JoomlaLock.com All4Share.net

Background Video

செவ்வாய்க்கிழமை, 29 ஜனவரி 2019 00:00

தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து ஏறுமுகம் Featured

Written by 
Rate this item
(0 votes)

தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.

இது குறித்து, இந்திய நகை விற்பனையாளர்கள் கூட்டமைப்பினர் கூறியதாவது: அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக பதற்றம் காரணமாக, தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என, முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். அதனால், தங்கத்தில் முதலீடு அதிகரித்து, விலை உயர்வுக்கு வழி வகுத்துள்ளது.

சர்வதேச சந்தையில், ஒரு அவுன்ஸ் தங்கம், 1,305 டாலரை எட்டியுள்ளது. உள்நாட்டில், இன்று(ஜன.,29), 10 கிராம் சுத்த தங்கம் விலை, 100 ரூபாய் அதிகரித்து, 33 ஆயிரத்து 750 ரூபாயாக உயர்ந்தது. தொழிற்சாலைகளும், நாணயம் தயாரிக்கும் நிறுவனங்களும் மீண்டும் அதிக அளவில் வெள்ளியை வாங்கி வருகின்றனர். இதனால், வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. 

இன்று, ஒரு கிலோ வெள்ளி விலை, 100 ரூபாய் அதிகரித்து, 41 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. டில்லியில், ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை, 25 ஆயிரத்து 700 ரூபாயாக உயர்ந்துள்ளது. திருமண காலம் என்பதால், தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

சென்னையில், ஒரு சவரன் ஆபரண தங்கம், 25 ஆயிரத்து 160 ரூபாய்; ஒரு கிலோ வெள்ளி, 43 ஆயிரத்து, 600 ரூபாய்க்கு விற்பனையானது.

Read 353 times

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…