JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் நடிகர் கமல்ஹாசன் இன்று 2வது நாளாக ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

பிப்ரவரி 21ந்தேதி அரசியல் கட்சி குறித்து அறிவிப்பு வெளியிட்டு, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத் தில் முதல் கட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ள கமல் கடந்த 2 நாட்களாக தனது நற்பணி மன்ற நிர்வாகிகளை அழைத்து, அந்தந்த மாவட்ட நிலவரங்கள் குறித்து கேட்டறிந்து ஆலோசனை செய்து வருகிறார்.

நேற்று ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட நற்பணி மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசிய கமல் இன்று ஒரே நாளில் 27 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளை அழைத்து பேசி வருகிறார்.

இன்றைய கூட்டத்திற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 25 பேர் என்ற கணக்கில் 27 மாவட்டத்துக்கும் சேர்ந்த 625 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு சுற்றுக்கும் 3 மாவட்ட நிர்வாகிகள் வீதம் அழைக்கப்பட்டு ஆலோசனை நடைபெற்று வருகிறது.

 

செவ்வாய்க்கிழமை, 23 ஜனவரி 2018 00:00

நிறைவு பெற்றது சென்னை புத்தக கண்காட்சி

வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் புத்தகம் படிக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருவதாக அனைத்து ஆய்வுகளும் கூறி வரும் நிலையில் சென்னையில் இன்றுடன் முடிவடைந்த புத்தக கண்காட்சியில் கடந்த ஆண்டை விட அதிகளவு புத்தகங்கள் விற்பனையாகி சாதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு பள்ளியில் 41வது புத்தக காட்சி கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இந்த கண்காட்சியில் ரூ.15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற 40வது புத்தக கண்காட்சியில் ரூ.10 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையான நிலையில் இந்த ஆண்டு ரூ.15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது புத்தக ரசிகர்கள் அதிகரித்துள்ளதையே காட்டுகிறது. என்னதான் ஆன்லைன், டிஜிட்டலில் படிக்கும் வழக்கம் அதிகரித்தாலும் புத்தகம் படிக்கும் மன நிம்மதி எதிலும் கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய்க்கிழமை, 23 ஜனவரி 2018 00:00

பாஜக -சிவசேனா 29 ஆண்டு கால கூட்டணி முறிவு

 பா.ஜ.,வுடன் நீண்ட காலமாக இருந்த கூட்டணியை சிவசேனா கட்சி முறித்து கொண்டது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவுடன் பா.ஜ., நீண்ட காலமாக கூட்டணி அமைத்துள்ளது. தற்போதும், மத்திய அரசில் அக்கட்சி இடம்பெற்றுள்ளது. மாநிலத்தில் கூட்டணி அரசு நடந்து வருகிறது. ஆனால், சமீபகாலமாக மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜ., அரசின் முடிவை சிவசேனா விமர்சித்து வருகிறது. இதனால், இரு கட்சிகளுக்கு இடையில் விரிசல் ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில், வரும் 2019ம் ஆண்டு நடக்கும் சட்டபை மற்றும் லோக்சபா தேர்தலில் சிவசேனா தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் சஞ்சய் ராவத் கூறியுள்ளார். இதற்கான முடிவு கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இந்த தீர்மானத்தை சஞ்சய் ராவத் கொண்டுவந்தார். இதன் மூலம் 29 ஆண்டு கால கூட்டணி முடிவுக்கு வந்தது.

பெங்களூரு உயர் நீதிமன்றத்தில், நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பு மூலம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, அ.தி.மு.க.,வினர் தமிழகம் முழுவதும், வெற்றி விழா பொதுக்கூட்டங்களை நடத்தினர். 

அதே போல, 2 ஜி வழக்கில் இருந்து, தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி, முன்னாள் அமைச்சர் ராஜா ஆகியோர் விடுபட்டதும், தி.மு.க., சார்பில் தமிழகம் முழுவதும் வெற்றி விழா பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து கிளம்பினர்.
ஆனால், அவை அனைத்துக்கும், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தடை போட்டு விட்டார்

'இப்படித்தான், இடையில் பெறப்பட்ட ஒரு தீர்ப்பை வைத்து கொண்டாடிய ஜெயலலிதா, உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். அதற்காகத்தான், சசிகலா தண்டனையை அனுபவித்து வருகிறார். அதனால், கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வைத்து, கொண்டாடத் தேவையில்லை. அமைதியாகவே இருக்கவும். தேவையானால், மக்கள் பிரச்னைகளை வைத்து, தி.மு.க., நடத்தும் பொதுக்கூட்டங்களில் இடைச்சொருகலாக மட்டும், 2 ஜி வெற்றி குறித்து பேசவும்' என கூறியுள்ளார்.

11-வது இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி, மே 27ந்தேதி வரை நடத்த ஐ.பி.எல். நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இன்று முடிவு எடுக்கப்பட்டது.

இது குறித்து ஐ.பி.எல். தலைவர் ராஜீவ் சுக்லா டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது-

11-வது சீசன் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 7-ம்தேதி தொடங்கி, மே 25ம் தேதி வரை நடத்தப்படுகிறது. தொடக்க விழா நிகழ்ச்சி, ஏப்ரல் 6-ம்தேதி நடக்கிறது. சூதாட்ட சர்ச்சையில் சிக்கி 2 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தடைகாலம் முடிந்து இந்த ஆண்டு பங்கேற்கின்றன.

இந்த ஆண்டு சீசனில் போட்டி நடக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. போட்டிகளை ஒளிபரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலின் வேண்டுகோளுக்கு இனங்க நேரம் மாற்றப்பட்டுள்ளது.

வழக்கமாக முதல் போட்டி மாலை 4 மணிக்கு தொடங்கும் , அதற்கு பதிலாக மாலை 5.30 மணிக்கு தொடங்கும். 2-வது போட்டி வழக்கமாக 8 மணிக்கு தொடங்கும், அது மாற்றப்பட்டு, இனி இரவு 7 மணிக்கு தொடங்கும்.

போட்டி தாமதாகத் தொடங்குவதன் காரணமாக முடிவதிலும் தாமதம் ஏற்படுகிறது, மேலும், ஒளிபரப்பிலும் சிக்கல் வருவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த நேர மாற்றத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டது.

ஐ.பி.எல். தொடரின் முதல் ஆட்டமும், இறுதி ஆட்டமும் மும்பையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மொகாலியில் 4 போட்டிகளும், இந்தூரில் 3 போட்டிகளும் நடக்கின்றன.

2 ஆண்டுகள் தடைக்கு பின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாட வருகிறது, ஆனால், அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. வரும் 24-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. அந்த அணியும் போட்டிகளை ஜெய்பூரில் நடத்த கோரிக்கை விடுத்துள்ளது. நீதிமன்றம் அனுமதி கொடுத்தால், அங்கு நடத்தப்படும்

இவ்வாறு சுக்லா தெரிவித்தார்.

 
 
பக்கம் 3 / 1837
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…