர் தங்கமணி பேசுகையில், விவசாயிகளுக்கு எதிரான திட்டம் என்பதால், மீத்தேன் திட்டத்திற்கு அ.தி.மு.க., அரசு அனுமதி கொடுக்கவில்லை எனக்கூறினார்.

Published in அரசியல்

பேஸ்புக்குக்கு அடிமையானவர்களை மீட்க பிரத்யேக மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரத்யேக மருத்துவமனை அல்ஜீரியாவில் தொடங்கப்பட்டுள்ளது.

 

பேஸ்புக்கில் புளு கம்யூனிட்டி என்ற பெயரில் தீவிரவாத சிந்தனைகளுக்கு மக்களை ஆட்படுத்த பிரசாரம் மேற்கொண்டு, அதன்மூலம் மூளைச்சலவை செய்ய தீவிரவாத இயக்கங்கள் முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் சாதாரண மக்களையும் தீவிரவாதிகளாக மாற்ற பயங்கரவாதிகள் முயன்று வருவதாக எழுந்த புகாரை அடுத்து இது தொடங்கப்பட்டுள்ளது.

இதைத்தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இதுபோன்ற மூளைச் சலவைக்கு உட்படுத்தப்பட்டவர்களை மீட்க அல்ஜீரியாவின் கான்ஸ்டண்டீன் நகரில் தனியார் தொண்டு நிறுவனத்தால் பிரத்யேக மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது.

பக்கம் 1 / 2
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…