JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

புயல் பாதித்த மாவட்டங்களில் 100 டவர்கள் சேதம் அடைந்து உள்ளதாக பி.எஸ். என்.எல்., பொது மேலாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: புயல் பாதித்த அனைத்து மாவட்டங்களிலும் சேர்ந்து மொத்தம் 700 டவர்கள் இயங்கி வந்தன. இதில் தற்போது 100 டவர்கள் வரையில் சேதம் அடைந்துள்ளது. என கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2018 00:00

கொடைக்கானலுக்கு வாகனங்கள் செல்ல 2 நாள் தடை

கொடைக்கானல் மலைப்பகுதியில் கனரக வாகனங்கள் செல்ல இரண்டு நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதி கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

வத்தலகுண்டு கொடைக்கானல் பகுதியில் மீ்ட்பு பணிகள் நடைபெற்று வருவதால் இப்பகுதியில் கனரக வாகனங்கள் செல்ல இரண்டு நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மகாராஷ்டிராவின் பீமா கோரேகானில் நடைபெற்ற சாதிய வன்முறை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட ஐந்து செயல்பாட்டாளர்களில் ஒருவரான தெலுங்கு கவிஞர் வரவர ராவ் இன்று இரவு மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்டு 29 முதல் இவர் வீட்டுக் காவலில் இருந்தார். அவரை ஹைதராபாத்தில் இருந்து புனே கொண்டு செல்வதற்கான பிடி ஆணை மராத்தி மொழியில் இருந்ததால் அதை ரத்து செய்ய வேண்டும் என அவரது வழக்கறிஞர் முறையிட்டதை புனே நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்ததை அடுத்து இந்தக் கைது நிகழ்ந்துள்ளது.

இன்று இரவு 11 மணிக்கு விமானம் மூலம் ஹைதராபாத்தில் இருந்து அவர் புனே கொண்டு செல்லப்பட்டு, நாளை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர் செய்யப்படுவார் என்று காவல் துறை தங்களிடம் தெரிவித்ததாக அவரது குடும்பத்தினர் பிபிசி தெலுங்கு சேவையிடம் தெரிவித்துள்ளனர்.

"இந்தக் கைது சட்டவிரோதமானது. இடம் மாற்றுவதற்கான ஆணை செல்லாது என்று நேற்றுதான் நீதிமன்றம் கூறியது. அதன் அடிப்படையில் எப்படி கைது செய்ய முடியும். அவர்கள் புதிய கைதாணையையோ, உயர் நீதிமன்ற உத்தரவையோ காண்பிக்கவில்லை," என வரவர ராவின் உறவினர் வேணுகோபால், பிபிசி செய்தியாளர் தீப்தி பத்தினியிடம் தெரிவித்துள்ளார்.

 

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், பிரதமர் நரேந்திர மோதியை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் கூறி ஹைதராபாத்தில் வரவர ராவையும், அருண் ஃபெரேரா மற்றும் வெர்னன் கொன்சால்வஸ் ஆகியோரை மும்பையிலும், சிவில் உரிமைகளுக்கான மக்கள் யூனியனை (பியூடிஆர்) சேர்ந்த சுதா பரத்வாஜை ஹரியானாவிலும், டெல்லியில் பியூடிஆரை சேர்ந்த கெளதம் நவ்லாகாவையும் புனே காவல் துறையினர் ஆகஸ்டு இறுதியில் கைது செய்திருந்தனர்.

சனிக்கிழமை, 17 நவம்பர் 2018 00:00

ஒரே நாளில் 7 அடி உயர்ந்த அமராவதி அணை

புயலின் தாக்கத்தால் நேற்று பெய்த கனமழை காரணமாக உடுமலை அமராவதி அணை ஒரே நாளில் 7 அணை உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 13,382 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையின் நீர்மட்டம் 84.55 அடியாக உள்ளது. அணையில் இருந்து அதிக அளவில் நீர்வெளியேற்றப்பட உள்ளதால் அமராவதி அணையின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

சனிக்கிழமை, 17 நவம்பர் 2018 00:00

'கஜா' புயலுக்கு 46 பேர் பலி

கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை, 46 ஆக உயர்ந்துள்ளது. 1.28 லட்சம் மரங்கள், 30 ஆயிரம் மின் கம்பங்கள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் தொலைதொடர்பு சாதனங்கள் சின்னாபின்னமாகி உள்ளன. புயல் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில், தொற்று நோய் பரவலை தடுக்க, 203 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களை, கஜா புயல் புரட்டி போட்டுள்ளது. மரங்கள், சாலைகளில் முறிந்து கிடப்பதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மின் கம்பங்கள் சாய்ந்ததால், மின்சாரம் இல்லை. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.லட்சக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள், மா, பலா, வாழை, தென்னை, தேக்கு மரங்கள் சேதமடைந்ததால், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர், தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். மீன்பிடி படகுகள் ஏராளமாக சேதமடைந்துள்ளன.

இன்று (நவ.,17) மாலை வெளியான கணக்கெடுப்பின்படி, 26 ஆண்கள், 17 பெண்கள், மூன்று குழந்தைகள் என, மொத்தம், 46 பேர் இறந்துள்ளனர். 68 மாடுகள், 360 ஆடுகள், ஆறு எருமை மாடுகள் இறந்துள்ளன. 10 ஆயிரத்து, 124 குடிசைகள் பகுதியாகவும், 5,771 குடிசைகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.ஓட்டு வீடுகள், 3,164 பகுதியாகவும், 1,383 முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. 40 ஆயிரம் மின் கம்பங்கள், 1.28 லட்சம் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

 
இது குறித்து, சேலத்தில், முதல்வர் பழனிசாமி கூறியதாவது: புயல் காரணமாக, சாலையின் இரு புறங்களிலும் விழுந்துள்ள மரங்களை, அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. 30 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. 105 துணை மின் நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றை சரிசெய்ய, 10 ஆயிரம் ஊழியர்கள், கடலோர மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள், 1.77 லட்சம் பேர், 351 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான, அனைத்து வசதிகளையும், அரசு செய்து கொடுத்துள்ளது.
 
புயலில், கால்நடைகளும், வன விலங்குகளும் இறந்துள்ளன.வன விலங்குகள் இறப்பு குறித்து, வனத்துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர். கடலோர மாவட்டங்களில், 26 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுகின்றன. அவற்றில், 10 திட்டங்கள் சரிசெய்யப்பட்டு, மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. மற்றவையும், விரைவில் சரிசெய்யப்படும். அதுவரை, 'ஜெனரேட்டர்' வைத்து, குடிநீர் வழங்கும் பணியை, அரசு மேற்கொண்டுள்ளது.மக்களுக்கு தொற்றுநோய் வராமல் தடுக்க, 203 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 
435 நடமாடும் மருத்துவ வாகனம் அமைக்கப்பட்டு, மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவரை, 1.30 லட்சம் பேர், மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர். உணவு இல்லை என்ற நிலை, எங்கேயும் கிடையாது. மக்களுக்கு தேவையான உணவு வழங்க, ஏற்கனவே முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேவையான பால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பால் பவுடர், இருப்பு வைத்துள்ளனர்.துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். போர்க்கால அடிப்படையில், நிவாரண பணிகள் மேற்கொள்ள, அனைத்து நடவடிக்கைகளையும், அரசு எடுத்து வருகிறது. இவ்வாறு, முதல்வர் கூறினார்.
பக்கம் 2 / 2255
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…