JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியுள்ளதால் 100 அடி உயரத்தில் உள்ள மேல்மதகு ஷட்டரில் இருந்து தண்ணீர் கசிந்து வெளியேறுகிறது. அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணை முழுகொள்ளளவை விரைவில் எட்டும் என பொதுப் பணித் துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 120 அடி கொண்ட அணையில் சேறும் சகதியும் 15 அடிக்கு உள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பில்லூர் அணை நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டு பவானிசாகர் அணைக்கு வந்து சேர்ந்தது. 

அதிகபட்சமாக விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் வந்ததால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து சனிக்கிழமை மாலை நிலவரப்படி 102 அடியை எட்டியுள்ளது. 

தற்போது நீர் இருப்பு 19.7 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

அணையில் தற்போது நீர்மட்டம் 102 அடியாக உள்ள நிலையில் 100 அடி உயரத்தில் உள்ள ஷட்டரில் இருந்து நீர் கசிந்து கொண்டிருக்கிறது. நீரின் அழுத்தம் காரணமாக ஷட்டருக்கும், மதகுக்கும் இடையே உள்ள இடைவெளியில் நீர் கசிந்து வழிந்தோடுவது ஆபத்தை ஏற்படுத்தாது என பொதுப் பணித் துறையினர் தெரிவித்துள்ளனர். 

12 ஆண்டுகளுக்குப் பின்: கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பவானிசாகர் அணை 102 அடியை எட்டியுள்ளது. அதன்பிறகு 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் 102 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக இருந்தால் அணையின் முழுகொள்ளளவான 120 அடியை இம்மாத இறுதிக்குள் எட்டிவிடும் என பொதுப் பணித் துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இந்த கால்பந்து திருவிழாவில் நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன் பிரான்ஸ் அணி, குரோஷியாவை எதிர்கொள்கிறது. முன்னதாக வெண்கலப்பதக்கம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் பெல்ஜியம்- இங்கிலாந்து அணிகள் இன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் மோதின. Match video

லீக் சுற்றில் அதிக கோல்கள் அடித்த அணியான பெல்ஜியம், இந்த தொடரில் பிரமிக்கத்தக்க வகையில் விளையாடியது. கால்இறுதியில் முன்னாள் சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி அளித்தது. ஆனால் பெல்ஜியத்துக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போய் விட்டது. அரைஇறுதியில் பிரான்சிடம் ஒரு கோல் வாங்கி தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில்,  4-வது நிமிடத்திலேயே பெல்ஜியம் அணியின் வீரர் தாமஸ் மியுனியர் கோல் அடித்து அசத்தினார். இதனை சமன் செய்ய இங்கிலாந்து அணியினர் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்காமல் போனது. இதனால் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணி முன்னிலை வகித்தது.

அடுத்து தொடங்கிய இரண்டாவது பாதியின், 82வது நிமிடத்தில்பெல்ஜியம் அணியின் ஈடன் ஹசார்ட்  மேலும் 1 கோல் அடித்து அணியை 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப்படுத்தினார். இதனை சமன் செய்ய  இங்கிலாந்து அணியினர் போராடினர். ஆனால் ஆட்டத்தின் கடைசி நிமிடம் வரை அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெல்ஜியம் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று முன்றாவது இடம் பிடித்தது. இங்கிலாந்து அணி நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

இந்தப்போட்டியில் வென்று 3-வது இடத்தை பிடித்ததால் பெல்ஜியம் அணிக்கு ரூ.161 கோடியும், 4-வது இடத்தை பெற்ற இங்கிலாந்து அணிக்கு ரூ.148 கோடியும் பரிசுத்தொகையாக கிடைக்கும்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லாட்சில் இன்று  நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கன், பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி, இந்திய அணி முதலில் பந்து வீசியது.  இந்தப்போட்டியில், தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும் என்பதால், மிகவும் நேர்த்தியான துவக்கத்தை இங்கிலாந்து பெற்றது. அதேவேளையில், ரன்ரேட்டையும் கவனத்தில் கொண்டு சீரான வேகத்தில் அடித்து ஆடியது. 

துவக்க ஆட்டக்காரர்கள் ராய் (40 ரன்கள்), பெர்ஸ்டவ் (38 ரன்கள்), சராசரியான துவக்கத்தை அளித்தனர். இருந்த போதிலும், மூன்றாம் விக்கெட்டுக்கு களம் இறங்கிய ஜோ ரூட் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த போதிலும், ஜோ ரூட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேப்டன் இயான் மோர்கன் 53 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் பெவிலியன் திரும்ப, மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார். கடைசி கட்ட ஓவர்களில் அதிரடியாக பேட்டை சுழற்றிய டேவிட் வில்லி 31  பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோ ரூட் 113 ரன்கள் எடுத்து இருந்தார். இங்கிலாந்து அணி நிர்ணையிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து, 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ஷிகார் தவான் ஆகியோர் களமிறங்கினர். இதில் ரோகித் சர்மா 15(26) ரன்னிலும், தவான் 36(30) ரன்களும் எடுத்திருந்த நிலையில் கேட்ச் ஆகி வெளியேறினர். அடுத்து களமிறங்கிய லோகேஷ் ராகுல் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி ஏமாற்றினார். அவரைத்தொடர்ந்து கேப்டன் வீராட் கோலி 45(56) ரன்களிலும், சுரேஷ் ரெய்னா 46(63) ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்ததாக களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா 21(22) ரன்களும், உமேஷ் யாதவ் ரன் ஏதும் எடுக்காமலும், தோனி 37(59) ரன்களும், சித்தார்த் கெளல் 1(2) ரன்னிலும், சாஹல் 12(12) ரன்னிலும் வெளியேறினர். 

இறுதியில் குல்தீப் யாதவ் 8(26) ரன்கள் எடுத்து கடைசிவரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். இங்கிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக லியான் ப்ளன்கெட் 4 விக்கெட்டுகளும், அடில் ரஷித், டேவில் வில்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 86 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. 

சச்சின், ரேகா உள்ளிட்டோரின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து ராஜ்யசபாவுக்கு புதிய எம்பிக்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்தார்.

லோக்சபாவுக்கு தேர்தல் மூலம் உறுப்பினர்களை தேர்தல் ஆணையம் தேர்வு செய்து வருகிறது. அதேபோல் ராஜ்யசபாவுக்கு கட்சி சார்பில் உறுப்பினர்கள் நியமனம் செய்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் அறிஞர்கள், சாதனையாளர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், இலக்கியவாதிகள் என 12 பேரை எம்.பி.க்களாக நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு.

அதன்படி 2012-ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இந்தி நடிகை ரேகா, சமூக ஆர்வலர் அனு ஆகா, பழம்பெரும் வழக்கறிஞர் கே பராசரன் ஆகியோர் மாநிலங்களவை எம்பிக்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களது பதவிக்காலம் 6 ஆண்டுகள் இருந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது.

இவர்களுக்கு பதிலாக விவசாயிகள் சங்கத் தலைவர் ராம் ஷகல், எழுத்தாளர் ராகேஷ் சின்ஹா, சிற்பி ரகுநாத் மொஹபத்ரா, நடனக் கலைஞர் சோனல் மான்சிங் ஆகியோரை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இவர்களின் பதவிக்காலம் 2024-இல் முடிவடையும்.

திருப்பதியில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பாபிஷேகம் ஆக.,12 முதல் 16 வரை நடைபெற உள்ளது. 
இதனால், ஆக., 9 முதல் 17 வரை மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியிலிருந்து திருமலைக்கு வாகனம், மலைப்பாதை வழியாக பக்தர்கள் நடந்து செல்லவும் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

 

பக்கம் 7 / 2097
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…