JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
அட்லாண்டிக் கடலின் வடமேற்கில் உருவான ‘புளோரன்ஸ்’ என பெயரிடப்பட்ட புயல் கிழக்கு கடலோர பகுதிகளை தாக்கியது.
 
வடக்கு கரோலினாவில் ரைட்ஸ்வில்லே கடற்கரை பகுதியில் புயல் கரையை கடந்த போது பலத்த மழை கொட்டியது. மணிக்கு 110 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. கடும் மழை பெய்ததால், வடக்கு கரோலினா பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அங்குள்ள 2 ஆறுகளின் கரைகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.
 
இதனால் ரோடுகளில் 10 அடி உயரத்துக்கு மழை வெள்ளம் தேங்கியது. தண்ணீர் குடியிருப்புக்குள் புகுந்தது. பலத்த காற்று வீசியதால் மரங்கள் மின் கம்பங்கள் சாய்ந்தன. அதன் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் வடக்கு கரோலினா நகரம், அதை சுற்றியுள்ள பகுதிகளும் இருளில் மூழ்கின.  புயல் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 5 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியானது.
 
இந்நிலையில், புளோரன்ஸ் புயலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. வடக்கு கரோலினாவின் டப்ளின் கவுண்டி பகுதியில் 3 பேர் மழையில் சிக்கி உயிரிழந்தனர். மேலும், வடக்கு கரோலினாவில் 5 பேர் பலியாகினர்.
இதேபோல் தெற்கு கரோலினாவில் புயல் பாதிப்பில் சிக்கி ஒருவர் பலியானார்.
 
புயல் தாக்கிய வடக்கு கரோலினாவில் பல ஆயிரம் பேர் அவசர உதவி மையங்களில் தங்கியுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 17 லட்சம் பேர் வெளியேற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 8 லட்சம் பேர் மின்சாரம் இன்றி இருளில் தவிக்கின்றனர்.
 
அமெரிக்க அதிபர் டிரம்ப் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்ளும் 14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் இன்று தொடங்கியது. இன்று நடக்கும் முதல் போட்டியில் இலங்கை மற்றும் வங்காள தேச அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
 
துவக்க வீரர்கள் சரியாக சோபிக்காத நிலையில், அந்த அணியின் முசிப்கூர் ரஹிம், முகமது மிதுன் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தினால் அணியின் ஸ்கோர் கனிசமாக உயர்ந்தது. அதில் மிதுன் 63(68) ரன்களிலும், ரஹிம் 144 (150) ரன்களிலும் வெளியேற, இறுதியில் வங்கதேச அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 261 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் சார்பில் அதிகபட்சமாக லசித் மலிங்கா 4 விக்கெட்டுகளும், தனஞ்ஜெயா டி சில்வா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் இலங்கை அணிக்கு 262 வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
 
262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் உபுல் தரங்கா, குசால் மெண்டிஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். வங்கதேச அணியின் அபாரமான பந்துவீச்சின் மூலம், மெண்டிஸ் (0) ரன் ஏதும் எடுக்காமலும், உபுல் தரங்கா 27(16) ரன்களும், தனஞ்ஜெயா (0), குசால் பேரேரா 11(24) ரன்னிலும், தசுன் சானகா 7(22) ரன்னிலும், கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் 16(34) ரன்னிலும், திஷாரா பேரேரா 6(9) ரன்னிலும், சுரங்கா லக்மல் 20(25) ரன்னிலும், தில்ருவன் பேரேரா 29(44) ரன்னிலும், அமிலா அபோன்சோ 4 ரன்கலும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர்.
 
முடிவில் லசித் மலிங்கா 3 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் இலங்கை அணி 35.2 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக தில்ருவன் பேரேரா 29 ரன்களும், உபுல் தரங்கா 27 ரன்களும் எடுத்தனர். வங்க தேச அணியின் சார்பில் மோர்டசா, ரகுமான், ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ருபெல் ஹொசைன், மொசாட்டக் ஹொசன், சாகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் விஷயத்தில் கவர்னருக்கு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கவர்னருக்கு பரிந்துரை செய்தது. 

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பன்வாரிலால் புரோகித் அறிக்கை அனுப்பியுள்ளதாகவும், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்களை அடிப்படையாக வைத்து அரசியல் தலைவர்களும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். ஆனால் அறிக்கை அனுப்பியதாக வெளியான தகவலை கவர்னர் மாளிகை மறுத்துள்ளது.

இதுதொடர்பாக கவர்னர் மாளிகை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

7 பேர் விடுதலை தொடர்பாக நீதிமன்ற உத்தரவு மற்றும் தமிழக அமைச்சரவையின் பரிந்துரை நேற்றுதான் கவர்னர் மாளிகைக்கு வந்து சேர்ந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை கேட்டு மத்திய உள்துறைக்கு அறிக்கை எதுவும் அனுப்பப்படவில்லை.
 
7 பேர் விடுதலை விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டப்படி நியாயமான முடிவு எடுக்கப்படும். இது குறித்து ஆலோசனைகள் நடத்த வேண்டி உள்ளது. தேவைப்படும்போது தேவையான ஆலோசனைகள் நடத்தப்படும்.
கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள அருட்கன்னியர் இல்லத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறைமாவட்ட பேராயர் பிராங்கோ மூலக்கல் கற்பழித்ததாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் பிராங்கோ பலமுறை தன்னை கற்பழித்ததாக கன்னியாஸ்திரி குற்றம் சாட்டியுள்ளார்.
 
இந்த புகாரை வைக்கம் போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தை உரிய முறையில் விசாரிக்கவில்லை என்றும், வழக்கை நீர்த்து போகச்செய்ய போலீசார் முயல்வதாகவும் கூறி கொச்சியில் கத்தோலிக்க சீர்திருத்த அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பேராயர் பிராங்கோ மூலக்கல்லை கைது செய்ய வலியுறுத்தி சக கன்னியாஸ்திரிகளும் போராடி வருகின்றனர்.
 
இதைத்தொடர்ந்து பேராயர் பிராங்கோ மூலக்கல்லுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அதில், 19-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறப்பட்டு இருந்தது. பேராயருக்கு எதிரான புகாரை போலீசார் சரிவர விசாரிக்கவில்லை எனக்கோரி கேரள ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்,  வழக்கின் விசாரணையை 24-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
 
இதனால், கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள பேராயர்  பிரான்கோ முலக்கல்,  ராஜினாமா செய்துள்ளார். பேராயருக்கு எதிரான புகார், வாட்டிகன் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், பிரான்கோ முலக்கல் பதவி விலகியுள்ளார். 
இந்தியா, பாகிஸ்தான் உட்பட 6 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி துபாயில் இன்று தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில்  இலங்கை - வங்கதேச அணிகள் மோதுகின்றன.
 
இந்த நிலையில் 14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் இன்று (சனிக்கிழமை)  தொடங்குகிறது. வருகிற 28ஆம் தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் 6 அணிகள் பங்கேற்கின்றன. அதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம்,  ஆப்கானிஸ்தான், ஹாங் காங் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்ளும். இந்த 6 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 
 
”ஏ” பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும் ”பி” பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் தங்களுக்குள் லீக் சுற்றில் தங்களுக்குள் தலா ஒருமுறை மோதிக்கொள்ளும். இதில் பெற்ற புள்ளிகளின்  அடிப்படையில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் ”சூப்பர் 4” சுற்றுக்கு முன்னேறும். 
 
இதிலிருந்து இரு அணிகள் 28ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும். விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால், ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது. இன்று தொடங்கும் முதல் போட்டியில் இலங்கை - வங்கதேசம் அணிகள்  மோதுகின்றன.
 
இந்திய அணி வரும் 18ம் தேதி ஹாங்காங் அணியுடனும் அதற்கு மறுநாளே பாகிஸ்தான் அணியுடனும் மோதுகிறது. ஓராண்டுக்கு பிறகு  இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 19ம் தேதி மோதுவதால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு உள்ளது.
பக்கம் 6 / 2177
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…