JoomlaLock.com All4Share.net

Background Video

அப்பிள் நிறுவனம் சமீபத்தில் நடந்த உலகளாவிய மேம்பாட்டாளர்கள் மாநாட்டில் புதிய இயங்கு தளமான iOS 10ஐ அறிமுகப்படுத்தியது.

இந்த புதிய இயங்குதளத்தில் உள்ள பல்வேறு வசதிகள் பற்றிய பல தகவல்கள் முன்னதாக வெளிவந்தன.

தற்போது இதில்அப்பிளிகேஷன்களை பதிவிறக்கம் செய்யும் போது முன்னுரிமை கொடுத்து பதிவிறக்கம் செய்துகொள்ளும் prioritize app downloads என்ற வசதியும் இருப்பது தெரிய வந்துள்ளது.

அப்பிள் நிறுவனம் iOS 10 இயங்குதளத்தை iPhone 7 மற்றும் iPhone 7 Plus போனுடன் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published in வணிகம்

விமானப்படையில் முதல் முறையாக போர் விமானங்களை இயக்கும் பணியில் சேர்க்கப்பட்டுள்ள 3 பெண் விமானிகளும் இன்று தங்களின் சாதனை பயணத்தை துவக்கி உள்ளனர்.இந்திய விமானப்படையில் போர் விமானங்களை இயக்கும் பயிற்சிக்காக அவானி சதுர்வேதி, மோகனா சிங் மற்றும் பாவ்னா கந்த் ஆகிய 3 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் 3 பேரும் பயிற்சி முடிந்து இன்று போர் விமானத்தை இயக்கினர். ஐதராபாத் அருகே உள்ள ஹகிம்பேட் விமானப்படை தளத்தில் இருந்து இவர்கள் போர் விமானத்தை இயக்கினர். இதன் மூலம் விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ள முதல் பெண் விமானிகள் என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர்.

புதன்கிழமை, 08 ஜூன் 2016 00:00

அதி நவீன பிட்னெஸ் ட்ராக்கர்

இதுவரை காலமும் மணிக் கட்டில் அணியக்கூடிய பிட்னெஸ் ட்ராக்கரையே அனைத்து நிறுவனங்களும் அறிமுகம் செய்து வந்தன.

இவற்றில் உடல் ஆரோக்கியம் தொடர்பான தகவல்களை மட்டுமே ஒப்பீடு செய்யக்கூடியதாக இருந்தது.

ஆனால் முதன் முறையாக இவற்றினையெல்லாம் தாண்டி அதி நவீன பிட்னெஸ் ட்ராக்கரை சம்சுங் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

Gear IconX எனும் இந்த ட்ராக்கர் ஆனது வழமைக்கு மாறாக காதில் அணியக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மிகவும் பாரம் குறைந்ததாக காணப்படும் இச் சாதனம் பாதுகாப்பானதாகவும், பயன்படுத்துவதற்கு வசதியாகவும் இருக்கின்றது.

இதில் தரப்பட்டுள்ள 4GB சேமிப்பு வசதியின் ஊடாக 1000 வரையான பாடல்களை சேமித்து வைத்து கேட்டு மகிழவும் முடியும்.

இவற்றுடன், இதயத்துடிப்பு வீதம், எரிக்கப்படும் கலோரியின் அளவு, வேகம், தூரம், கால அளவு என்பவற்றினையும் அறிந்துகொள்ள முடியும்.

மேலும் குரல் வழி கட்டுப்பாட்டினைக் கொண்டிருத்தல் விசேட அம்சமாகும்.

Published in வணிகம்

பேஸ்புக்குக்கு அடிமையானவர்களை மீட்க பிரத்யேக மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரத்யேக மருத்துவமனை அல்ஜீரியாவில் தொடங்கப்பட்டுள்ளது.

 

பேஸ்புக்கில் புளு கம்யூனிட்டி என்ற பெயரில் தீவிரவாத சிந்தனைகளுக்கு மக்களை ஆட்படுத்த பிரசாரம் மேற்கொண்டு, அதன்மூலம் மூளைச்சலவை செய்ய தீவிரவாத இயக்கங்கள் முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் சாதாரண மக்களையும் தீவிரவாதிகளாக மாற்ற பயங்கரவாதிகள் முயன்று வருவதாக எழுந்த புகாரை அடுத்து இது தொடங்கப்பட்டுள்ளது.

இதைத்தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இதுபோன்ற மூளைச் சலவைக்கு உட்படுத்தப்பட்டவர்களை மீட்க அல்ஜீரியாவின் கான்ஸ்டண்டீன் நகரில் தனியார் தொண்டு நிறுவனத்தால் பிரத்யேக மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் போன்கள்  250 ரூபாயிலிருந்தே கிடைக்கின்ற  இந்த காலகட்டத்தில்  9 லட்சத்துக்கு ஒரு ஸ்மார்ட் போனை தயாரித்து  வெளியிட்டுள்ளது  இஸ்ரேலைச் சேர்ந்த சிரின் லேப்ஸ் என்ற நிறுவனம். இது லண்டனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த போன்தான் உலகிலேயே  அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போனாகும்.  இந்த விலைக்கு போன் வாங்குவதற்கு மாறாக ஒரு  செல்போன் கடையையே சொந்தமாக்கி கொள்ளலாம் என நினைக்க தோன்றுகிறதா!!  அப்படியென்ன மற்ற ஸ்மார்ட் போன்களில் இல்லாத அம்சங்களை இது கொண்டிருக்கும் என நினைப்பவர்களுக்கு பதில் கூறும் விதமாக  இதில் தகவல் தொடர்புகளைப் பாதுகாக்க உலக நாடுகளின் ராணுவ  துறையில்  பயன்படுத்தும் அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் இந்த செல்போன் வெளியாகியுள்ளது. இதுவரை வெளியான செல்போன்களில் இல்லாத அளவுக்கு, எந்தவிதமான சைபர் தாக்குதல்களைத் தாக்குப்பிடிக்கும் வகையிலும், தகவல்களைப் பாதுகாக்க அதிகபட்ச பாதுகாப்பு வசதிகளைக் கொண்டதாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

Sirin Labs
முக்கிய அம்சங்கள்:
  •  24 மெகாபிக்சல் கேமரா
  •  5.5 ஐபிஎஸ் LED 2k தீர்மானம், லேசர் ஆட்டோ ஃபோகஸ்
  • ஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆன்ராய்டு 5.1.1
  •   குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 810  செயலி
  • பேட்டரி: 4000 mAh
  • கை விரல் சென்சார்
  •  பாதுகாப்பு கேடயம் பாதுகாப்பு ஸ்விட்ச் செயல்படுத்தப்படுகிறது
  •  பாதுகாப்பான அழைப்புகள்  மற்றும்  என்கிரிப்சன் செய்யப்பட்ட மின்னஞ்சல்கள்
  • நினைவகம்: ரேம் 4GB, சேமிப்பு 128 ஜிபி
பக்கம் 1 / 2
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…