JoomlaLock.com All4Share.net

Background Video

அப்பிள் நிறுவனம் சமீபத்தில் நடந்த உலகளாவிய மேம்பாட்டாளர்கள் மாநாட்டில் புதிய இயங்கு தளமான iOS 10ஐ அறிமுகப்படுத்தியது.

இந்த புதிய இயங்குதளத்தில் உள்ள பல்வேறு வசதிகள் பற்றிய பல தகவல்கள் முன்னதாக வெளிவந்தன.

தற்போது இதில்அப்பிளிகேஷன்களை பதிவிறக்கம் செய்யும் போது முன்னுரிமை கொடுத்து பதிவிறக்கம் செய்துகொள்ளும் prioritize app downloads என்ற வசதியும் இருப்பது தெரிய வந்துள்ளது.

அப்பிள் நிறுவனம் iOS 10 இயங்குதளத்தை iPhone 7 மற்றும் iPhone 7 Plus போனுடன் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published in வணிகம்
வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00

வேலூரில் வழக்கறிஞர்கள் போராட்டம்

வேலூரில் தவறு செய்யும் வழக்கறிஞர்களை கோர்ட் தானே முன்வந்து தண்டிக்கலாம் என்ற புதிய சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் 200க்கும் மேற்பட்டோர் சட்ட நகல் எரிப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

Published in தமிழகம்

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டியுள்ளார். சுவாதி விவகாரத்தில் கருத்து தெரிவிக்காமல் முதல்வர் மவுனம் சாதிப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். சேலத்தில் வினுப்பிரியா விவகாரத்தில் போலீஸ் அலட்சியமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டியுள்ளார்.

Published in அரசியல்
வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00

போர்ச்சுகல் அணி வெற்றி

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் முதல் காலிறுதியில் போர்ச்சுகல் அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் போலந்து அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் யூரோ கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. மொத்தம் 24 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் நடப்பு 'சாம்பியன்' ஸ்பெயின் உள்ளிட்ட 16 அணிகள் வெளியேறி விட்டன. இந்நிலையில் முதல் காலிறுதி போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோவை கேப்டனாக கொண்ட போர்ச்சுகல் அணி, போலந்து அணியை சந்தித்தது.

ஆட்டம் துவங்கிய 5வது நிமிடத்திலேயே போலந்து அணியின் லிவான்டவுஸ்கி கோல் அடித்து, தனது அணிக்கு முன்னிலை பெற்று தந்தார். பதில் கோல் அடிக்கும் முனைப்பில் போராடிய போர்ச்சுகல் அணிக்கு 33வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. அந்த அணியின் ரினாடோ சான்சஸ் கோல் அடித்து அசத்தினார். முதல் பாதியில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தது.

2வது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் போடும் முனைப்பில் ஆக்ரோஷமாக போராடின. ஆனால் இரு அணிகளும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை வீணாக்கியதால், கோல் போட முடியவில்லை. பின் ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் கோல் அடிக்கும் முயற்சி பலனளிக்கவில்லை. இதனையடுத்து ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் முறைக்கு சென்றது.

இதில் போலந்து அணியின் பிளாஸிசைகவுஸ்கி தனது வாய்ப்பை தவறவிட, போர்ச்சுக்கல் அணி தனது அனைத்து வாய்ப்பையும் கோல் ஆக்கியது. முடிவில் 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற போர்ச்சுக்கல் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

தமிழகத்தில் கூலிப்படை கலாசாரம் அதிகரித்துள்ளதைக் கட்டுப்படுத்தும் விதமாக, அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட மாநில அரசு முன்வர வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நாள்தோறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகளவில் நடைபெறுகின்றன.

குறிப்பாக, கடந்த வாரம் சென்னை நுங்கம்பாக்கத்தில் சுவாதி என்ற இளம்பெண் மர்ம நபரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.இதற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், சுவாதியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுவாதி கொலை செய்யப்பட்டு கிடந்த புகைப்படத்தை பார்த்தேன் தொழில் முறை கொலையாளிகள் (கூலிப்படையினர்) கொலை செய்தது போல் இருக்கிறது.

தமிழகம் முழுவதும் சமீபத்தில்நடக்கும் கொலைகளில் அடுக்கடுக்காக கூலிப்படை கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இதற்கு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் தமிழக முதல்வர் சட்டசபையில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வாதாக கூறிவருகிறார்.

சுவாதி கொலையை கவுரவ பிரச்சனையாக பார்க்காமல் இதை சமூக பிரச்சனையாக பார்க்க வேண்டும். தமிழகத்தில் அதிகரித்து வரும் கூலிப்படை கலாச்சாரத்தை ஓடுக்க அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். இதற்காக நடவடிக்கையில் தமிழக அரசு இறங்க வேண்டும் என்றும் திருமாவளன் தெரிவித்துள்ளார். சுவாதி குடும்பத்திற்கு தமிழக அரசு 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Published in அரசியல்
பக்கம் 10 / 103
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…