JoomlaLock.com All4Share.net

Background Video

செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2016 00:00

தங்கம் விலை ரூ.496 வீழச்சி

பிரிட்டன் முடிவால் தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில் இன்று(ஜூன் 28-ம் தேதி) சவரனுக்கு ரூ.496 வீழ்ச்சி அடைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,911-க்கும், சவரனுக்கு ரூ.496 சரிந்து ரூ.23,288-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.670 சரிந்து ரூ.31,130-க்கும் விற்பனையாகிறது.வெள்ளியின் விலையும் சரிந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 20 காசுகள் சரிந்து ரூ.46.30-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.235 சரிந்து ரூ.43,245-க்கும் விற்பனையாகிறது.

Published in வணிகம்
திங்கட்கிழமை, 20 ஜூன் 2016 00:00

தங்கம் விலை ரூ.128 குறைவு

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று தங்கம், வெள்ளி சந்தையில் விலை இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த வாரம் உயர்வுடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று சவரனுக்கு ரூ.128 குறைந்துள்ளது. இன்றைய காலை நேர வர்த்தகத்தின் போது ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2870 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.30,700 ஆகவும் உள்ளன. ஒரு சவரன் தங்கம் ரூ.22,960 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை 10 காசு குறைந்து ரூ.45.10 க்கும், பார்வெள்ளி விலை ரூ. 140 குறைந்து ரூ. 42,140 க்கும் விற்கப்படுகிறது.

Published in வணிகம்

உணவு பொருட்களின் விலை உயர்வை தொடர்ந்து இன்று மதியம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அவசர ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, நிதின் கட்காரி, ராம்விலாஸ் பஸ்வான், ராதாமோகன், நிர்மலா சீதாராமன் மற்றும் பொருளாதார தலைமை ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். காய்கறிகள் மீதான விலை உயர்வு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது கடந்த ஏப்ரல் மாத்திலிருந்து 2.21 சதவீதத்திலிருந்து தற்போது வரை 12.94 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.

Published in இந்தியா

பேஸ்புக்குக்கு அடிமையானவர்களை மீட்க பிரத்யேக மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரத்யேக மருத்துவமனை அல்ஜீரியாவில் தொடங்கப்பட்டுள்ளது.

 

பேஸ்புக்கில் புளு கம்யூனிட்டி என்ற பெயரில் தீவிரவாத சிந்தனைகளுக்கு மக்களை ஆட்படுத்த பிரசாரம் மேற்கொண்டு, அதன்மூலம் மூளைச்சலவை செய்ய தீவிரவாத இயக்கங்கள் முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் சாதாரண மக்களையும் தீவிரவாதிகளாக மாற்ற பயங்கரவாதிகள் முயன்று வருவதாக எழுந்த புகாரை அடுத்து இது தொடங்கப்பட்டுள்ளது.

இதைத்தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இதுபோன்ற மூளைச் சலவைக்கு உட்படுத்தப்பட்டவர்களை மீட்க அல்ஜீரியாவின் கான்ஸ்டண்டீன் நகரில் தனியார் தொண்டு நிறுவனத்தால் பிரத்யேக மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை, 03 ஜூன் 2016 00:00

தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்துள்ளது. தங்கம், வெள்ளி சந்தையில் இன்றும் விலை குறைந்து காணப்படுகிறது.  இன்றைய காலை நேர நிலரப்படி சென்னையில் ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கம் ரூ.2722 க்கும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.29110 க்கும் விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.21,776 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.41.60 ஆகவும், பார்வெள்ளி விலை ரூ.38,865 ஆகவும் உள்ளன.

Published in வணிகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…