JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் 'சைத்தான்' திரைப்படத்தின் தெலுங்கு உரிமை 2 கோடிக்கு விலை போயிருக்கிறது.

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய விஜய் ஆண்டனி தற்போது முழு நேர நடிகராக உருவெடுத்துள்ளார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான 'பிச்சைக்காரன்' தமிழில் 15 கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது.

'பிச்சக்காடு' என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட இப்படம் 18 கோடிகளை தெலுங்கில் வசூலித்து புதிய சாதனையை படைத்தது.இதனால் விஜய் ஆண்டனியின் தெலுங்கு மார்க்கெட் ஒரேயடியாக உயர்ந்துள்ளது.

இதனால் அடுத்ததாக இவரின் நடிப்பில் உருவாகி வரும் 'சைத்தான்' படத்தின் தெலுங்கு உரிமையை, வேணு கோபால் என்னும் தெலுங்கு தயாரிப்பாளர் 2 கோடிகளை கொட்டிக் கொடுத்து வாங்கியிருக்கிறார்.

'நான்', 'சலீம்' வரிசையில் திரில்லர் படமாக உருவாகி வரும் சைத்தானை விஜய் ஆண்டனி சொந்தமாக தயாரித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக மீரா கிருஷ்ணன், அருந்ததி நாயர் இருவரும் நடித்து வருகின்றனர்.

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி வரும் இப்படத்திற்கு நாயகனான விஜய் ஆண்டனியே இசையமைத்து வருகிறார். வருகின்ற ஆகஸ்ட் மாதம் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'பிச்சைக்காரன்' மூலம் தெலுங்கிலும் தனது மார்க்கெட் உயர்ந்திருப்பதால், விஜய் ஆண்டனி தற்போது எக்கசக்கமான மகிழ்ச்சியுடன் வலம்வருகிறார்.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், புதிய கல்வி கொள்கையை வகுத்துள்ளது. பொதுமக்களின் கருத்துகளை அறிவதற்காக, அக்கொள்கையின் முக்கிய அம்சங்களை தனது இணையதளத்தில் நேற்று வெளியிட்டது.அதில், தற்போது, 8-ம் வகுப்புவரை அனைத்து மாணவர்களையும் கட்டாயமாக தேர்ச்சி பெறச் செய்வதை மாற்றி, 5 ம் வகுப்புவரை மட்டுமே 'ஆல் பாஸ்' திட்டம் பின்பற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், 8-ம் வகுப்புவரை அனைவரையும் தேர்ச்சி பெறச் செய்வதால் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படுவதால், இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது. அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தாங்கள் விரும்பினால், 5ம் வகுப்புவரை தாய் மொழி அல்லது பிராந்திய மொழியை பயிற்று மொழியாக கொண்டு, பாடங்களை கற்பிக்கலாம். அப்படி செய்தால், இரண்டாவது மொழி ஆங்கிலமாக இருக்கும். மூன்றாவது மொழியை, அரசியல் சட்டத்துக்குட்பட்டு, மாநில அரசு தேர்வு செய்யலாம். பள்ளி, பல்கலைக்கழக அளவில் சமஸ்கிருதம் கற்பிப்பதற்கான வாய்ப்பு பரவலாக்கப்படும்.அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கும் கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்த பரிசீலிக்கப்படும். கல்வித்துறையில் முதலீடு அதிகரிக்கப்படும். வெளிநாட்டு முன்னணி பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் அமைய ஊக்குவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை, மதுரை, சேலம், திருச்சி ரயில்வே மண்டலங்களில் ரூ.27 கோடியில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட உள்ளது. சிசிடிவி பொருத்துவது குறித்து செங்கோட்டையில் தெற்கு ரயில்வே மேலாளர் வசிஷ்ட ஜோஹ்ரி பேட்டியளித்துள்ளார். திருவனந்தபுரம், பாலக்காடு மண்டலங்களிலும் சிசிடிவி பொருத்தப்படும் எனவும் ஜோஹ்ரி கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் கொள்ளையர்களை பிடிக்க சென்ற போது, அவர்கள் தாக்கியதில், தலைமைக்காவலர் முனியசாமி பலியானார். அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முனியசாமி குடும்பத்தினரிடம் ரூ.1 கோடிக்கான காசோலையை முதல்வர் வழங்கினார். கல்விச்செலவை அரசே ஏற்றதற்கான அரசாணையை, முனியசாமியின் மகளிடம் முதல்வர் வழங்கினார்.

சென்னையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போது ஏற்பட்ட பாதிப்புகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என திமுக பொருளாளரும் எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ஸ்டாலின் அளித்த பேட்டியில், சென்னையில் வெள்ள பாதிப்புக்களை தடுக்க தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தமிழக மக்கள் தொகை 778 லட்சம் என்றால் காவல்துறையில் அனுமதிக்கப்பட்ட பலம் 1,21,014 பேர் மட்டுமே. அதிலும் 19,157 பணியிடங்கள் காலியாக கிடக்கின்றன. தமிழக காவல்துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்புவதுடன், நிலுவையில் உள்ள பல்வேறு பதவி உயர்வுகளையும் உடனடியாக வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…