JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2016 00:00

மழைகாக நிர்வாணமாக நடக்கவிட்ட மக்கள்

கர்நாடகாவில் மழை வேண்டி சிறுவனை நிர்வாணமாக ஊருக்குள் நடக்கவிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. நிர்வாணமாக நிறுத்தப்பட்ட சிறுவன் மீது முதலில் நீர் தெளிக்கப்பட்டு சில பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து தலையில் சாமி சிலை வைக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். இந்த சம்பவத்தின் போது பெண்களும் கூட வருகிறார்கள். மேளங்களும் அடிக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டன. இந்த காட்சி கர்நாடகாவில் வேகமாக பரவி வருகிறது.

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2016 00:00

ஸ்ரீ ரங்கம் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்

திவ்ய தேசங்களான 108 திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம். காவிரி, கொள்ளிடம் ஆறுகள் இத்தலத்தைப் பூ மாலை போல் சுற்றிச் செல்வது இந்தத் தலத்துக்கு அபரிமிதமான இயற்கை அழகை வழங்குகிறது.

தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய கோபுரம் கொண்டது இத்திருக்கோயில். ஏழு மதில் சுவர்களும், 21 கோபுரங்களும் கொண்டது  இத்திருக்கோயில்.

ஸ்ரீரங்கம் மூலவர் ரங்கநாதப் பெருமாள் சயனத் திருக்கோலம் கொண்டவர். இந்த சிலா ரூபம் சுதையால் ஆனது. அதனால் மூலவருக்கு திருமஞ்சனம் கிடையாது. அதற்கு பதிலாக ஆண்டுக்கு ஒரு முறை தைலம் அதாவது எண்ணெய்ப் பூச்சு செய்வார்கள்.

இதற்கு ஏதுவான நாள் நட்சத்திரமாக கொண்டு ஜேஷ்டாபிஷேகம் என்று பெயரிட்டுள்ளனர். இவ்வாண்டு இந்த ஜேஷ்டாபிஷேகம் ஜூன் 19 ம் தேதி வருகிறது. பெருமாளின் திருமுகத்தையும், திருமேனியையும் சுத்தம் செய்து, தைலத்தை அழகாகப் பூசுவார்கள்.

பின்னர் திருமுகம் மட்டும் காட்சி அளிக்க, திருமேனியை வெளிக் காட்டாமல் மறைத்து விடுவார்கள். தொடர்ந்து நாற்பத்தெட்டு நாட்கள் மூலவர் தைலக்காப்பில் இருக்கும்பொழுது, உற்சவர் புறப்பாடு கிடையாது. நாற்பத்து எட்டு நாட்கள் நிறைவு பெறுவதை ஒட்டி, தொடந்து வரும் பத்து நாட்களுக்கு பெருமாளுக்குச் சாந்து காப்பு இடுவார்கள்.

இதுவும் தைலம்தான், என்றாலும் கெட்டியாக இருக்கும். இந்தக் காப்புகள் முடிந்த பின் பெருமாள் திருமேனி விகசித்து ஜொலிக்கும். இந்தப் பத்து நாட்கள் உற்சவர் புறப்பாடு உண்டு. தீபாவளித் திருநாளை ஒட்டி, ஸ்ரீரங்கநாதப் பெருமாளின் திருமுக தரிசனத்துடன் திருமேனி தரிசனத்தையும் முழுமையாக காணலாம் என்பது பக்தர்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சி அளிக்கும்.

புழல் காவாங்கரை பகுதியில் வசிப்பவர் அகில்நாத் (34). இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இன்று மாலை, அகில்நாத் அவரது வீட்டிற்கு அருகே உள்ள மைதானத்தில், அவரது நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது மூன்று மோட்டார் சைக்கிளில் 6 பேர், அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தனர். அவர்கள் அகில்நாத்தை சுற்றி வளைத்தனர். இதைக் கண்ட அவரது நண்பர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

அகில்நாத் அவர்களிடமிருந்து தப்பிக்க நினைத்து ஓடினார். ஆனால், அவரை விரட்டிய அந்த கும்பல், அவரை கால், தலை, கழுத்து ஆகிய பகுதிகளில் வெட்டினர். இதனால், அகில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

அதன்பின் அந்த கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டது. பட்டப்பகலில் நடந்த இந்த கொலையை பார்த்து அந்த பகுதி மக்கள் அதிரச்சியைடந்தனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த ஜனவர் 7ம் தேதி சிவாராஜ் என்கிற ரவுடி கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் அகில்நாத் 10வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். எனவே பழிக்கு பழி வாங்க, சிவராஜின் மைத்துனர் சந்துரு தலைமையில் வந்த கும்பல் அகில்நாத்தை வெட்டி சாய்த்துள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ள்து.

இந்த கொலை சம்பவம் காரணமாக, அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

பிரிட்டனின் தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜோ காக்ஸ் துப்பாக்கியால் சுடப்பட்டு, பின்னர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்வதா வேண்டாமா என்பதற்கான கருத்தறியும் வாக்கெடுப்புக்கான பிரசாரங்களை இரு தரப்பினரும் ரத்து செய்துள்ளனர்.

நாடாளுமன்றத்தின் தொழிற்கட்சி உறுப்பினரான ஜோ காக்ஸ், தான் ஒரு கூட்டம் நடத்திக் கொண்டிருந்த நூலகத்தின் வெளியே, சண்டை போட்டுக் கொண்டிருந்த இருவரிடையே தலையிட்டார் என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த இரண்டு நபர்களில் ஒருவர் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், காக்ஸ் அவருடன் போராடியபோது அவர் சுடப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் ரத்த வெள்ளத்தில் நடை பாதையில் விழுந்துகிடந்த நிலையிலும்கூட, தாக்குதலில் ஈடுபட்டவர் அவரை தொடர்ந்து கத்தியால் குத்தத் தொடங்கினார் என நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

இத்தாக்குதல் அவர் மீது குறிவைத்தே நடத்தப்பட்டது என்று வேறு சிலர் கூறுகின்றனர். இது குறித்து 52 வயது நபர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இச் சம்பவம் குறித்து மேற்கு யார்க்ஷயர் போலீஸ் மற்றும் குற்றவியல் துறை ஆணையர்கள் வெளியிட்ட அறிக்கையில், நேரில் பார்த்த பல சாட்சிகளிடம் போலீசார் விரிவான விசாரணை நடத்தியிருப்பதாகவும், கொலைக்கான காரணத்தைக் கண்டறிய முழு அளவிலான விசாரணை நடப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் டேவிட் கேமரன், கிப்ரால்டருக்கு செல்லவிருந்த தனது திட்டமிட்ட பயணத்தை ரத்து செய்துள்ளார். ஜோ காக்ஸ் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள டேவிட் கேமரன், ''ஜோ காக்ஸ் மரணம் ஒரு துயரச் சம்பவம். அவர், அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட, அக்கறை கொண்ட எம்.பி. அவரது கணவர் பிரேண்டன் மற்றும் இரண்டு இளம் குழந்தைகளுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள் '' எனக் குறிப்பிட்டுள்ளார்.

உள்துறை அமைச்சர் தெரஸா மே உள்பட மேலும் பல தலைவர்கள் ஜோ காக்ஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…