JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

துபாயில் இருந்து மதுரைக்கு நேற்று வந்த விமானத்தில், தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. விமான பயணியரிடம் சோதனை செய்ததில், சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அபுதாகிர், 30, என்பவரிடம், 'சேவிங் பிளேடு' டப்பாவில் பிளேடு வடிவில், எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 259 கிராம் தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதிகாரிகள் பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர். சமீபகாலமாக, மதுரை விமான நிலையத்தில், கடத்தல் தங்கம் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. ஜன., 16ல், சிங்கப்பூரில் இருந்து வந்த பயணியின் காலுறையில், 7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரையில் நடைபெறும் நடிகர் கமல்ஹாசனின் முதல் அரசியல் கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கவுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் நாளை தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். இதற்காக இன்று அவர் ராமநாதபுரம் செல்கிறார்.

ராமேஸ்வரத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கும் அவர் மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அறிவிக்கவுள்ளார்.

இந்நிலையில் கமல்ஹாசனின் இந்த முதல் அரசியல் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கவுள்ளார். அரசியல் பயணத்தை தொடங்கவுள்ள கமல் தமிழகத்தில் உள்ள மூத்த அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார்.

இதனிடையே நடிகர் கமல்ஹாசனின் முதல் அரசியல் கூட்டத்தில் பங்கேற்க மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மகளிருக்கு ஸ்கூட்டருக்கான மானியம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கவும், தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வருகை தருகிறார் பிரதமர் மோடி.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதி சென்ன்னையில் மாலை நடைபெற இருக்கும், ஸ்கூட்டருக்கு மானியம் வழங்கும் திட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி வருகை தருகிறார்.

அடுத்து ஜைன சர்வதேச வர்த்தக அமைப்பான 'ஜித்தோ' சார்பில், நடைபெறவுள்ள சர்வதேச தொழில் மாநாட்டில் பங்கேற்கவுள்ளார். 'ஜித்தோ கனெக்ட்' என்கிற இந்த தொழில் மாநாட்டில், 25 நாடுகளைச் சேர்ந்த, இந்திய வம்சாவளியின், 3,500 தொழிலதிபர்கள் பங்கேற்கின்றனர்.

இதில், 1.5 லட்சம் பார்வையாளர்கள் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து பிப்ரவரி 25ம் தேதி, புதுச்சேரியில் உள்ள ஆரோவில் குடியிருப்பின் ஐம்பதாவது ஆண்டுவிழாவில் பங்கேற்க உள்ளார். அதன் பின்பு தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுச்செல்கிறார்.

ஏற்கனவே, சட்டசபையில் ஜெயலலிதா படத்திறப்பு விழாவில் படத்தை திறந்து வைக்க அழைப்பு விடுத்தும், அதில் மோடி பங்கேற்கவில்லை. இதனால் அந்த விஷயத்தை எதிர்க்கட்சிகள் பூதாகரமாக்கியது. இதனால், ஸ்கூட்டருக்கான மானியம் வழங்கும் திட்டத்தில் கலந்துகொண்டு அதை ஈடுசெய்ய பிரதமர் மோடியும், அதிமுக தலைமையும் முடிவெடுத்து இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


செவ்வாய்க்கிழமை, 20 பிப்ரவரி 2018 00:00

" நான் பூ அல்ல., விதை " - ஸ்டாலினுக்கு கமல் பதிலடி

தமிழக அரசியலில் காகித பூக்கள் மலரலாம்; ஆனால், மணக்காது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

நாளை(பிப்.,21) நடிகர் கமல் அரசியல் பயணம் துவங்க உள்ள நிலையில். தொண்டர்களுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதம்: தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சி காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது. திராவிட மொழி பெருமைக்கும், மக்கள் உரிமைக்கும் உணர்வூட்டும் ஆயிரங்காலத்து ஜீவாதார பயிர் திமுக. ஜீவாதார பயிரை பாதுகாக்கும் வேலியாக கோடிக்கணக்கான தொண்டர்களில் முன்னிற்கும் தொண்டனாக இருக்கிறேன்.பருவநிலை மாறும்போது சில பூக்கள் திடீரென மலரும். சில உதிரும். 

 

மாறி மாறி...

பல லட்சம் குடும்பங்கள் ஒன்றிணைந்து பாடும் கட்சிதான் திமுக. குடும்ப கட்சி என்று சொல்ல காரணம், பாசம் நிறைந்த கொள்கை உறவுகளாக உடன்பிறப்புகள் உள்ளனர். திமுக பேரியக்கத்தை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது. அரசியல் வாழ்வில் மகிழ்ச்சி தென்றலும், நெருக்கடி புயலும் மாறி மாறி வந்து போகும். அறிவாலயம் என்னும் பெயருக்கு ஏற்ப அதை அனுதினமும் தொழுதிடும் கோயிலாக தொண்டர்கள் நினைக்கின்றனர். 
எளியவர்களாக இருந்தாலும், கறுப்பு - சிவப்பு வேட்டி அணிவதில் கம்பீரத்தை வெளிப்படுத்துகிறார்கள். மாவட்ட வாரியாக நடக்கும் திமுகவினருடனான சந்திப்பு புதிய அனுபவமாக உள்ளது. திமுக வெற்றி பெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

 

என்னை முகர்ந்து பார்க்காதீர்கள்இந்நிலையில் கமல் மதுரையில் ஸ்டாலின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த கமல்; " நான் பூ அல்ல., விதை " என்னை முகர்ந்து பார்க்காதீர்கள், விதைத்து பாருங்கள், வளர்ந்து வருவேன் என அதிரடியாக பதில் கூறியுள்ளார். 

செவ்வாய்க்கிழமை, 20 பிப்ரவரி 2018 00:00

ஒடிசா முதல்வர் மீது செருப்பு வீச்சு

 ஒடிசா முதல்வர் பங்கேற்ற கூட்டத்தில் ஷூ வீசிய நபரை முதல்வரின் பாதுகாவலர்கள் பிடித்து விசாரித்தனர். இதன் மூலம் இரண்டாவது முறையாக முதல்வர் மீது காலணி வீச்சு சம்பவம் நடந்துள்ளது.

ஒடிசாவின் பர்கார்க் மாவட்டம் பீஜிப்பூர் சட்டசபை தொகுதிக்கு வரும் 24-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் பிஜூ ஜனதா தள கட்சி வேட்பாளரை ஆதரித்து நடந்த ஒரு பிரசார பொதுக்கூட்டத்தில் ஓடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பங்கேற்று பேசினார். அப்போது திடீரென பட்நாயக் மீது ஷூ பறந்து வந்தது. சட்டென சுதாரித்த பட்நாயக் விலகினார். அங்கிருந்த முதல்வரின் பாதுகாப்பு வீரர்கள் ஷூ எறிந்த நபரை பிடித்து கவனித்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இதே போன்று கடந்த ஜனவரி 31-ம் தேதி பாலேசோர் மாவட்டத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் நவீன் பட்நாயக் மீது பெண் ஒருவர் முதல்வர் மீது காலணியை வீசினார். அப்பெண்ணை அங்கிருந்தவர்கள் செமத்தியாக அடித்து உதைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பக்கம் 1 / 1880
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…