JoomlaLock.com All4Share.net

Background Video

பிளஸ் 2 பொதுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ-மாணவியர்களுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேர்ச்சி அடைந்த ஒவ்வொரு மாணவரும் உயர்கல்வி பெற தாம் விரும்புவதாக ஸ்டாலின் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காத மாணவர்கள் சோர்வு ஏற்படாமல் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசுப் பள்ளியில் தேர்ச்சி விகிதம் அதிகரித்ததற்கு காரணம் மாணவர்கள் கல்வி கற்கும் திறனே  கல்வித்தரம் அல்ல எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Published in தமிழகம்

"நாங்கள் தென்னிந்திய கருப்பர்களுடன் ஒன்றாக வாழவில்லையா" என்று அண்மையில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார் பா.ஜ.க எம்.பி தருண் விஜய். இதற்கு தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால்  தருண் விஜய் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார்.


இந்நிலையில்  புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக, தருண் விஜய் இன்று அங்கு சென்றிருந்தார். பல்கலைக்கழக வளாகத்துக்குள் அவர் சென்றிருந்த போது, மாணவர்கள் தருண் விஜயை முற்றுகையிட்டனர். குறிப்பாக  தருண் விஜய்க்கு எதிராக மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர். 

இதைத்தொடர்ந்து  பாதுகாப்புப் பணிக்காக அங்கிருந்த போலீஸார்  முற்றுகையிட்ட மாணவர்களை குண்டுக்கட்டாக வெளியேற்றனர். அப்போது, போலீஸாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால்  புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Published in இந்தியா

மகாராஷ்டிரா மாநிலம் வெயிரி கடலில் குளித்த கல்லூரி மாணவர்கள் எட்டு பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். கர்நாடகாவில் இருந்து அவர்கள் கல்லூரி சுற்றுலா வந்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம் பெல்காம் பகுதியைச் சேர்ந்த மராத்தா கல்லூரியைச் சேர்ந்த 40 மாணவர்கள் மகாராஷ்டிராவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். சித்தூதர்க் பகுதியில் அமைந்துள்ள வெயிரி கடற்கரையில் இவர்கள் குளித்து கொண்டிருக்கும்போது, எட்டு மாணவர்கள் கடலில் மூழ்கி தவித்துள்ளனர்.

உடனடியாக உதவ யாருமில்லாத சூழலில், கடலில் மூழ்கிய எட்டு மாணவர்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மற்ற மாணவர்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கடலில் மூழ்கிய மாணவர்களின் உடலை மீட்கும்பணி முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. கடலோர காவல் படையினரும், அப்பகுதி மீனவர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

 

Published in இந்தியா

மதுரை மஹால் 7-வது தெருவில் 12-ம் வகுப்பு மாணவர் நாகராஜ் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். செல்போனை பறித்த கொள்ளையர்கள் நாகராஜை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published in தமிழகம்

தன்னுடன் படித்த தோழிக்காக தனக்கு கிடைக்க வேண்டிய மருத்துவக் கல்லூரி இடத்தை ஒரு மாணவி விட்டுக்கொடுத்துள்ளார்.

சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான பிரிவில் எஸ்.வர்ஷினி, என். ஜனனி ஆகிய இருவர் கலந்து கொண்டனர். இவர்கள் இருவரும் திருச்சி சமயபுரத்திலுள்ள ஒரே பள்ளியில் படித்தவர்கள். இருவரும் நெருங்கிய தோழிகள்.

இதில் வர்ஷினியின் கட்-ஆஃப் மதிப்பெண் 199 ஆகும். ஆனால் இவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். இவரது தோழியின் கட்-ஆஃப் மதிப்பெண் 198.75 ஆகும். ஆனால் இவர் பொதுப்பிரிவை(ஓ.சி.) சேர்ந்தவர்.

முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இவர்கள் இருவரும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருந்தனர்.

இந்த நிலையில், கலந்தாய்வில் சென்னை மருத்துவக் கல்லூரியில் தனக்கு கிடைத்த இடத்தை தனது தோழிக்காக விட்டுக் கொடுத்துள்ளார் வர்ஷினி.

இதுகுறித்து வர்ஷினி கூறுகையில், பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வில் எனக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் நிச்சயம் இடம் கிடைக்கும். ஆனால், எனது தோழி ஓ.சி. வகுப்புப் பட்டியலில் இருப்பதால் அவருக்கு அதே கல்லூரியில் இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

எனவே இந்த இடத்தை எனது தோழிக்கு விட்டுக் கொடுத்தேன். பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வில் கலந்து கொண்டு நானும் சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் பிடிப்பேன். அங்கும் எங்களது நட்பு தொடரும் என்றார் அவர்.

பக்கம் 1 / 2
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…