JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

தென்கொரிய நிறுவனமான சாம்சங் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி டிவி போன்ற சாதனங்களை தயாரித்து வருகிறது. மிகவும் பிரபலமான பிராண்டாக உள்ள சாம்சங் தனது விளம்பரம் ஒன்றில் செய்துள்ள பித்தலாட்டம் அம்பலமாகியுள்ளது. சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனையில் உலக அளவில் மிகப் பிரபலமாக விளங்குகிறது.

அதில் முக்கிய பங்கு ஸ்மாட்போன்களுக்கு உண்டு. சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கென்றே தனி ரசிகர்கள் உள்ளார்கள். இந்நிலையில் சாம்சங் நிறுவனம் மலேசியாவில் சமீபத்தில் வெளியிட்ட விளம்பரம் ஒன்றினால் சிக்கலில் சிக்கியுள்ளது. அதாவது சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஸ்டார் 8 மொபைலுக்காக மலேசியாவில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டது.

அந்த விளம்பரத்தில் கேலக்ஸி ஸ்டார் 8 மொபைலின் கேமராவின் தரம் குறித்து விளக்க அந்த ஸ்மார்ட்போன் மூலம் எடுக்கப்பட்டதாக புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டது.ஆனால் உண்மையில் அந்த புகைப்படம் டிஎஸ்எல்ஆர் கேமராவில் எடுக்கப்பட்டது என்று அந்த புகைப்படத்தை எடுத்த புகைப்பட கலைஞர் தெரிவித்துள்ளார். இதனால், வாடிக்கையாளர்களின் அதிருப்தியை சம்பாதித்ததோடு சர்ச்சையிலும் சிக்கியுள்ளது சாம்சங் நிறுவனம்.

வெள்ளிக்கிழமை, 07 டிசம்பர் 2018 00:00

அடிலெய்ட் டெஸ்ட் : ஆஸ்திரேலியா அணி திணறல்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி தயக்கமின்றி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.  இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் புஜாராவின் சதத்தின் உதவியுடன் 250 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.

இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரின் 3-வது பந்திலேயே இஷாந்த் சர்மா வீசிய பந்தில் ஆரோன் பிஞ்ச் போல்டு ஆகி வெளியேறினார். இதையடுத்து 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய உஸ்மான் காவ்ஜாவும், மார்கஸ் ஹரிசும் மிகவும் கவனத்துடன் பேட் செய்தனர். 
 
இந்த ஜோடி 45 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில் அஷ்வின்,  மார்கஸ் ஹரிசை அவுட் ஆக்கினார்.  அடுத்து வந்த வீரர்களான ஷான் மார்ஷ் (2 ரன்கள்), ஹாண்ட்ஸ்கோம்ப் (34 ரன்கள்) டிம் பெய்ன் (5 ரன்கள்) என சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 88 ஓவர்களுக்கு 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் சேர்த்துள்ளது.
 
டிராவிஸ் ஹெட் 61 ரன்களுடனும் மிட்செல் ஸ்டார்க் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் அஷ்வின் 3 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.  ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை விட முதல் இன்னிங்சில் 59 ரன்கள் பின் தங்கியுள்ளது. 
வெள்ளிக்கிழமை, 07 டிசம்பர் 2018 00:00

காஷ்மீரில் கடுங்குளிர் : டால் ஏரி உறைந்தது

காஷ்மீரில் ஸ்ரீநகரில் தால் ஏரி அமைந்துள்ளது. உலகளவில் பிரபலமான இந்த ஏரி, சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கம் ஆகும். அதனால்தான் இந்த ஏரி, காஷ்மீர் மகுடத்தில் வைரக்கல் என போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்புக்குரிய தால் ஏரியின் கரையோரப் பகுதி உறைந்து விட்டது.

அங்கு உயிரை உறைய வைக்கும் அளவுக்கு கடும் குளிர் நிலவி வருகிறது. காலை நேரத்திலும், மாலை நேரத்திலும் குழந்தைகளும், மூத்த குடிமக்களும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

நேற்று முன்தினம் ஸ்ரீநகரில் வெப்ப நிலை மைனஸ் 4 டிகிரியாக குறைந்து விட்டது. எனவே தால் ஏரி மட்டுமல்லாமல், பிற நீர் நிலைகளும் உறைந்து போய் உள்ளன. குழாய்த்தண்ணீரும் உறைந்து போய் உள்ளது.

தால் ஏரிக்கரையில் நின்று மக்கள், உறைந்த போன ஏரியில் கற்களையும், காகிதங்களையும் வீசி மகிழ்ச்சி அடைந்தனர்.

அதே நேரத்தில் குடிநீர்க்குழாயில் தண்ணீர் வராமல் குடி நீருக்கு மக்கள் அவதிப்படுகிற நிலையும் அங்கு நிலவுவதாக தகவல்கள் கூறுகின்றன.

வெள்ளிக்கிழமை, 07 டிசம்பர் 2018 00:00

5 மாநில தேர்தல்: குழப்பமான கருத்துக்கணிப்பு

சமீபத்திய 5 மாநிலங்களில் ஓட்டுப்பதிவு நடந்து முடிந்த நிலையில் பல்வேறு நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதில் ராஜஸ்தான், மிசோரமில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்றும், மத்தியபிரதேசத்தில் பா.ஜ,வே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று ஒருவித கணிப்பும், மற்றொரு நிறுவனம் நடத்திய கணிப்பில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்றும், சில கணிப்பில் இரு கட்சிகளும் அருகருகே பெரிய அளவில் வித்தியாசம் இல்லாத அளவிற்கு வெற்றி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கம் போல் குழப்பமான கணிப்புகளே வெளி வந்திருக்கிறது. தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் கட்சியே ஆட்சியே பிடிக்கும் என அனைத்து கணிப்புகளும் ஒன்று பட்டு சொல்லி இருக்கிறது. 

சபரிமலையில் பக்தர் கூட்டம் அதிகரித்து வருகிறது. நிறுத்தி வைக்கப் பட்டிருந்த அப்பம் தயாரிப்பு மீண்டும் தொடங்கி உள்ளது.  அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் சபரிமலை போராட்டக்களமானது. அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது.

பக்தர்கள் கூட்ட மாக பஜனை நடத்தவும், பா.ஜ., ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் தரிசனம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டது.இத்தகைய பிரச் னைகளால் இந்த ஆண்டு மண்டல சீசன் தொடக்கம் முதல் பக்தர்கள் கூட்டம் மிக குறைவாகஇருந்தது. வருமானம்மூன்றில் ஒரு பங்காக குறைந்தது.

கேரள உயர்நீதிமன்றம் மூன்று கண்காணிப்புக்குழுவை நியமித்ததோடு, போலீ சாரை கடுமையாக விமர்சித்தது. இதனால் சன்னி தானத்தில் போலீசாரின் கெடுபிடி குறைந்துள்ளது. லத்தி, கவசம் போன்றவற்றுடன் உள்ள போலீசாரை காண முடியவில்லை. இரவில் பஜனை நடத்து பவர்களை வளைத்து கைது செய்யவில்லை. தேவையில்லாமல் கூட்டமாகநின்று பரபரப்பு ஏற்படுத்தவில்லை. போராட்டக்காரர்களும் தங்கள் வேகத்தை குறைத்துள்ளனர்.

இதன் காரணமாக 5 நாட்களாக சபரிமலையில் கூட்டம் அதிகரித்து வருகிறது. வருமானம் அதிகரித்ததோடு, பிரசாத விற்பனையும் உயர்ந்துள்ளது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அப்பம் தயாரிப்பு நேற்று முன்தினம் இரவில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மண்டல கால கூட்டத்தை காண முடிகிறது. சபரிமலை பகுதியில் 144 தடை உத்தரவு இன்று இரவுடன் முடிகிறது. இது நீட்டிக்கப்படுமா என்பது பற்றி தகவல்கள் இல்லை.

பக்கம் 9 / 2289
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…