JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்கள் குவித்து வருகின்றனர். இன்று மல்யுத்த போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
 
இந்நிலையில், மகளிருக்கான ப்ரீஸ்டைல் மல்யுத்த போட்டியின் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தங்கப்பதக்கம் வென்றார். அவர் இறுதிப்போட்டியில் கனடாவின் ஜெசிக்கா மெக்டொனால்டை வீழ்த்தினார்.
POSCOUNTRYTOTAL
1 Australia 71 53 56 180
2 England 37 38 39 114
3 India 23 13 17 53
4 Canada 14 39 26 79
5 South Africa 13 11 13 37

ஆண்களுக்கான மல்யுத்த போட்டியின் 125 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சுமித் மாலிக் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவர் இறுதிப்போட்டியில் நைஜீரியாவின் சினிவீ போல்டிக்கை எதிர்கொள்வதாக இருந்தது. ஆனால் நைஜீரியா வீரர் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதையடுத்து இந்திய வீரர் சுமித் மாலிக் தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். 

இதன்மூலம் இந்தியா 23 தங்கம், 13 வெள்ளி, 15 வெண்கலம் என மொத்தம் 51 பதக்கங்களுடன் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.

ஆன்லைன் வர்த்தகத்தில் அமேசான் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. அதேபோல், ப்ளிப்கார்ட், ஸ்னாப்டீல் போன்ற நிறுவனங்களும் ஆன்லைன் வர்த்தகத்தில் தனி முத்திரை படைத்துள்ளது. 
 
 ஆனால், ஆன்லைன் வர்த்தகத்தில் அமேசானுக்கு போட்டியாக இருப்பது வால்மார்ட் நிறுவனம். அமேசானை பின்னுக்கு தள்ள இந்நிறுவனம் ப்ளிப்கார்ட்டின் பங்குகளை வாங்கலாம் என திட்டமிட்டது. 
 
ஆனால், வால்மார்ட் நிறுவனத்துக்கு எதிராக ப்[ளிப்கார்ட்டின் ஒரு பங்கை 2 பில்லியன் டாலருக்கு வாங்க அமேசான் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
 
இதனால், வால்மார்ட் நிறுவனம் பிளிப்கார்ட் நிறுவனத்தை வாங்கி, வர்த்தக்ததில் முதல் இடத்தைப் பிடிக்க எண்ணிய கனவு கனவாகவே போய்யுள்ளது. 
 
ஆனால், இந்த விவகாரம் குறித்து ப்ளிப்கார்ட் எந்த ஒரு செய்தியையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.இன்றைய மகளிர் குத்துச்சண்டை 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மேரி கோம் தங்கம் வென்றார்.

வடக்கு அயர்லாந்தின் கிறிஸ்டியானாவை வீழ்த்தி தங்கம் வென்றார். இதன் மூலம் பதக்க வேட்டையில் இந்தியா முன்னேறி வருகிறது. 

கர்நாடகாவில் பாஜகவின் வாக்குவங்கி சதவீதம் அதிகரித்திருந்த போதும் காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பது சிரமம் என்றும் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்கின்றன.

காங்கிரஸ் கட்சி 90 முதல் 101 இடங்களில் வென்று தொங்கு சட்டசபை அமையவே வாய்ப்புகள் இருப்பதாகவும் கருத்துக்கணிப்பு சொல்கிறது. 224 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநிலத்திற்கு மே 12ல் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் அடுத்த 5 ஆண்டுகள் இந்த மாநிலத்தில் ஆட்சி நடத்தப் போவது யார் என்ற முடிவை மக்கள் தெரிவிக்க உள்ளனர்.

தென் மாநிலங்களில் பாஜக தனது பலத்தை நிரூபிக்கும் விதமாக கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்தக் கட்சியின் தேசிய செயலாளர் அமித்ஷா கர்நாடகா முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் 17 முதல் ஏப்ரல் 5 வரையிலான கால கட்டத்தில் பல்வேறு தரப்பு மக்களிடம் தேர்தல் குறித்து இந்தியா டுடே கார்வி இணைந்து கருத்துக்கணிப்புகளை நடத்தியுள்ளன. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இந்த முடிவின் படி கர்நாடகாவில் பாஜகவின் வாக்குவங்கியானது அதிகரித்திருக்கிறது. ஆனால் இந்த வாக்கு வங்கி அதிகரிப்பு சதவீதம் பாஜகவை ஆட்சியில் அமர வைக்காது என்றும் கூறுகிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் சுமார் 35 சதவீத வாக்காளர்கள் பாஜகவிற்கு வாக்களிப்பதாக தெரிவித்துள்ளனர்.

2013ல் எடியூரப்பா கட்சியை விட்டு விலகியதால் பிளவு ஏற்பட்டது, ஆனால் அதன் பின்னர் அவர் மீண்டும் பாஜகவில் சேர்ந்து தற்போது முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைந்த பாஜக 2013 சட்டசபை தேர்தலில் 33 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் கட்சி 122 இடங்களில் வெற்றி பெற்று 37 சதவீத வாக்குகளையும் பெற்றது. 

2018 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அதே சதவீதத்திலான வாக்குகள் கிடைத்தாலும் 90 முதல் 101 இடங்களை மட்டுமே வெல்ல முடியும் என்று கருத்துக்கணிப்பு சொல்கிறது. அதே சமயம் பாஜக கடந்த தேர்தலில் 50 இடங்களை மட்டுமே பிடித்த நிலையில் இந்தத் தேர்தலில் 78 முதல் 86 இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. எனவே கர்நாடகாவில் ஆட்சி அமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபையே அமையும் நிலை உள்ளது.


 

 

காமன்வெல்த் போட்டியின் விதிமுறைகளை மீறியதன் காரணமாக இந்திய விளையாட்டு வீரர்கள் இருவர் போட்டிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் தடகள வீரர்களான ராகேஷ் பாபு மற்றும் இர்பான் கொலாதும் ஆகியயோரது அறைகளில் ஊசிகள் கண்டெடுக்கப்பட்டதால் அவர்கள் இருவரும் காமன்வெல்த் போட்டியிலிருந்து  வெளியேற்றப்படுவதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து காமப்வெல்த் அமைப்பின் தலைவர் லுயிஸ் மார்டின் கூறும்போது, "இந்தியாவைச் சேர்ந்த தடகள வீரர்களான ராகேஷ் பாபு, இர்பான் கொலாதும் ஆகியோர் காமன்வெல்த் போட்டிகளில் விளையாட தடை செய்யப்படுகிறார்கள். உடனடியாக அவர்கள் தாய் நாடு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.

முன்னதாக தற்போது நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் நோ நீடில் பாலிசி (ஊசிகள் வேண்டாம்) விதிகளை மீறியதாக இந்தியா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது இரண்டாவது முறையாகும்.

கடந்த வாரம், காமன்வெல்த் போட்டியின் இந்திய பாக்சிங் அணியின் மருத்துவர் ஒருவர் ஊசிகளை பயன்படுத்தியதற்காக காமன்வெல்த் அமைப்பால் கண்டிக்கப்பட்டார்.

 இந்த நிலையில் இந்தியாவின் இரண்டு தடகள வீரர்கள் இதே குற்றச்சாட்டில் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பக்கம் 8 / 1970
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…