JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வியாழக்கிழமை, 07 பிப்ரவரி 2019 00:00

டில்லியில் மாணவர்கள் மெகா பேரணி

சிறந்த கல்வியையும், வேலை வாய்ப்பினையும் வழங்கிட வலியுறுத்தி தலைநகர் டில்லியில் மாணவர்கள் அமைப்பினர் மெகா பேரணியை நடத்தினர்.

நாட்டில் பல்வேறு பல்கலை.மாணவ, மாணவிகள் இணைந்து '' இளம் இந்தியா தேசிய ஒருங்கிணப்பு' எனப்படும் குழுவை அமைத்துள்ளனர். இக்குழுவைச் சேர்ந்தவர்கள் தலைநகர் டில்லி செங்கோட்டையிலிருந்து,பார்லி. வளாகம் வரை மெகா பேரணியை நடத்தினர்.

கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், நடந்த பேரணியில் சிறந்த கல்வி வாய்ப்புகளையும், அரசு பணிகளில் கூடுதல் காலிப்பணியிடங்ளை உருவாக்கி வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 

வியாழக்கிழமை, 07 பிப்ரவரி 2019 00:00

ரஞ்சி கோப்பையை வென்றது விதர்பா

நாக்பூரில் இன்று முடிவுற்ற ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெறத் தேவையான 200 ரன்களை எடுக்க முடியாமல் சவுராஷ்ட்ரா அணி 58.4 ஓவர்களில் 127 ரன்களுக்கு மடிய விதர்பா அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடர்ச்சியாக 2வது முறையாக ரஞ்சி கோப்பையை வென்றுள்ளது.

விஸ்வராஜ் ஜடேஜா மிகப்பிரமாதமாகப் போராடி 52 ரன்கள் எடுத்து ஸ்பின்னர் சர்வடே பந்தை ஸ்வீப் ஆட முயன்று எல்.பி.ஆக 103/8 என்பதோடு சவுராஷ்ட்ரா அணியின் வெற்றி பெறுவதற்கான கடைசி நம்பிக்கையும் முறிந்தது.  இடது கை ஸ்பின்னர் சர்வடே 10 விக்கெட்டுகளை இந்தப் போட்டியில் கைப்பற்றினார்.

கடந்த ரஞ்சி சாம்பியன் அணி வெற்றிகரமாக தங்களது சாம்பியன் அந்தஸ்தை தக்க வைத்த வகையில் விதர்பா அணி 6வது அணியாகும். சர்வடே 157 ரன்களுக்கு 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும் பேட்டிங்கில் 2வது இன்னிங்சில் 49 ரன்கள் பங்களிப்பையும் செய்தார் சர்வடே.

மும்பையிடம் 2012-13-லும், பிறகு புனேயில் 2015-16 ரஞ்சி சீசனிலும் சவுராஷ்ட்ரா இறுதிப்போட்டியில் வந்து சாம்பியன் பட்டம் பெறாமல் போனது, இப்போது 3வது முறையாகும்.

காலிறுதி, அரையிறுதிகளில் டெஸ்ட் சுவர் செடேஸ்வர் புஜாரா அணியின் இதை விட பெரிய இலக்கை விரட்டி வெற்றி பெற்றுத் தந்தார், ஆனால் இம்முறை 2வது இன்னிங்சில் சர்வடே பந்து திரும்பும் என்று நினைத்தார் ஆனால் அது நேராக வந்து கால்காப்பைத் தாக்க டக்கில் எல்.பி.ஆனார்.

இன்றைக்கு 58/5 என்று தொடங்கிய சவுராஷ்டிரா ஸ்கோரை 88 வரை கொண்டு சென்றது. ஜடேஜாவும் மக்வானாவும் நிதானித்து ஆடினர். ஆனால் மக்வானா சர்வடே பந்தில் பவுல்டு ஆனார். பி.என்.மன்கர், வக்காரே என்ற ஸ்பின்னரிடம் எல்.பி.ஆனார். எல்.பி ஆனவர்கள் எல்லாம் பந்து திரும்பும் என்று ஆடி ஏமாந்தவர்களே. உனாட்கட், டி.ஏ.ஜடேஜா தாக்குப் பிடிக்கவில்லை. இருவரும் ஆட்டமிழக்க சவுராஷ்ட்ரா கனவு தகர்ந்தது.

ஆட்ட நாயகனாக ஆதித்யா சர்வடே தேர்வு செய்யப்பட்டார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது இளையமகள் திருமணத்திற்காக தனக்கு நெருங்கியவர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வரும் நிலையில் சற்றுமுன் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் இல்லத்திற்கு சென்றார். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடந்தது.

கமல்ஹாசனிடம் தனது மகளின் திருமண அழைப்பிதழை கொடுத்த ரஜினிகாந்த் கண்டிப்பாக திருமணத்திற்கு வருகை தரும்படி கேட்டுக்கொண்டார். அவரது வேண்டுகோளை கமல்ஹாசன் ஏற்றுக்கொண்டு திருமணத்திற்கு வருகை தர உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது மக்கள் நீதி மையத்தின் துணைத்தலைவர் டாக்டர்.மகேந்திரன் மற்றும் மக்கள் நீதி மையத்தின் உயர்மட்டகுழு உறுப்பினர் கமீலா நாசர் ஆகியோர் உடனிருந்தனர்.

பாஜகவின் எதிரிக்கட்சிகளில் ஒன்றாக இருந்து வரும் மதிமுக, பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் கருப்புக்கொடியும் காட்டி வருகிறது. அதுமட்டுமின்றி பொதுச்செயலாளர் வைகோ தினமும் அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று இருதரப்பிலும் கூறப்படுகிறது.

இருப்பினும் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் மதிமுக இருப்பதாக வைகோ கூறிக்கொண்டாலும் ஸ்டாலின் தரப்பில் இருந்து மதிமுகவை கூட்டணியில் இணைப்பது குறித்து எந்தவித உறுதிமொழியும் கொடுக்கப்படவில்லை. அப்படியே திமுக கூட்டணியில் மதிமுக இணைந்தாலும் ஒன்று அல்லது இரண்டு தொகுதிக்கு மேல் அந்த கட்சிக்கு ஒதுக்குவது கடினம்தான் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நிர்மலா சீதாராமனுடன் வைகோ இன்று சந்தித்தது பாஜக கூட்டணியில் மதிமுக சேருவது உள்பட பல்வேறு ஊகங்களை எழுப்பியுள்ளது

வியாழக்கிழமை, 07 பிப்ரவரி 2019 00:00

ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன் தொகைக்கான வட்டியான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம் குறுகியகால கடனுக்கான வட்டி விகிதம் 6.50 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக குறைந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

ரிசர்வ் வங்கியின் 6வது நிதிக் கொள்கை ஆய்வு கூட்டம் பிப்.5-ம் தேதி முதல் நடந்து வருகிறது. ரிசர்வ் வங்கி கவர்னராக சக்திகாந்த தாஸ் பொறுப்பேற்ற பிறகு நடந்த முதல் கூட்டத்தில், வட்டி விகிதம் குறித்த அறிவிப்புகள் இன்று வெளியிடப்பட்டன. டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் 2.2 சதவீதமாக குறைந்ததன் காரணமாக நிதிக்கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டு, ரெப்போ வட்டிவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

வட்டிவிகித குறைப்பை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய சக்திகாந்த தாஸ், 2019-20 நிதியாண்டில் ஜிடிபி 7.4 சதவீதமாக இருக்கும். 2019-20ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் நாட்டின் பணவீக்கம் 3.2லிருந்து 3.4 சதவீதமாக இருக்கும். காலாண்டு பணவீக்கம் 3.9 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. உலக ஏற்றுமதி சந்தையில் தேவை குறைந்ததன் காரணமாக 2018 நவம்பர் - டிசம்பர் மாதங்களில் ஏறக்குறைய குறைந்துள்ளது. 

வேளாண் கடன் அளவை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.6 லட்சமாக உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ஒட்டுமொத்த பணவீக்க உயர்வு மற்றும் வேளாண் உற்பத்தி உயர்வு காரணமாக இந்த கடன் தொகை ரூ.60,000 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சிறு விவசாயிகள் பெரும் பயனடைவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நடப்பு நிதி ஆண்டில் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் என இரண்டு முறை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.

 

பக்கம் 12 / 2363
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…