JoomlaLock.com All4Share.net

Background Video

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுடன் செல்‌ஃபி எடுத்துக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியதால் ராஜஸ்தான் மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி விலகியுள்ளார்.

பாலியன் வன்செயலால் பாதிக்கப்பட்ட ‌30 வயது பெண் ஒருவரை சந்தித்து விசாரிப்பதற்காக ராஜஸ்தான் மாநில மகளிர் ஆணையத் தலைவி சுமன் சர்மாவும், உறுப்பினர் சோம்யா குர்ஜாரும் வடக்கு ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் காவல்நிலையத்திற்கு சென்றனர். அப்போது அந்தப் பெண்ணுடன் அவர்கள் இருவரும் செல்ஃபி எடுத்துக்கொண்டது சர்ச்சை‌யை ஏற்படுத்தியது.

இதனையடுத்து குர்ஜார், முதலமைச்சர் வசுந்தரா ராஜேவை சந்தித்து தனது பதவி விலகல் கடிதத்தை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோம்யா குர்ஜார், தனது ஆவணமாக்கிக் கொள்வதற்காகத் தான் அந்தப் பெண்ணைப் படம் பிடித்ததாகவும், அதனை அவரும் விரும்பியதாகவும் கூறினார்.

 

இந்த விவகாரத்தில் தனது கருத்தை முதலமைச்ச‌ரிடம் தெரிவித்துவிட்டதாகவும், தனது செயல் பலரது மனதை புண்படுத்திவிட்டதால் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகியதாகவும் சோம்யா குர்ஜார் விளக்கமளித்தார்.

Published in இந்தியா

இந்தியாவை சேர்ந்த சமூக சேவகி ஒருவர் ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்டுள்ளார். கொல்கத்தாவை சேர்ந்த ஜூடித் டிசோசா என்ற என்ற பெண் ஆப்கானிஸ்தானில் உள்ள அறக்கட்டளையில் பணியாற்றி வந்தார். பணி முடித்து வீடு திரும்பி கொண்டிருந்த அவர் காபூலில் உள்ள தாய்மனி என்ற இடத்தில் மர்மநபர்களால் கடத்தப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் வெளியான உடன் காபூலில் உள்ள இந்த தூதரக அதிகாரிகள் ஆப்கன் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அவரை பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இத்தகவலை டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கொல்கத்தாவில் உள்ள அப்பெண்ணின் குடும்பத்தினரையும் சந்தித்து நிலைமை குறித்து அவ்வப்போது விளக்கி வருவதாகவும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூறினர்.

இதே போல் சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தை சேர்ந்த பாதிரியார் காபூலில் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Published in உலகம்

மக்களுக்கு இடையூறு செய்யும், யானை, குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகளை கொல்லலாம் என மத்திய வன விலங்கு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு மத்திய பெண்கள் நலத்துறை அமைச்சர் மேனகா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கி மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாகவும், இந்த அனுமதியை மத்திய அமைச்சகம் ஏன் வழங்கியது என தெரியவில்லை எனவும் மேனகா கூறினார்.

Published in இந்தியா

கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் விஜய், சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் இறைவி.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படம் பெண்களின் பெருமைகளை எடுத்துக் கூறும் என்று படக்குழு விளம்பரம் செய்திருந்தது.

இந்நிலையில் இறைவி பெண்களை பெருமைப்படுத்தியதா? ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.

இந்த வருடம்

இறைவி இந்த வருடத்தின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று. விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி தங்கள் நடிப்பால் நம்மைக் கவர்கின்றனர்.

எல்லாப் புகழும் கார்த்திக் சுப்புராஜ்க்கே என்று கிறிஸ்டோபர் பாராட்டியிருக்கிறார்.

கிளைமாக்ஸ்

படத்தை இனிதாக முடிக்க எத்தனையோ வழிகள் இருந்தும் மோசமான ஒரு கிளைமாக்ஸைக் கார்த்திக் சுப்புராஜ் தேர்ந்தெடுத்துள்ளாரே? என்று கார்த்திக் வருத்தப்பட்டிருக்கிறார்.

வார்த்தைகளால் விவரிக்க

சில படங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது அதில் இறைவியும் ஒன்று என்று அருண் ரமேஷ் பாராட்டியிருக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ்

இறைவி கார்த்திக் சுப்புராஜ்க்கு பொருத்தமான படம். அனைவரின் நடிப்பும் அழுத்தமாக இருந்தது என்று ராஜேஷ் செல்வராஜ் பாராட்டியிருக்கிறார்.

பயங்கரம்

இறைவியில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா இருவரும் தங்களுடைய நடிப்பால் மிரட்டுகின்றனர் என்று அக்ஷய் பாராட்டியிருக்கிறார்.

இதுபோல மேலும் பல ரசிகர்களும் படம் நன்றாக இருக்கிறது என சமூக வலைதளங்களில் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

Published in சினிமா

பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியில், விசுவ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.) அமைப்பின் சார்பில் பெண்களுக்கென பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸின் அங்கீகாரம் பெற்ற துணை அமைப்பான விசுவ ஹிந்து பரிஷத் நடத்திய இந்தப் பயிற்சி முகாமில் 100 பெண்கள் பங்கேற்கின்றனர்.

ஒரு பள்ளியில் நடைபெறும் இந்த முகாமில், அந்தப் பெண்களுக்கு தற்காப்புக் கலை மற்றும் துப்பாக்கி சுடுதல் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடும் திறனை வளர்த்துக் கொள்வதற்காக பெண்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுபற்றி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கமலா மிஸ்ரா என்பவர் கூறும்போது, தீவிரவாதிகள் பெண்கள் கையால் இறப்பதை விரும்புவதில்லை. அவ்வாறு கொல்லப்பட்டால் சொர்க்கத்துக்கு செல்ல முடியாது

என அவர்கள் நம்புகின்றனர் ' என்று தெரிவித்தார்.

இந்தப் பயிற்சிக்குப் பிறகு, தாங்கள் இன்னும் உறுதியானவர்களாக மாறுவோம் என்றும், தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிட முடியும் என்றும் பயிற்சியில் பங்கேற்ற பெண்கள் தெரிவித்தனர்.

அதே நேரத்தில், உத்தரப் பிரதேச தேர்தலை மனதில் கொண்டு, பாரதீய ஜனதா கட்சி இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…