JoomlaLock.com All4Share.net

Background Video

செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2016 00:00

நாடு முழுவதும் சர்வதேச யோகா தினம்

நாடு முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது.

பல்வேறு மாநிலங்களில் பல்வேறு மதத்தினர் ஒன்றுகூடி யோகா தினத்தை அனுசரிக்கும் விதமாக யோகா பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

சண்டிகரில் நடைபெறும் யோகா தின கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி யோகா பயிற்சியில் கலந்துகொண்டார். காலை 6.30 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், முதியவர்கள் என 30 ஆயிரம் பேர் திரண்டனர்.

யோகா தினத்திற்கு உலக நாடுகள் அனைத்தும் ஆதரவு அளித்துள்ளன. சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் யோகாவுக்கு ஆதரவு கிடைத்து வருகிறது. யோகாவின் பயன்கள் மற்றும் சக்தியை பலர் அறியாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்று மோடி பேசியுள்ளார்.

சண்டிகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 21 மாநிலங்களில் இருந்து பள்ளி குழந்தைகள் கலந்து கொள்ளும் விதமாக "ஒலிம்பியாட்" என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளது.

யோகாவை பிரபலப்படுத்துவோரை கவுரவிக்கும் வகையில், அடுத்த ஆண்டு (2017) முதல் சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் இரண்டு விருதுகள் வழங்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார்.

Published in இந்தியா
வெள்ளிக்கிழமை, 10 ஜூன் 2016 00:00

பிரதமர் மோடி டில்லி திரும்பினார்...

5 நாடுகள் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இன்று காலை டில்லி திரும்பினார். விமான நிலையத்தில் பா.ஜ., மூத்த தலைவர்கள் பிரதமரை வரவேற்றனர். ஆப்கன், கத்தார், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, மெக்சிகோ நாடுகளுக்கு பிரதமர் சென்றிருந்தார். பிரதமரின் இந்த பயணத்தின் போது ஆப்கனில் இந்தியா சார்பில் கட்டப்பட்ட அணையை திறந்து வைத்தார். என்.எஸ்.ஜி.,யில் இந்தியா உறுப்பினராக சுவிஸ், மெக்சிகோ ஆதரவு தெரிவித்தது. அமெரிக்காவில் ஒபாமாவை சந்தித்ததுடன், அந்நாட்டு பார்லிமென்டிலும் உரையாற்றினார்.

Published in இந்தியா

ஸ்மார்ட் போன்கள்  250 ரூபாயிலிருந்தே கிடைக்கின்ற  இந்த காலகட்டத்தில்  9 லட்சத்துக்கு ஒரு ஸ்மார்ட் போனை தயாரித்து  வெளியிட்டுள்ளது  இஸ்ரேலைச் சேர்ந்த சிரின் லேப்ஸ் என்ற நிறுவனம். இது லண்டனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த போன்தான் உலகிலேயே  அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போனாகும்.  இந்த விலைக்கு போன் வாங்குவதற்கு மாறாக ஒரு  செல்போன் கடையையே சொந்தமாக்கி கொள்ளலாம் என நினைக்க தோன்றுகிறதா!!  அப்படியென்ன மற்ற ஸ்மார்ட் போன்களில் இல்லாத அம்சங்களை இது கொண்டிருக்கும் என நினைப்பவர்களுக்கு பதில் கூறும் விதமாக  இதில் தகவல் தொடர்புகளைப் பாதுகாக்க உலக நாடுகளின் ராணுவ  துறையில்  பயன்படுத்தும் அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் இந்த செல்போன் வெளியாகியுள்ளது. இதுவரை வெளியான செல்போன்களில் இல்லாத அளவுக்கு, எந்தவிதமான சைபர் தாக்குதல்களைத் தாக்குப்பிடிக்கும் வகையிலும், தகவல்களைப் பாதுகாக்க அதிகபட்ச பாதுகாப்பு வசதிகளைக் கொண்டதாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

Sirin Labs
முக்கிய அம்சங்கள்:
  •  24 மெகாபிக்சல் கேமரா
  •  5.5 ஐபிஎஸ் LED 2k தீர்மானம், லேசர் ஆட்டோ ஃபோகஸ்
  • ஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆன்ராய்டு 5.1.1
  •   குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 810  செயலி
  • பேட்டரி: 4000 mAh
  • கை விரல் சென்சார்
  •  பாதுகாப்பு கேடயம் பாதுகாப்பு ஸ்விட்ச் செயல்படுத்தப்படுகிறது
  •  பாதுகாப்பான அழைப்புகள்  மற்றும்  என்கிரிப்சன் செய்யப்பட்ட மின்னஞ்சல்கள்
  • நினைவகம்: ரேம் 4GB, சேமிப்பு 128 ஜிபி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து

61-வது கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், நேற்று முன்தினம் இரவு இறுதிப்போட்டி நடந்தது. இத்தாலியின் மிலன் நகரில் அரங்கேறிய இந்த ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் கிளப்பும் (ஸ்பெயின்), அட்லெடிகோ மாட்ரிட் கிளப்பும் (ஸ்பெயின்) கோதாவில் இறங்கின. குழுமியிருந்த 70 ஆயிரத்திற்கு மேலான ரசிகர்களின் முன்னிலையில் இரு அணி வீரர்களும் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆடினர். நட்சத்திர வீரர்கள் அடங்கிய ரியல் மாட்ரிட் அணிக்கு எல்லா வகையிலும் அட்லெடிகோ ஈடுகொடுத்து ஆடியது. பந்து அதிகமான நேரம் அட்லெடிகோ (54 சதவீதம்) வசமே சுற்றி வந்தன.

ஆனால் ரியல் மாட்ரிட் வீரர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி அடிக்கடி அட்லெடிகோ கோல் கம்பத்தை முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர். 15-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் வீரர் டோனி குரூஸ் ‘பிரிகிக்’ வாய்ப்பில் உதைத்த பந்து காரெத் பாலேவின் தலையில் பட்டு கோல் நோக்கி பறந்தது. அப்போது அங்கு நின்ற சக வீரரும், கேப்டனுமான செர்ஜியோ ரமோஸ் பந்தை கோலுக்குள் திருப்பி ரியல் மாட்ரிட் அணிக்கு முன்னிலையை ஏற்படுத்தி தந்தார்.

வீணடிக்கப்பட்ட பெனால்டி

47-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் வீரர் பெப்பே, கோல் பகுதியில் வைத்து அட்லெடிகோவின் பெர்னாண்டோ டோரசை மிதித்து இடறி விட்டதால் அட்லெடிகோ அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இந்த பொன்னான வாய்ப்பை அட்லெடிகோ வீரர் கிரிஸ்மான் கோட்டை விட்டார். அவர் பந்தை கம்பத்தின் மேல் (பார்) பகுதியில் அடித்து சொதப்பினார்.

என்றாலும் மனம் தளராமல் போராடிய அட்லெடிகோ அணிக்கு 79-வது நிமிடத்தில் பலன் கிட்டியது. அட்லெடிகோ வீரர் ஜூவான் பிரான் தட்டிக்கொடுத்த பந்தை மாற்று வீரர் யாக்னிக் காரஸ்கோ கோல் போட்டு அசத்தினார். இதன் பின்னர் இரு வீரர்களும் கடுமையாக முயற்சி மேற்கொண்ட போதிலும் எதுவும் கைகூடவில்லை. வழக்கமான நேரம் முடிவில் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. இதையடுத்து தலா 15 நிமிடங்கள் வீதம் இரண்டு முறை ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் கோல் விழவில்லை.

ரியல் மாட்ரிட் சாம்பியன்

இதைத் தொடர்ந்து வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டம் பெனால்டி ஷூட்-அவுட்டுக்கு நகர்வது இது 7-வது முறையாகும். களத்தில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவியது. பெனால்டி ஷூட்-அவுட்டில் முதல் 3 வாய்ப்புகளை இரு வீரர்களும் கோலாக மாற்றினர். 4-வது வாய்ப்பை ரியல் மாட்ரிட் தரப்பில் செர்ஜியோ ரமோஸ் கோலாக்க, இந்த வாய்ப்பை அட்லெடிகோ வீரர் ஜூவான்பிரான் கம்பத்தில் அடித்து வீணடித்தார்.

இதன் பின்னர் காதை பிளக்கும் ஆர்ப்பரிக்கும் இடையே ரியல் மாட்ரிட்டின் 5-வது வாய்ப்பை முன்னணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ எளிதில் கோலாக்க, அந்த அணி வெற்றிக்கனியை பறித்தது. பெனால்டி ஷூட்-அவுட்டின் முடிவில் ரியல் மாட்ரிட் அணி 5-3 என்ற கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட்டை தோற்கடித்து மகுடம் சூடியது. சாம்பியன்ஸ் லீக் கோப்பையை ரியல்மாட்ரிட் ருசிப்பது இது 11-வது முறையாகும். வேறு எந்த அணியும் 7 முறைக்கு மேல் வென்றது கிடையாது. ஸ்பெயினைச் சேர்ந்த ஒரு கிளப் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை பெனால்டி ஷூட்-அவுட் மூலம் உச்சி முகர்வது இதுவே முதல் முறையாகும். அதே சமயம் 3-வது முறையாக இறுதிசுற்றுக்கு வந்த அட்லெடிகோ அணியின் கனவு இந்த முறையும் பொய்த்து போனது.

ஜிடேன் சாதனை

பிரான்ஸ் முன்னாள் கேப்டன் ஜிடேன், 5 மாதங்களுக்கு முன்பு ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார். குறுகிய காலத்திலேயே அணியை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்று இருக்கிறார். அத்துடன் ஒரு வீரராகவும் (2002-ம் ஆண்டில்), ஒரு பயிற்சியாளராகவும் இந்த கோப்பையை வென்ற 7-வது நபர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.

ரியல் மாட்ரிட் அணி வீரர்கள் நேற்று ஸ்பெயினுக்கு திரும்பினர். திறந்த பஸ்சில் வீதியில் வலம் வந்த வீரர்களுக்கு, ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் முயற்சியில் ஈடுபட்ட ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த மலை ஏறுபவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது கடந்த சில நாட்களில் அங்கு நிகழ்ந்த இரண்டாவது மரணமாகும்.

கடந்த சனிக்கிழமை அன்று மரியா ஸ்ட்ரிடோம் மலை உச்சியிலிருந்து கீழே திரும்பிக் கொண்டிருந்தபோது, ரத்தத்தில் பிராணவாயு அளவு குறைந்ததால் உயிரிழந்தார்.

இதற்குமுன், ஹாலந்து நாட்டை சேர்ந்த மலை ஏறுபவரான எரிக் ஆரி அர்னால்ட் உயிரிழந்தார்.

சுபாஷ் பால் என்ற இந்தியர் ஒருவர் கடந்த திங்களன்று உயிரிழந்தார். ஷெர்பா வழிகாட்டிகள் அவரை மலையிலிருந்து கீழே கொண்டு கொண்டுவர உதவிக்கொண்டிருந்த போதே அவர் உயிர் பிரிந்தது.

இச்சூழலில், அங்கு மேலும் இரு இந்தியர்கள் காணாமல் போயுள்ளதாக சொல்லப்படுகிறது.

பரீஷ் நாத் மற்றும் கவுதம் கோஷ் கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக காத்மாண்டுவில் உள்ள நேபாளா மலையேற்ற முகாமிலிருந்து வாங்சூ ஷெர்பா என்பவர் ஏ.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் 18 பேர் உயிரிழந்தார்கள்.

இந்த சம்பவத்திற்கு பிறகு, இரண்டாண்டுகள் கழித்து தற்போது எவரெஸ்ட் சிகரத்தில் முதல் மலை ஏறும் பருவம் தொடங்கியுள்ளது.

எவரெஸ்ட் சிகரத்தில் நிலவும் நல்ல பருவ நிலை மலை ஏறுபவர்களுக்கு ஏதுவாக இருப்பதால் கடந்த மே 11 ஆம் தேதியில் இருந்து இதுவரை 400 பேர் நேபாளம் வழியாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளனர்.

ஆனால், இந்த வார இறுதியில் ஏற்பட்ட இறப்புகள் மற்றும் காணாமல் போன சம்பவங்கள், உலகின் மிக உயரமான சிகரத்தின் ஆபத்துக்களை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றன.

Published in இந்தியா
பக்கம் 1 / 2
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…