JoomlaLock.com All4Share.net

Background Video

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2019 00:00

இன்று ஓணம் பண்டிகை எல்லையில் உற்சாகம் Featured

Written by 
Rate this item
(0 votes)

 ஓணம் பண்டிகையை ஒட்டி, கேரளா மற்றும் எல்லை மாவட்டங்களில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. குமரி மாவட்டம், தோவாளையில், நேற்று ஒரே நாளில், 1,000 டன் பூக்கள் விற்பனை ஆனது.மகாபலி சக்ரவர்த்தி, ஆவணி மாதம், திருவோண நாளில், மக்களை காண வருவதாக ஐதீகம். அவ்வாறு வரும் மன்னரை வரவேற்று, கேரள மக்கள் பாகுபாடுகள் மறந்து, ஓணத்தை கொண்டாடுகின்றனர். ஆவணி மாதம், அஸ்தம் நாளில் துவங்கி, 10 நாட்கள் கொண்டாட்டம் நடைபெறும்.

ஓணம் அன்று, புத்தாடை அணிந்து, கோவில்களில் வழிபாடு நடத்துவது வழக்கம். அனைத்து கோவில்களிலும் மூலவருக்கு மஞ்சள் வண்ண ஓண பட்டு அணிவிக்கப்பட்டு, வழிபாடு நடைபெறும். கேரளத்தின் எல்லை மாவட்டங்களான குமரி, கோவையில், ஓணம் பண்டிகை உற்சாகம் களைகட்டியுள்ளது. 

சபரிமலையில் இன்று, ஓண சிறப்பு வழிபாடுகளுடன், பக்தர்களுக்கு விருந்தும் வழங்கப்படுகிறது.குமரி மாவட்டத்தில், முக்கிய மலர் சந்தையான தோவாளையில், நேற்று ஒரே நாளில், 1,000 டன் பூக்கள் விற்பனையானது. பிச்சி, மல்லி பூக்கள், கிலோ ஒன்றுக்கு, 1,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

திற்பரப்பு, பத்மனாபபுரம், கன்னியாகுமரி போன்ற சுற்றுலா மையங்களில், மக்கள் குவிந்தனர்.* ரூ.2 கோடிக்கு விற்பனை திண்டுக்கல் பூ மார்க்கெட்டில், 128 கடைகள் உள்ளன. இங்கிருந்து, கேரளா மட்டுமன்றி, தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் பூக்கள் செல்கின்றன.

விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து, முகூர்த்த நாட்கள், ஓணம் பண்டிகையால், பூக்கள் விற்பனை, இரண்டு நாட்களாக களைகட்டியது. இதனால், 2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

Read 108 times

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…