JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா விலகினால் நான் பதவி விலக தயார் என்று பொதுவாக்கெடுப்புக்கு முன்னரே அந்நாட்டு பிரதமர் டேவிட் கமெரூன் அறிவித்தார்.

அதுபோலவே, நடைபெற்ற வாக்கெடுப்பில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா விலக வேண்டும் என அதிக மக்கள் வாக்களித்ததால், கமெரூனும் தேர்தல் முடிந்தவுடன், மிகுந்த வருத்தத்துடன் மக்களின் முடிவை ஏற்றுக்கொள்கிறேன் என்றும் தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஊடகங்களுக்கு அறிவித்தார்.

அதன்படி, நாளை அவர் பதவி விலகவிருக்கிறார், இன்று தனது குடியிருப்பின் முன்னாள் வைத்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், எனது பிரதமர் பதவியை முடிக்கப்போகிறேன், மிகவும் நன்றி என்று கூறிவிட்டு, தனக்கு தானே ஹம் ஹம் என ஹம்மிங் எழுப்பிக்கொண்டு 10 எண் கொண்ட அறையை நோக்கி நடந்த செல்கிறார்.

டேவிட் கேமரூனை அடுத்து பிரித்தானியாவின் பிரதமராக தெரெஸா மே தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் புதன்கிழமை தெரெஸா மே பிரதமராக பதவியேற்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

டெல்லியில் காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தியை அக்கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு சந்தித்து பேசினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் நியமிப்பது தொடர்பாக குஷ்புடன் சோனியா ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு அடுத்த தலைவர் யார் என்ற போட்டி உச்சத்துக்கு வந்துள்ளது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ராஜினாமா செய்தபிறகு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள் எல்லோரும் ராகுல்காந்தி, சோனியா காந்தியை தனித்தனியாகச் சந்தித்துவருகிறார்கள்.

வசந்தகுமார், செல்வக்குமார், ராஜ்குமார், ஜெயக்குமார், தங்கபாலு, விஜயதாரிணி, கராத்தே தியாகராஜன் என பலரும் டெல்லி சென்று ராகுலைச் சந்தித்திருக்கிறார்கள். ராகுல் எல்லோரிடமும் பத்து பத்து நிமிடம் பேசியிருக்கிறார். பீட்டர் அல்போன்ஸ் மட்டும்தான் ராகுல், சோனியா இருவரையும் சந்தித்திருக்கிறார்.

இந்நிலையில், அகில இந்திய காங்கிரசின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரும், நடிகையுமான குஷ்பு ராகுல்காந்தியை இன்று டெல்லியில் சந்தித்தார். சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, தமிழக அரசியல் நிலைமை குறித்து ராகுல்காந்தியிடம் பேசியதாக கூறினார்.

என்னை தலைவராக நியமிப்பது குறித்து கட்சி மேலிடம்தான் முடிவு செய்யவேண்டும். கட்சித் தலைவராக நியமிப்பது என்று முடிவெடுத்தால் அதில் எனக்குச் சம்மதம் என்று கூறிய அவர் அதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது இல்லை என்றார். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த தலைவர் யார்? என்று சோனியாகாந்தி விரைவில் அறிவிப்பார் என்றும் கூறினார்.

குஷ்புவின் இந்த பேட்டியால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவருக்கான போட்டி களம் பரபரப்பாகியுள்ளது. இதுவரை, இந்தப் பந்தயத்தில் திருநாவுக்கரசு, பீட்டர் அல்போன்ஸ், கராத்தே தியாகராஜன் ஆகியோர் கடும்போட்டியில் இருந்தனர். இப்போது குஷ்புவும் இணைந்தார்.

இந்தநிலையில் காங்கிரஸ் கட்சித்தலைவி சோனியா காந்தியை அவரது இல்லத்தின் இன்று குஷ்பு சந்தித்து பேசினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் நியமிப்பது தொடர்பாக குஷ்புடன் சோனியா ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சோனியா காந்தியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, கட்சித்தலைவி சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாக கூறினார். காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி, ராகுல்காந்திக்கு ஆதரவாக மட்டுமே தாம் செயல்படுவதாகவும் குஷ்பு கூறினார்.

சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் சுவாதி. ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்துவந்த இவர், கடந்த மாதம் 24–ந்தேதி நுங்கம்பாக்கம் ரெயில்நிலையத்தில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையை அடுத்துள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற வாலிபரை கைது செய்தனர். பின்னர், இவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில், கொலை சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள், கொலையாளியை அடையாளம் காட்டும் விதமாக, ராம்குமார் மற்றும் பிற நபர்களை வரிசையாக நிற்கவைத்து அடையாள அணி வகுப்பு நடத்த போலீசார் முடிவு செய்தனர்.

இந்த அடையாள அணிவகுப்பை நடத்துவதற்கு ஒரு நீதிபதியை நியமிக்கும்படி, சென்னை எழும்பூர் தலைமை மாஜிஸ்திரேட்டிடம், நுங்கம்பாக்கம் போலீசார் மனு கொடுத்தனர். இந்த மனுவை விசாரித்த தலைமை மாஜிஸ்திரேட்டு, இந்த அடையாள அணிவகுப்பை நடத்த, சென்னையில் உள்ள மூத்த சிவில் நீதிபதியும், சைதாப்பேட்டை 9–வது குற்றவியல் கோர்ட்டு நீதிபதியுமான ஆர்.சங்கரை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின் அடிப்படையில், சென்னை புழல் சிறையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணி முதல் 2 மணி வரை அடையாள அணிவகுப்பு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை போலீசாரும், சிறை அதிகாரிகளும் மேற்கொண்டுவருவதாக கூறப்படுகிறது.

 திருநெல்வேலி, வீரவநல்லூரில் ஓடும் பேருந்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் இரண்டு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கொல்லப்பட்டவர்கள் யார் என்றும், கொலையாளிகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஐனநாயக ரீதியான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அது கூட்டமைப்பிற்குள் பிளவுகள் என்றில்லை. அவ்வாறான எந்தவித பிளவுகளுக்கும் கூட்டமைப்பிற்குள் இடமிருக்காது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக மாகாண சபை முதல் பாராளுமன்றம் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் அதனால் கூட்டமைப்பிற்குள் குழப்பம் அல்லது பிளவு என்று தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த முரண்பாடுகளின் தொடர்ச்சியாகத் தான் வவுனியாவில் அமைய இருக்கின்ற பொருளாதார மத்திய நிலையத்தின் இடத் தெரிவிலும் இரு பிரிவுகளாக கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நிற்பதாகவும் தற்போது வரை அந்த பொருளாதார மையம் அமைய இருக்கின்ற இடத் தெரிவானது பெரும் குழப்பத்தில் இருப்பதாகவும் பலராலும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இதனால் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு இடையில் குழப்பம் ஏற்பட்டிருக்கின்றது. அவர்களுக்கிடையில் பிளவு ஏற்படக் போகின்றது என்றும் முன்வைக்கப்படுகின்ற கருத்துக்கள் தொடர்பில் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவிடம் கேட்ட போது அவ்வாறான கருத்த வேறுபாடுகள் இருந்தாலும் கூட்டமைப்பிற்குள் பிளவுகள் எவையும் இல்லை என்று மறுத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐனநாயக ரீதியாக கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது. ஆகையால் ஐனநாயக அடிப்படையில் கட்சியிலுள்ள உறுப்பினர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இத்தகைய ஐனநாயக ரீதியான கருத்துக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் எப்போதும் இடமிருக்கும்.

அத்தகைய கருத்து வேறுபாடுகள் மட்டும் கூட்டமைப்பிற்குள் முரண்பாடோ அல்லது குழப்பமோ என்றில்லை. ஒவ்வொருவரும் தமது கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு உரித்துடையவர்கள். அதனால் அவர்கள் தத்தமது கருத்துக்களையே தெரிவித்து வருகின்றனர். இதுவே வவுனியா பொருளாதார மையம் அமைப்பதிலும் நடைபெற்று வருகின்றது.

இவ்வாறான நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்கமைய வவுனியா பொருளாதார மையம் அமைப்பது தொடர்பிலும் இறுதி முடிவுகளை எடுப்பதற்காக கூட்டமைப்பினராகிய நாங்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டு நிற்கின்றோம்.

அதனடிப்படையில் கூட்டமைப்பானது எப்போதும் ஒற்றுமையாகவே செயற்படும். அதே நேரம் கூட்டமைப்பிற்குள் பிளவுகள் ஏற்படுவதற்கும் எப்போதும் இடமிருக்காது. கூட்டமைப்பினராகிய நாங்கள் எப்போதும் ஒற்றுமையாகவே செயற்படுவோம். இதுவே எங்களது நிலைப்பாடு என்றும் மாவை சேனாதிராசா மேலும்

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…