JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாவட்ட வாரியாக முதல் 5 இடம் பிடித்த மாவட்டங்கள் மற்றும் கடைசி 5 இடம் பிடித்த மாவட்டங்களின் பட்டியலை காண்போம்....

முதல் 5 இடம் பிடித்த மாவட்டங்கள்

ஈரோடு - 98.48

கன்னியாகுமரி - 98.17

விருதுநகர் - 97.61

நாமநாதபுரம் - 97.10

தூத்துக்குடி - 96.96

கடைசி 5 இடம் பிடித்த மாவட்டங்கள்

வேலூர் - 86.49

விழுப்புரம் - 88.07

திருவண்ணாமலை - 89.03

கடலூர் - 89.13

திருவாரூர் -89.33

நீண்டகாலமாக நிலுவையிலிருந்த சிம்புவின் 'இது நம்ம ஆளு' மே 27ம் தேதி வெளியாகிறது. இதனை தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகியிருக்கும் அச்சம் என்பது மடமையடா படத்தின் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது தனுஷ் நடிப்பில் உருவாஜி வரும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் மும்முரமாக இருக்கும் கவுதம் மேனன் ஜூன் மாதம் 17-ந்தேதி அச்சம் என்பது மடமையடா படத்தின் பாடல்களையும், ஜூலை மாதம் 15-ந்தேதி படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளாராம்.

சென்னை: காமெடி கிங், மகான், ஆல் இன் ஆல் அழகுராஜா என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நகைச்சுவை நாயகன் கவுண்டமணி இன்று தனது 77 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

கவுண்டமணி பேசிய பல வசனங்கள் காலம் கடந்து இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினரும் அவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர்.

இந்நிலையில் கவுண்டமணியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் #hbdgoundamani என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி தங்களது வாழ்த்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் தாண்டி வேறு மொழியில் நடிக்காத கவுண்டமணியின் பிறந்த நாள் இன்று தேசிய அளவில் ட்ரெண்டடித்துக் கொண்டிருக்கிறது.ரசிகர்களின் பதிவுகளில் இருந்து ஒருசில வாழ்த்துகளை இங்கே பார்க்கலாம்...

ஆல் இன் அழகுராஜா

கவுண்டமணியின் புகழ்பெற்ற காமெடி வசனத்தை பதிவிட்டு கார்த்திகேயன் கவுண்டமணியை வாழ்த்தியிருக்கிறார்.

வசனங்கள்

கவுண்டமணியின் பல வசனங்கள் இன்றளவும் காலத்தைக் கடந்து நிற்பதை எடுத்துக் கூறி அவரை வாழ்த்தியிருக்கிறார் மனோ.

ரிசல்ட்

இன்று 10 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதற்கும் கவுண்டமணியின் வசனம் பொருந்திப் போவதை ஆச்சரியத்துடன் கூறி கவுண்டமணிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறியிருக்கிறார் கபாலி.

சினிமாவில்

சினிமாவில் இருந்து கொண்டு சினிமாத் துறையினரை கிண்டலடிக்க இவரால் தான் முடியும் என்று பதிவிட்டு கவுண்டமணியை வாழ்த்தியிருக்கிறார் கார்த்திக்.

இரட்டை வசனம்

இரட்டை வசனம் இல்லாமல் மக்களை மகிழ்வித்தவர் என்று யோகி வாழ்த்தியிருக்கிறார்.

இதுபோல ஏராளாமான ரசிகர்கள் வாழ்த்துவதால் ட்விட்டரில் தொடர்ந்து ட்ரெண்டடித்துக் கொண்டிருக்கிறது #hbdgoundamani ஹெஷ்டேக்.

15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று கூடியது. அவை கூடியதும், தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் பரஸ்பர வணக்கம் கூறிக் கொண்ட ருசீகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தமிழக அரசியல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், புதிய திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதல்வர் ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடப்பட்டது. ஆனால், அவர் பின்வரிசையில் அமர வைக்கப்பட்டார். இது சர்ச்சையை கிளப்பிய நிலையில், இச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்து ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதேபோல், தற்போது அவைக்கு வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் பரஸ்பர வணக்கம் கூறிக் கொண்ட சம்பவமும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் ஈரோடு மாவட்டம் முதலிடத்திலும், கடைசி இடத்தில் வேலூர் மாவட்டம் உள்ளது. 1. ஈரோடு- 98.48சதவீதம்2. குமரி-98.14சதவீதம்3. தூத்துக்குடி-96.93சதவீதம்4. நெல்லை-95.03சதவீதம்5. ராமநாபுரம்-97.01சதவீதம்6. விருதுநகர்-97.08சதவீதம்7. சிவகங்கை-96.66சதவீதம்8. தேனி-96.57சதவீதம்9. மதுரை-95.68சதவீதம்10. திண்டுக்கல்-92.57சதவீதம்11. உதகை-93.25சதவீதம்12. திருப்பூர்-95.62சதவீதம்13. கோவை-96.22சதவீதம்14. சேலம்-94.21சதவீதம்15. நாமக்கல்-96சதவீதம்16. கிருஷ்ணகிரி-95.05சதவீதம்17. தருமபுரி-94.77சதவீதம்

18. புதுக்கோட்டை-94.46சதவீதம்19. கரூர்-96.67சதவீதம்20. அரியலூர்-92.52சதவீதம்21. பெரம்பலூர்-96.52சதவீதம்22. திருச்சி-95.92சதவீதம்23. நாகை-89.43சதவீதம்24. திருவாரூர்-89.33சதவீதம்25. தஞ்சை-95.39சதவீதம்26. விழுப்புரம்-88.07சதவீதம்27. கடலூர்-89.13சதவீதம்28. திருவண்ணாமலை-89.03சதவீதம்29. காஞ்சிபுரம்-92.77சதவீதம்30. திருவள்ளூர்-90.84சதவீதம்31. சென்னை-94.25சதவீதம்32. வேலூர்-86.49சதவீதம்

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…