JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ஜெயலலிதா கொள்ளையடித்த பணம்' என்று பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது நடவடிக்கை பாயும் எனத் தெரிகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் சீனிவாசன் "மறைந்த முதல்வர் ஜெயலலிதா தன் வியர்வை, ரத்தம், பணம் ஆகியவற்றை கொடுத்து எங்கள் அனைவரையும் எம்.எல்.ஏ ஆக்கினார்.

ஆனால், ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை தினகரன் மூலம் 18 எம்.எல்.ஏக்களும் பெற்றுக்கொண்டு தற்போது மக்களை ஏமாற்றி வருகின்றனர்" என அவர் பேசினார். அதிமுக மேடையில் ஜெயலலிதா கொள்ளையடித்த பணம் என அமைச்சர் சீனிவாசன் பேசியது மேடையில் இருந்தவர்கள் மத்தியிலும், கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு, இந்த விவகாரத்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் என பலரும் கையில் எடுத்தனர். அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரனும் பேட்டியளித்தார். இந்நிலையில், ஓபிஎஸ் மற்றும் முதல்வர் பழனிச்சாமி தரப்பு இதுபற்றி ஆலோசனை செய்ததாம். சீனிவாசன் பேசியது தவறு..

பேச தெரியவில்லை எனில் சும்மா இருக்க வேண்டும். இவர்களை பற்றி தெரிந்துதான் அம்மா அவர்களை அடக்கி வைத்திருந்தார். இப்போது வாய்க்கு வந்த படி பேசியிருக்கிறார். திமுக உட்பட பலரும் நம்மை பார்த்து சிரிக்கின்றனர்.

அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நாமும் அதை ஏற்றுக்கொண்டது போல் ஆகிவிடும்' என பேசினார்களாம். எனவே, விரைவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது நடவடிக்கை பாயும் எனத் தெரிகிறது.

கட்சியை கலைத்து விட்டு வேறொரு கட்சியில் சேர தன்னிடம் ஒரு கட்சி பேரம் பேசியதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பகீர் பேட்டியளித்துள்ளார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மக்கள் நீதிமய்யம் தொடங்கி 100 நாட்கள் கடந்து விட்டது. கிராமங்களை மேம்படுத்த முதல் கட்டமாக 8 கிராமங்களை தத்து எடுத்துள்ளோம். அரசியல் சார்பில்லாத சமூக ஆர்வலர்களிடமிருந்து நான் பல விஷயங்களை கற்று வருகிறேன்.

ஊழலை முதலில் வேரறுக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். சிறையில் இருப்பவர் சுதந்திரமாக வெளியே ஷாப்பிங் செல்கிறார். 2 நாட்கள் அதை பற்றி பேசிவிட்டு பின்னர் மறந்து விடுகிறோம்.

எனக்கு லஞ்சம் கொடுக்க கூட ஒரு கட்சி பேரம் பேசியது. அவர்கள் கட்சியில் சேர ரூ.100 கோடி கொடுப்பதாக சொன்னார்கள். ஆனால், அதை நான் ஏற்க மறுத்துவிட்டேன். மக்கள் என்னைப் போன்றவர்களை நம்ப வேண்டும்.

இந்த மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என நான் விரும்புகிறேன்" என அவர் பேட்டியளித்தார்.

புதன்கிழமை, 20 ஜூன் 2018 00:00

இன்று சர்வதேச யோகா தினம்

பிரதமர் மோடியின் வேண்டுகோளின்படி, ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.நா. பொதுச்சபை அறிவித்தது. முதல்முறையாக, 2015-ம் ஆண்டு ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

4-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் ‘அமைதிக்கான யோகா’ ஆகும். இதையொட்டி, நாடு முழுவதும் சுமார் 5 ஆயிரம் இடங்களில் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய ஆயுஷ் அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து மாநில அரசுகள் இந்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.

வெளிநாடுகளில், இந்திய தூதரகங்கள் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.Image result for international yoga day images photos

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சுரிநாம் நாட்டில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளதால், அங்குள்ள பரமாரிபோ நகரில் அந்நாட்டு அதிபருடன் சேர்ந்து யோகா பயிற்சி செய்கிறார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மும்பையில் யோகா செய்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனில் வன ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் சுமார் 55 ஆயிரம் பேருடன் யோகா பயிற்சியில் ஈடுபடுகிறார். இதையொட்டி, அங்கு கமாண்டோக்கள் மற்றும் துணை ராணுவப்படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், லக்னோவிலும், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பெல்ஜியம் நாட்டு நாடாளுமன்ற வளாகத்திலும் யோகா பயிற்சி செய்கிறார்கள். இதுபோல், ஒவ்வொரு மத்திய மந்திரியும் ஒவ்வொரு நகரங்களில் பங்கேற்கிறார்கள்.

21 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள சியாச்சின் பனி சிகரத்தில் சுமார் 200 ராணுவ வீரர்கள் யோகா பயிற்சி செய்கிறார்கள். அதன் அடிவார முகாமில், சத்குரு ஜக்கி வாசுதேவ் ராணுவ வீரர்களிடையே பேசுகிறார்.

தலைநகர் டெல்லியில் 8 இடங்களில் யோகா பயிற்சி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சி, ராஜபாதையில் நடைபெறுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரம்மகுமாரிகள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில், பெண்கள், துணை ராணுவ படையினர் உள்பட சுமார் 50 ஆயிரம்பேர் பங்கேற்கிறார்கள்.

பதஞ்சலி யோகா சமிதி சார்பில் துவாரகாவிலும், வாழும் கலை மையம் சார்பில் ரோகிணி பகுதியிலும் யோகா நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

யோகா தினத்தையொட்டி, பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

யோகா என்பது நமது முனிவர்கள், மனித குலத்துக்கு அளித்த விலைமதிப்பில்லாத பரிசு. அது, உடலை கட்டுக்கோப்பாக வைக்கும் உடற்பயிற்சிகளின் தொகுப்பு மட்டுமல்ல, நமது சுகாதார உத்தரவாதத்துக்கான பாஸ்போர்ட் ஆகும். மனதை ஒருமுகப்படுத்தி, மனவலிமை அளிக்கிறது. எனவே, உலக மக்கள் யோகாவை தங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. Game feed photo
 
போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 22வது நிமிடத்தில் உருகுவே அணியின் நடசத்திர வீரர் லூயிஸ் சுவாரசு ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் உருகுவே அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
 
இதையடுத்து, ஆட்டத்தின் இறுதி வரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இறுதியில், உருகுவே அணி சவுதி அரேபியா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
 
இந்த ஆட்டத்தில் பெற்ற வெற்றி மூலம் உருகுவே அணி 2-வது சுற்றை நெருங்கியுள்ளது,  வெளியேறியது சவூதி அரேபியா . உருகுவேயின் நட்சத்திர வீரர் லூயிஸ் சுவாரசுக்கு இது 100-வது சர்வதேச போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகுவதாக, அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே அறிவித்தார்.
 
உலக நாடுகளில் அமைதியை கொண்டு வருவதில் அமெரிக்காவின் மனித உரிமை கவுன்சில் மிக முக்கியமான பங்கு வகித்து வருகிறது. இதில் பல முக்கிய நாடுகள் அங்கம் வகித்து வருகிறது.
 
இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறுகையில், ‘மனித உரிமைகள் துஷ்பிரயோகம் மற்றும் தன்னாட்சி அமைப்பு’போல செயல்படும் ஐநாவின் மனித உரிமைகள் அமைப்பு ‘மனித உரிமைகள் தொடர்பாக எடுக்கும் நடவடிக்கைகள் கேலிக்கூத்தாக உள்ளது. நாடுகளுக்கு இடையில் பாகுபாடு காட்டுகிறது’. இதனை கருத்தில் கொண்டு
 ஐ. நா. சபையின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது’ என்று கூறினார். 
 
சமீபத்தில் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. அதன்பின் ஈரான் உடன்படிக்கையில் இருந்தும் விலகியது. இந்த நிலையில் தற்போது ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பக்கம் 1 / 2058
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…