JoomlaLock.com All4Share.net

Background Video

செவ்வாய்க்கிழமை, 05 மார்ச் 2019 00:00

தாஜ் மஹாலை பார்வையிட 3 நாள் இலவச அனுமதி

டெல்லி அருகேயுள்ள ஆக்ரா நகரில் யமுனை ஆற்றங்கரையில் தாஜ் மஹால் என்ற சலவைக்கல் காவியத்தை மனைவி மும்தாஜின் நினைவாக 17-ம் நூற்றாண்டில் உருவாக்கிய மொகலாய மன்னர் ஷாஜஹானின் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் 'உருஸ் விழா' நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஷாஜஹானின் 319-வது பிறந்தநாளையொட்டி வழக்கம்போல் இந்த ஆண்டும் அவரது சமாதியில் 3 நாட்கள் 'உருஸ் விழா' கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, வரும் ஏப்ரல் மாதம் 2,3 தேதிகளில் பிற்பகல் 2 மணிமுதல் மாலை 6 மணிவரையிலும், 4-ம் தேதி நாள் முழுவதும் பொதுமக்கள் தாஜ்மஹாலை இலவசமாக சுற்றிப்பார்க்க ஆக்ரா மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

Published in பொது
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…