JoomlaLock.com All4Share.net

Background Video

சந்தானம் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியதில் இருந்து கதை மட்டுமின்றி படங்களுக்கு டைட்டீல் வைப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், அவரது கதை இலாகா இப்போது கதையை முடிவு செய்த பிறகு டைட்டீலையும் அவ்வப்போது அமர்ந்து விவாதம் நடத்துகிறார்களாம். படத்தின் உதவியாளர்கள் அனைவரிடமும் அந்த கதைக்கு எந்த மாதிரியான டைட்டீல் வைத்தால் சரியாக இருக்கும் என்று எழுதி வரச்சொல்கிறார்களாம்.அந்த வகையில், தற்போது சந்தானம் நடித்துள்ள தில்லுக்குத்துட்டு படத்தின் கதையைகூட எளிதில் முடிவு செய்து விட்டார்களாம். ஆனால் டைட்டீலை முடிவு செய்வதற்குதான் பல மாதங்களாக விவாதம் நடத்தினார்களாம். அந்த வகையில், அப்படத்தின் டைரக்டர் ராம்பாலா உள்பட உதவி இயக்குனர்கள் அனைவருமே ஆளுக்கு 50 டைட்டில்கள் வீதம் ரெடி பண்ணி சந்தானத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றார்களாம். ஆனால் அவருக்கு அதில் எந்த டைட்டீலும் பிடிக்கவில்லையாம். இறுதியில் இந்த கதைக்கு தில்லுக்குத்துட்டுதான் பொருத்தமாக இருக்கும் என்று சந்தானமே டைட்டீலை முடிவு செய்து விட்டாராம்.

Published in சினிமா

இன்றைய காலகட்டத்தில் தொலைபேசி இல்லாத நாட்களை நினைத்துக்கூட பார்க்க முடியாது.

ஒவ்வொருவரின் கைகளையும் அலங்கரித்துக் கொண்டிருக்கிறது, இந்த உன்னத சாதனத்தை உருவாக்கியவர் தான் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்.

கடந்த 1847ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் திகதி ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் என்னும் இடத்தில் பிறந்தார்.

சிறுவயதில் இருந்தே கல்வியில் ஆர்வம் காட்டி வந்தவர், படிப்பை முடித்துவிட்டு தன் தந்தையோடு காது கேளாதவர்களுக்கு பேசக் கற்றுக் கொடுத்தார்.

அவருடைய 23வது வயதில் காசநோய் ஏற்படவே, பெல்லின் உடல்நிலை கருதி அவரது குடும்பம் 1870ம் ஆண்டுகளில் கனடா நாட்டிற்கு குடிபெயர்ந்தது.

இதற்கு அடுத்த வருடம் பாஸ்டன் பல்கலைகழத்தில் பேராசிரியராக வேலைக்கு சேர்ந்தார்.

அறிவியல் ஆராய்ட்சிகளில் ஆர்வம் கொண்டிருந்த பெல் தனது ஓய்வு நேரங்களில் ஏதாவது சோதனை செய்துகொண்டே இருப்பார்.

காது கேளாதோருக்கும், வாய் பேச முடியாதோருக்கும் நிறைய செய்ய வேண்டும் என்ற அவரது உந்துதல்தான் தொலைபேசி என்ற உன்னத கருவியை கண்டுபிடிக்க அவருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது.

 

ஒருவர் பேசுவதை மின்சக்தி மூலம் இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்ல முடியுமா என்று ஆராயத் தொடங்கினார்.

தனது உதவியாளர் வாட்சன் என்பவருடன் சேர்ந்து பெல் சோதனைகளில் ஈடுபட்டார்.

பெல் வீட்டின் மேல் அறையிலும் வாட்சன் கீழ் அறையிலும் இருந்து கொண்டு கம்பிவழி ஒருவர் இன்னொருவருடன் பேச முடியுமா என்று பல்வேறு முறைகளில் சோதனைகளை செய்து பார்த்தனர்.

அவர்களது முயற்சிகள் இரவும் பகலும் என்று நாள் கணக்கில் தொடர்ந்தன.

1876ம் ஆண்டு மார்ச் 10ம் திகதி மதியவேளை கீழ் அறையிலிருந்த வாட்சன் காதில் கருவியை வைத்துக்கொண்டு கேட்டுக்கொண்டு இருந்தார்.

திடீரென்று அந்த கருவியிலிருந்து குரல் கேட்கத் தொடங்கியது. பெல்லின் குரல்தான் “திரு.வாட்சன் தயவுசெய்து இங்கு வாருங்கள் நான் உங்களைப் பார்க்க வேண்டும்” வாட்சனால் பெல் பேசியதை தெளிவாகக் கேட்க முடிந்தது.

வியப்பை அடக்க முடியாத வாட்சன் கருவியை கீழே போட்டுவிட்டு ஒரு பள்ளிச் சிறுவனைப்போல் துள்ளிக்குதித்து மேல் மாடிக்கு ஓடி பெல்லிடம் விசயத்தை சொன்னார், பெல்லின் கனவு நனவானது.

பிறகு ஒரு மாத்திற்குள் இரண்டு எளிமையான டெலிபோன்களையும், ஒரு மைக்ரோபோனையும் கண்டுபிடித்தார்.

பின்னர் 1876ம் ஆண்டு பெல் தனது புதிய கண்டுபிடிப்புக்கு உரிமை வாங்க பதிவு அலுவலகத்திற்கு சென்றார்.

 

அதற்கு சற்று முன்னால் எலிசா கிரே என்பவர் எலக்ட்ரிகல் ஸ்பீச் மெஷின்-க்கு உரிமை வாங்கி சென்றதாக தெரிவித்தனர்.

10 வருடங்கள் கழித்து டெலிபோனை கண்டுபிடித்தது யார் என்று நீதிமன்றத்தில் இருவரும் வழக்கு தொடர்ந்தனர், அந்த வழக்கில் பெல் வெற்றி பெற்று பெரும் செல்வந்தர் ஆனார்.

தொலைபேசி மட்டுமின்றி அரசு நிறுவனத்தின் மூலம் பொட்டோ போன், ஆடியோ மீட்டர், மெட்டல் டிடக்டர், இன்டக்‌ஷன் பேலன்ஸ், வாக்ஸ் ரிகார்டிங் சிலிண்டர், கிராமபோன் போன்ற கருவிகளைக் கண்டுபிடித்தார்.

பெல் விமானம் கண்டு பிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். ஆனால் அது அவருக்கு வெற்றி தரவில்லை, ஆனால் சில கண்டுபிடிப்புகளைச் செய்தார், விமானத்தின் எய்லிரான் என்ற பகுதியைக் கண்டுபிடித்தவர் பெல் ஆவார்.

பிறகு அவர் தன் வாழ்நாள் முழுவதையும் காது கேளாத குழந்தைகளுக்கு சேவை செய்வதற்கே அர்ப்பணித்தார்.

இவர் கண்டுபிடித்தவைகளில் பதினெட்டு வகை அறிவியல் சாதனங்களை மட்டுமே தனது பெயரில் காப்புரிமை பதிவுகளைச் செய்தார், இதர பன்னிரெண்டு வகைகளை மற்றவர்களின் பெயர்களில் காப்புரிமை பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

1920ல் தான் பிறந்த எடின்பெர்க் நகருக்கு வந்தபோது அந்த நகரம் பெல்லை கவுரவித்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து 1922 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 2ம் திகதி தனது 75 ஆவது வயதில் பெல் கனடாவில் காலமானார்.

அவர் நிறைவாகத்தான் இறந்திருக்க வேண்டும். ஏனெனில் அவரது கடைசிக் காலத்தில் அவரது கண்டுபிடிப்பான தொலைபேசி உலகம் முழுவதும், பட்டித்தொட்டிகளிலெல்லாம் பயன்படுத்தப்பட்டதை காணும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

ஆனால் தான் கண்டுபிடித்த தொலைபேசியை அவரே வெறுத்ததுதான் ஆச்சரியமான செய்தி. ஆம் பெல்லின் இறுதிக் காலங்களில் கிராமத்து வீட்டில் அவர் சோதனைகளில் ஈடுபட்டபோது தொலைபேசியை தொல்லையாகக் கருதி அதை செயல்படாமல் ஆக்கியதாக ஒரு வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது.

உலகையே சிறு கிராமமாக சுருக்கிய பெருமை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்லையே சாரும் என்று கூறினால் அது மிகையல்ல!...

 

 

 

தான் கொலை செய்ய வேண்டும் என்ற முடிவில் வெட்டவில்லை என சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த மாதம் 24ம் திகதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து பொறியியல் பட்டதாரியான சுவாதி படுகொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் இடம்பெற்று ஒரு வாரம் கடந்த நிலையில் சந்தேகநபரான ராம்குமாரை பொலிஸார் கைது செய்தனர்.

தான்கைது செய்யப்பட போவதை அறிந்துகொண்ட ராம்குமார் தற்கொலைக்கு முயற்சித்துள்ள நிலையில் தற்போது ராயப்பேட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் சிகிச்சை பெற்றுவரும் ராம்குமாரிடம் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது நீதபதி முன்னிலையில் சாட்சியமளித்த ராம்குமார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ”சுவாதி என்னை தேவாங்கு என இழிவுபடுத்தியதால் ஒரு முறைதான் வெட்டினேன்.

அதுவும் கொலை செய்யும் முடிவில் சுவாதியை வெட்டவில்லை. வெட்டிய போது உடனே கத்தியை என்னால் இழுக்க முடியவில்லை.

சற்று சிரமப்பட்டு இரண்டு முறை இழுத்தேன். அதில்தான் சுவாதி உயிரிழந்திருக்கலாம். நான் தெரியாமல் செய்துவிட்டேன்.

என்னை விட்டுவிடுங்கள்’’ என நீதிபதி முன்னிலையில் கண்ணீர் விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published in தமிழகம்

இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் இயக்கப்படும் மருத்துவச் சேவைக்கான ஊர்திகளின் ஓட்டுநர்களைத் தேர்வு செய்யும் வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் வருகிற 11, 13 ஆகிய நாள்களில் காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

எழும்பூர் மாண்டியத் சாலையில் இயங்கி வரும் சங்க அலுவலகத்தில், தாய் சேய் பாதுகாப்பு ஊர்திக்கு 11-ஆம் தேதியும், இலவச அமரர் ஊர்திக்கு 13-ஆம் தேதியும் ஓட்டுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தகுதிகள்: எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, 25 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தது 3 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும். தகுதியுடையோர் அசல் சான்றிதழ்களுடன் முகாமில் நேரில் பங்கேற்கலாம். விவரங்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்தை 044-42147572 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை குழுக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெற உள்ளது. மோடி தலைமையிலான ஆட்சி அமைத்து 2 ஆண்டுகœ முடிவடைந்துள்ள நிலையில், அமைச்சரவையில் இன்று மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை மாற்றத்தின் மூலம் புதிய அமைச்சர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தகவல் தெரியவந்துள்ளது.

Published in இந்தியா
பக்கம் 3 / 103
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…