JoomlaLock.com All4Share.net

Background Video

இந்தி திணிப்பை தடுக்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார்.

இந்தி திணிப்பிற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு வந்தவுடன் மத்திய அரசு பதுங்கிறது என்றும் வீரமணி கூறியுள்ளார். இதனால் இந்தி பேசுவது பரிந்துரையே  கட்டாயம் அல்ல எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மத்திய அரசின் இந்த விளக்கம் பதுங்குவதை போன்றது அதனால் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என வீரமணி தெரிவித்துள்ளார். 

Published in இந்தியா

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 24 மீனவர்கள் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார். மேலும் அவர். 93 படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Published in அரசியல்

சஞ்சய் பாரு எழுதிய தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் : தி மேக்கிங் அன் அன்மேக்கிங் ஆப் மன்மோகன் சிங் ( The Accidental Prime Minister: the Making and Unmaking of Manmohan Singh) என்ற புத்தகம் பெரும் சர்ச்சையாக்குள்ளானது. இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட விஷயங்கள் தற்போது சினிமாவாக எடுக்கப்பட உள்ளது. மன்மோகன் சிங் - தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் என்ற பெயரில் எடுக்கப்பட உள்ள இந்த படம் 2017 ம் ஆண்டு வெளியிடப்பட உள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 30 ம் தேதி இப்படத்தின் டீசரை வெளியிட படத்தின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Published in இந்தியா

தேர்வு நடைபெற்று முடிந்து ஓராண்டு ஆகியும் முடிவுகள் வெளியிடப்படாமல் உள்ள குரூப் 1 மெயின் தேர்வு முடிவு 17-ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5, 6, 7 ஆகிய தேதிகளில் துணை ஆட்சியர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், உதவி வணிக வரித்துறை ஆணையர்கள், மாவட்ட பதிவாளர்கள் உள்ளிட்ட 79 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 1 மெயின் தேர்வு நடைபெற்றது.

குரூப் 1 மெயின் தேர்வை எழுதுவதற்காக 4, 282 பேர் தகுதி பெற்றிருந்த நிலையில் 3,450 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். சென்னையில் மட்டும் 43 மையங்களில் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிந்து ஓராண்டு ஆகியும் முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், குரூப்-1 மெயின் தேர்வு முடிவு 17-ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் விஜய், சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் இறைவி.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படம் பெண்களின் பெருமைகளை எடுத்துக் கூறும் என்று படக்குழு விளம்பரம் செய்திருந்தது.

இந்நிலையில் இறைவி பெண்களை பெருமைப்படுத்தியதா? ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.

இந்த வருடம்

இறைவி இந்த வருடத்தின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று. விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி தங்கள் நடிப்பால் நம்மைக் கவர்கின்றனர்.

எல்லாப் புகழும் கார்த்திக் சுப்புராஜ்க்கே என்று கிறிஸ்டோபர் பாராட்டியிருக்கிறார்.

கிளைமாக்ஸ்

படத்தை இனிதாக முடிக்க எத்தனையோ வழிகள் இருந்தும் மோசமான ஒரு கிளைமாக்ஸைக் கார்த்திக் சுப்புராஜ் தேர்ந்தெடுத்துள்ளாரே? என்று கார்த்திக் வருத்தப்பட்டிருக்கிறார்.

வார்த்தைகளால் விவரிக்க

சில படங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது அதில் இறைவியும் ஒன்று என்று அருண் ரமேஷ் பாராட்டியிருக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ்

இறைவி கார்த்திக் சுப்புராஜ்க்கு பொருத்தமான படம். அனைவரின் நடிப்பும் அழுத்தமாக இருந்தது என்று ராஜேஷ் செல்வராஜ் பாராட்டியிருக்கிறார்.

பயங்கரம்

இறைவியில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா இருவரும் தங்களுடைய நடிப்பால் மிரட்டுகின்றனர் என்று அக்ஷய் பாராட்டியிருக்கிறார்.

இதுபோல மேலும் பல ரசிகர்களும் படம் நன்றாக இருக்கிறது என சமூக வலைதளங்களில் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

Published in சினிமா
பக்கம் 1 / 2
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…