JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் இரு பெண்கள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள், 'அனைத்து வயது பெண்களை அனுமதிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கேரளா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பெண்கள், ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முயன்றனர். இதற்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கோவிலுக்குள் பெண்கள் நுழைய விடாமல் தடுத்தனர்.

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 2 பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய முயற்சி செய்தனர். அப்போது அங்கிருந்த பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்து அமைப்புகள் அவர்களை நுழைய விடாமல் தடுத்து எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் முயற்சியை கைவிட்டு அப்பெண்கள் திரும்பினர். இதனால் கோயிலில் மீண்டும் பரபரப்பு நிலவியது.

வெள்ளிக்கிழமை, 17 மே 2019 00:00

தமிழகத்தில் பரவலாக மழை

கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நெல்லை, விருதுநகர் , திண்டுக்கல், தேனி , நீலகிரி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது.

தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான செங்கோட்டை, விகேபுரம், சேரன் மாதேவி உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் மழை பெய்தது. மின்னல் தாக்கி இடி விழுந்த விபத்தில் அப்போது பட்டாசு ஆலை ஒன்றில் இருந்த அறை இடிந்து விழுந்தது.மேலும் வி கோவில்பட்டி பகுதியில் சுவர் இடிந்து விழுந்து 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாயின.

தேனி மாவட்டம் பெரியகுளம்,வடுகபட்டி, மேல்மங்கலம், லட்சுமிபுரம், தேவதானபட்டி, கும்பக்கரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்கிறது.

கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. திருச்சி சுற்றுவட்டாரத்தில் மழை மிதமான மழை பெய்தது.

சத்திய மங்கலம் அருகே சூறை காற்று வீசியதில் செண்பக புதூர் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் பகுதிகளில் மழை பெய்தது.

ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் சவுதாலாவின், 2 கோடி ரூபாய் சொத்துக்களை, அமலாக்கத்துறை முடக்கியது.ஹரியானா மாநில, முன்னாள் முதல்வர், ஓம்பிரகாஷ் சவுதாலா, 84; இந்திய தேசிய லீக் கட்சியின் மூத்த தலைவர்.இவர் மீது, 1993, மே, 24 முதல், 2016, மே 31 வரையிலான காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக, 6 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்துள்ளது.

இது மட்டுமின்றி, சவுதாலாவின் மகன்கள், அபய் சவுதாலா, 120 கோடி ரூபாய்; அஜய் சவுதாலா, 28 கோடி ரூபாய் மதிப்புக்கு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது, விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து, அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது.

இந்நிலையில், சவுதாலாவுக்கு சொந்தமாக, டில்லியில் உள்ள, பண்ணை வீடு மற்றும் வீடுகளை அமலாக்கத்துறை நேற்று முடக்கியது; இவற்றின் மதிப்பு, 1.94 கோடி ரூபாய்.ஏற்கனவே, 3 கோடியே, 68 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, அடுக்குமாடி குடி யிருப்புகள், வீட்டு மனைகள், ஏப்., 15ல், அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டது.

இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ம் தேதி துவங்குகிறது. இதற்கான பரிசுத் தொகை விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) அறிவித்தது. இதன் படி தொடரின் மொத்த பரிசுத்தொகை ரூ. 70.16 கோடியாக உள்ளது.

இத்தொடரில் 11 மைதானங்களில் 45 லீக் போட்டிகள் நடக்கவுள்ளன. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் அணிக்கு ரூ. 28 லட்சம் கிடைக்கும். லீக் சுற்றுடன் கிளம்ப உள்ள 6 அணிகளுக்கு தலா ரூ. 70 லட்சம் வழங்கப்பட உள்ளது.

புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு செல்லும். இதில் தோற்று வெளியேறும் இரண்டு அணிகளுக்கு தலா ரூ. 5.6 கோடி தரப்பட உள்ளது. பைனலில் தோற்கும் அணி ரூ. 14 கோடி பெறும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கோப்பையுடன். ரூ. 28 கோடி தரப்படும்.

நாடு முழுக்க இறுதிக்கட்ட நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.

லோக்சபா தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த லோக்சபா தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 11ம் தேதி முதற்கட்ட தேர்தல் தொடங்கியது. தேர்தல் அறிவிக்கப்பட்டத்தில் இருந்தே பிரச்சாரம் தீவிரமாக நடந்தது.

இரண்டாம் கட்ட தேர்தலின் போது தமிழகத்திலும் 18 சட்டசபை மற்றும் 38 லோக்சபா தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இன்னும் 118 தொகுதிகளில் தேர்தல் நடக்க வேண்டும். இதுவரை 6 கட்ட லோக்சபா தேர்தல் நிறைவடைந்துள்ளது. இதுவரை 484 தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளது.

இந்த நிலையில் வாரம் 7ம் கட்டமாக 8 மாநிலங்களில் 59 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்றோடு முடிகிறது. ஆம் ஒரு மாதமாக நடந்த தேர்தல் பிரச்சார கள திருவிழா இன்று முடிகிறது.

இன்று மாலை 5 மணியோடு நாடு முழுக்க இந்த பிரச்சாரம் முடிகிறது. தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பிரச்சாரமும் இன்று மாலையோடு முடிகிறது.

மேற்கு வங்கத்தில் நடந்த கலவரம் காரணமாக அங்கு நேற்றே பிரச்சாரம் முடித்துவைக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து மற்ற மாநிலங்களில் இன்று மட்டும் பிரச்சாரம் நடக்கும். இதனால கடைசியாக வாக்காளர்களை கவர கட்சிகள் பெரிய பெரிய பிரச்சார கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இன்று பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத், பிரியங்கா காந்தி ஆகியோர் கடைசி கட்ட பிரச்சாரம் செய்ய இருக்கிறார்கள். இந்த தேர்தலில் அதிக பிரச்சார கூட்டங்களை நடத்தியவர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.

அவர் 115க்கும் அதிகமான பிரச்சார கூட்டங்களை நடத்தி உள்ளார். அதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 100+பிரச்சார கூட்டங்களை நடத்தி உள்ளார்.

இந்த நிலையில் ஏப்ரல் மாதம் தொடங்கிய பிரச்சாரம் இன்றோடு முடிகிறது. 59 தொகுதிகளில் நாளை மறுநாள் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.வரும் மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

பக்கம் 5 / 2470
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…