JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

அ.தி.மு.க., சசிகலா, பெங்களூரு சிறையில் சொகுசு வசதிகளை அனுபவிக்க, ஹவாலா முறையில், இரண்டு கோடி ரூபாய் லஞ்சமாக தந்தது அம்பலமாகி உள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், கூடுதல் தண்டனை கிடைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் அளிக்கப்பட்டதை, டி.ஐ.ஜி., ரூபா, மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார்.

சசி,சொகுசுக்காக,ஹவாலா,மூலம்,ரூ.2 கோடி , கைமாறியது,அம்பலம்! சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா, கர்நாடகா தலைநகர் பெங்களூரில், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். Image result for sasikala's atrocities in bengaluru jail photos images

சிறையில் இருந்தாலும், தனி அறை, பார்வையாளர்களை சந்திக்க வரவேற்பு அறை, பிடித்த உணவுகளை சமைத்து வழங்க கைதிகளிலே உதவியாளர்கள், சமையலறை உள்ளிட்ட பல்வேறு சொகுசு வசதிகளுடன் அவர் வலம் வந்ததை, டி.ஐ.ஜி., ரூபா அம்பலப்படுத்தினார்.

இதற்காக, சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு சசிகலா தரப்பில், இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும், அவர் அறிக்கைஅளித்தார். இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, பெங்களூரு சிறையில் நடந்த விதிமீறல்கள் குறித்து, ஓய்வுபெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி வினய் குமார், பெங்களூரு மாநர குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ரவி, மைசூரு சிறை கண்காணிப்பாளர் ஆனந்த ரெட்டி ஆகியோர்விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்கள், முதற்கட்ட விசாரணைஅறிக்கையை, நாளை தாக்கல் செய்யவுள்ளதாக கூறப்படு கிறது.இதற்கிடையில், சசிகலாவின் அக்கா மகன், தினகரனின் நண்பரான மல்லிகார்ஜுனா விடம், இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், டில்லி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது, கர்நாடகா முன்னாள் அமைச்சரும், மாநில காங்., தலைவருமான, பரமேஸ்வரின் உதவியாளர் பிரகாஷ், தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனாவுடன் அடிக்கடி தொலைபேசி யில் பேசியது,விசாரணையில் தெரிய வந்தது.இதைத் தொடர்ந்து, பிரகாஷிடம் டில்லியில் விசாரணை நடந்தது.

அப்போது, சசிகலாவுக்கு, சிறையில் சொகுசு வசதிகள் செய்து தர, ஹவாலா முறையில், இரண்டு கோடி ரூபாய் கைமாறிய அதிர்ச்சி தகவலை அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. போலீசாரின் அடுத்த கட்ட விசாரணைகளில், சசிகலாவுக்காக, ஹவாலா பரிவர்த்தனை நடந்தது உறுதியானது.

ஹவாலா முறையில் கைமாறிய பணம், சசிகலா அடைக்கப்பட்டுள்ள, பரப்பன அக்ரஹாரா சிறையில், உயர்மட்ட அதிகாரிகள் முதல், கீழ் மட்ட காவலர்கள் வரை, தாராளமாக பகிர்ந்து அளிக்கப்பட்டதாக வும் தகவல்கள் கூறுகின்றன.

சிறையில் சசிகலாவை, பிரகாஷ் சந்தித்து பேசியதும், விசாரணையில் அம்பலமாகி உள்ளது. சிறைத்துறை, டி.ஐ.ஜி.,யாக இருந்த ரூபாவும், இந்த தகவலை உறுதி செய்துள்ளார். சசி மீதான புதிய குற்றச்சாட்டுகள், விசாரணை யில் உறுதி செய்யப்பட்டால், அவருக்கு கூடுதல் தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்ப தாக, சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இரட்டை இலை சின்னத்தை பெற்றதும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் உள்ளாட்சி தேர்தலுக்கு ரூ.160 கோடி ஒதுக்கியுள்ளதாகவும், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலை குறிப்பிட்ட தேதிக்குள் நடத்தக் கோரி திமுகவின் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பான உத்தேச காலஅட்டவணையை ஜூலை 26ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் மாநில தேர்தல்ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் தேர்தல் நடத்துவது சாத்தியமல்ல என்று தேர்தல் ஆணையம் கூறியது. இதனையடுத்து உத்தேச அட்டவணை தாக்கல் செய்யும் பட்சத்தில் அதற்கு ஏற்ப உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறி வழக்கு விசாரணையை ஜூலை 26ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இது குறித்து செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நிதியமைச்சர் ஜெயக்குமார், இரட்டை இலை சின்னத்தை பெற்றதும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று கூறினார். உள்ளாட்சி தேர்தலுக்கு ரூ.160 கோடி ஒதுக்கியுள்ளதாகவும், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இரட்டை இலை சின்னத்தினால் அதிமுக ஜெயிக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே வேறு சின்னத்தில் நின்றால் ஒரு ஓட்டு கூட தேறாது என்பதை என்பதை இப்படியா வெளிப்படையாக அமைச்சர் ஒத்துக்கொள்வது என்று கேட்கின்றனர் அதிமுக தொண்டர்கள்.


பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலவு கடக்கும் போது சூரியனின் ஒளியை நிலவு மறைத்து விடும் இந்த நிகழ்வுதான் சூரிய கிரகணம்.

இந்நிலையில், 99 ஆண்டுகளுக்கு பின்னர் தோன்றும் முழு சூரிய கிரகணம் தோன்றவுள்ளதாகவும் இதற்காக நாசா சில எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
ஆகஸ்ட் 21 ஆம் தேதி முழு சூரிய கிரகணம் தோன்றவுள்ளது. அந்த சமயத்தில் சூரியனின் விளிம்புகள் மட்டுமே தெரியும் என்றும் நாசா அறிவித்துள்ளது.
 
இதை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என்று நாசா எச்சரித்துள்ளது. உலகம் முழுவதும் வசிக்கும் 30 கோடி மக்களால் கிரகணத்தை பார்க்க முடியும் என நாசா தெரிவித்துள்ளது.

சிறை விதிமுறைகளை மீறிய காரணத்திற்காக சசிகலாவிற்கு, கூடுதல் தண்டனை கிடைக்கும் என்று டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். சசிகலா சிறையின் விதிகளை மீறியதாக குற்றசாட்டுகள் எழுந்தது.
 
இதற்கு தொடர்பான பல வீடியோக்களும் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பெங்களூரு சிறையில் சசிகலா விதிமுறைகள் மீறியது உறுதி செய்யப்பட்டால், அவருக்கு கூடுதல் தண்டனை வழங்கப்படும் என்று டிஐஜி ரூபா கூறியுள்ளார்.

மிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் 2வது சீசன் முதல் போட்டியில் திண்டுக்கல் அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் 2வது சீசன் இன்று (ஜூலை-22)தொடங்கியது. சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.

டாஸ் வென்ற தூத்துக்குடி அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய தூத்துக்குடி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான வாஷிங்டன் சுந்தர் 48 பந்தில் 69 ரன்களும், கவுசிங் காந்தி 33 பந்தில் 46 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இறுதியில், வந்த நாதன்(20), ஆனந்த் சுப்பரமனியன்(26) ரன்கள் எடுத்தனர்.

பின்னர் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. திண்டுக்கல் அணியில் கங்கா ஸ்ரீதர் 55 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விவேக் 13 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். 

தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. தூத்துக்குடி அணியில் 69 ரன்களையும் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திய வாஷிங்டன் சுந்தர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

பக்கம் 1 / 1651
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…