JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

தமிழக‌த்தில் ‌தேமுதிக தலைமையில் ஆட்‌சி அமைந்தால் ‌விதவைகளு‌க்கும் முதியவர்களுக்கும் மாதம் தலா 2 ஆயிரத்து 500 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மக்களின் மீதான வரிச் சுமைகளும் குறைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். ஆல‌ந்தூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் சந்திரனை ஆதரித்து பேசுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக கறை படியாத ஆறு தலைவர்கள் ஒன்று சேர்ந்து விஜயகாந்த் தலைமையிலான கூட்டணி அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணிக்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நல்லெண்ண தூதுவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை இந்திய தடகள சங்கம் இன்று அறிவித்துள்ளது.

கிரிக்கெட் நாயகன் சச்சின், துப்பாக்கிச்சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா, பாலிவுட் நட்சத்திரம் சல்மான் கான் ஆகியோரைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது இந்திய அணிக்கான நல்லெண்ண தூதுவர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி தொடங்கி 21-ஆம் தேதி வரை பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறவுள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகளுடன் இந்திய அணி கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, ம.ந.கூட்டணியில் இருந்து சில கட்சிகள், தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கு வரலாம்" என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்தள்ளார்.

புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் தெரிவித்ததாவது:

"வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. - அ.தி.மு.க. அணிகளுக்கு போட்டி நிலவுகிறது. மக்கள் நலக்கூட்டணிக்கு மக்களிடையே ஆதரவு கிடையாது. ஆற கட்சிகள் உள்ள அந்த கூட்டணி, ஆறு இடங்களில் வெற்றி பெற்றாலே அதிகம்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தனியாகவே அறுதி பெரும்பான்மை பெறும். அல்லது திமுக காங்கிரஸ் கூட்டணி அறுதிப்பெரும்பான்மை பெறும். ஆனாலும் கூட்டணி ஆட்சி இருக்கும் என்று நினைக்கவில்லை. தவிர அது பற்றி கட்சித் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்.

தேர்தல் முடிவுக்குப் பிறகு, தற்போது ம.ந.கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள், தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு வரக்கூடும்" என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.

கச்சதீவில் தேவாலயம் அமைக்கும் இலங்கையின் திட்டத்தை மத்திய அரசு தடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். தமிழக் மீனவர்கள் கச்சதீவுக்கு செல்லும் உரிமையை திட்டமிட்டு இலங்கை அரசு பறிக்கிறது என வைகோ குற்றம் சாட்டியுள்ளார். மேலும் 1974-மாண்டு ஒப்பந்தப்படி இலங்கைக்கு வழங்கிய கச்சதீவை இந்தியா திரும்ப பெற வேண்டும் என வைகோ சென்னையில் நடைப்பெற்ற குடத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய அணி, தனது முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியுடன் மோதவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட ஆஸ்திரேலிய அணி, வரும் 2017-ல் இந்தியா வருகிறது. அதில் ஒரு போட்டியை பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் சதர்லேண்ட் தெரிவித்துள்ளார்.

இதற்கான திட்டங்கள் குறித்து இரு நாட்டு கிரிக்கெட் வாரிய அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும், பகலிரவு டெஸ்ட் போட்டிகளை இந்தியாவில் நடத்த பிசிசிஐ ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக, பிங்க் நிறப் பந்துகளுடன் கடந்த நவம்பரில் நடந்த முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் மோதின.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…