JoomlaLock.com All4Share.net

Background Video

சனிக்கிழமை, 22 டிசம்பர் 2018 00:00

ஜிஎஸ்டியில் மாற்றம் : சினிமா டிக்கெட் விலை குறைப்பு Featured

Written by 
Rate this item
(0 votes)

கம்ப்யூட்டர், சினிமா டிக்கெட், 'டிவி' உள்ளிட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி குறைக்கப்பட்டுள்ளது. அதனால், இவற்றின் விலை, வரும், ஜன., 1 முதல் குறைய உள்ளது.

ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி முறை, கடந்தாண்டு அறிமுகம் செய்யப் பட்டது. மத்திய நிதி அமைச்சர், அருண் ஜெட்லி தலைமையிலான, மாநில நிதி அமைச்சர்கள் உறுப்பினர்களாக உள்ள, ஜி.எஸ்.டி., கவுன்சில், அவ்வப்போது கூடி, இந்த வரி விகிதங்களில் மாற்றம் செய்து வருகிறது.

ஜி.எஸ்.டி., கவுன்சிலின், 31வது கூட்டம், டில்லி யில் நேற்று நடந்தது.இந்த கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவுகள் குறித்து,மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி கூறியதாவது:தற்போது, 28 சதவீத வரி விகிதத்தின் கீழுள்ள, ஆறு பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான, ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், 28 சதவீத வரி விதிக்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் எண்ணிக்கை, 28 ஆக குறைந்துள்ளது. அதேபோல், 18 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்த,33 பொருட்கள், 12 மற்றும் 5 சதவீதத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த வரி குறைப்பு, 2019, ஜன., 1 முதல் அமலுக்கு வருகிறது.டிஷ் வாஷர் எனப் படும் பாத்திரம் கழுவும் இயந்திரம், கியர்பாக்ஸ், கம்ப்யூட்டர் மானிட்டர், வீடியோ கேம்ஸ், பவர் பேங்க் எனப்படும் மொபைல் போன் சார்ஜ் செய்யும் கருவி, உடல் ஊனமுற்றோருக்கான கருவி, 'ஏசி, டிவி' உள்ளிட்டவை, 28 சதவீத வரி விகிதத்தில் இருந்து, 18சதவீதத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.

சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்களைத் தவிர, சில ஆட்டோ மொபைல் பாகங்கள் மற்றும் சிமென்ட் ஆகியவற்றின் வரியில், தற்போதைக்கு மாற்றம் செய்யப்படவில்லை. சிமென்ட் மூலம், 13 ஆயிரம் கோடி ரூபாய் வருமானமும், ஆட்டோ மொபைல் பாகங்கள் மூலம், 20 ஆயிரம் கோடி ரூபாயும் வருவாய் கிடைக்கிறது.

சினிமா டிக்கெட் மீதான, வரியும் குறைக்கப் பட்டு உள்ளது.100 ரூபாய்க்கு மேற்பட்ட டிக்கெட்டுக்கான வரி, 28ல் இருந்து, 18 சதவீதமாகவும், 100 ரூபாய்க்கு கீழுள்ள டிக்கெட்டுக்கான வரி, 18ல் இருந்து, 12 சதவீதமாக வும் குறைக்கப்படுகிறது. இதனால், ரூ.900 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.

Read 832 times

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…