JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

சுவாதி என்ற இளம்பெண் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்து 18 நாட்கள் ஆகியும் இந்த பரபரப்புக்கு இன்னமும் முடிவு வரவில்லை.

குற்றவாளியை பிடிக்க மிகவும் சிரமப்பட்ட இந்த வழக்கில் பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பின்னரும் இந்த வழக்கின் பரபரப்பு அடங்கவில்லை. இந்த கொலைக்கு காரணம் என்ன என்பது தான் தற்போது பெரும் குழப்பமாக உள்ளது.

ராம்குமார் தான் கொலை செய்தார், ஒருதலை காதல் தான் காரணம் என காவல்துறை தரப்பில் இருந்து தகவல்கள் கசிந்தன. ஆனால், உண்மையான குற்றவாளி ராம்குமார் இல்லை. வேறு யாரையோ காப்பாற்ற ராம்குமார் பலிகடா ஆக்கப்படுகிறார். ராம்குமார் இந்த கொலையை செய்யவில்லை, காவல்துறை இந்த வழக்கை விரைந்து முடிக்க ராம்குமாரை நிரந்தரமாக சிறையில் வைக்க முயற்சிப்பதாக புகார்கள் வருகின்றன.

இந்நிலையில் ராம்குமாருக்காக முதலில் ஜாமின் கேட்டு வாதாடிய வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தன்னிடம் ஒரு வயதான வழக்கறிஞர் ஒருவர் கூறியதாக ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

சுவாதி பெங்களூருவில் வேலை செய்தபோது அங்கு ஏற்பட்ட ஒரு தகராறு காரணமாக, அவரது குடும்பம் அங்கிருந்து இடம் பெயர்ந்து சூளைமேடு வந்தனர். சுவாதி தனது வீட்டில் இருந்து தினமும் ஒரு ஆட்டோவில் வழக்கமாக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு செல்வார். ஆட்டோவில் சுவாதி செல்லும் போது “நீங்க கேட்ட லேப்டாப்பை கொடுத்துட்டேன். பென் ட்ரைவையும் கொடுத்துட்டேன், இனியும் உங்களுக்கு என்ன பிரச்சினை, என்னை நிம்மதியாக இருக்க விடுங்க” என்று செல்போனில் சத்தமாய்ப் பேசியபடியே செல்வார். ரயில்வே காவலர்களிடம் இந்த தகவலை அந்த ஆட்டோ ட்ரைவர் கூறியுள்ளார்.

சுவாதியை செல்போனில் மிரட்டியவர் யார்?, அவருக்கும் இந்த கொலைக்கு தொடர்பு இருக்கிறதா என பல கேள்விகள் எழுகின்றன. இந்நிலையில் நேற்று புழல் சிறையில் ராம்குமாரை சந்தித்த வழக்கறிஞர்களில் ஒருவர் கூறும் போது, இந்த கொலை ராம்குமார் செய்தார் எனவும், அவர் இந்த கொலையை செய்ய ஒரு கருவியாக செயல்பட்டிருக்கலாம் எனவும் கூறியுள்ளார். ராம்குமார் கூலிப்படையாக செயல்பட்டிருக்கலாம் என அவர் சந்தேகம் எழுப்புகிறார். 

முன்னுக்கு பின் முரணாக செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன. ஆக .. புதிர்பாதைக்குள் நுழைந்து கொண்டிருக்கிறது சுவாதி கொலை வழக்கு.

மொபைல் பேங்கிங் ஆப்ஸ் பயன்படுத்தும் வங்கி வாடிக்கையாளர்கள் இனி பாஸ்வேர்ட் எனப்படும் ரகசிய குறியீட்டை எண்களை நினைவில் வைத்துக் கொள்ள அவசியமில்லை.

இதுவரை பயன்பாட்டில் இருக்கும் பாஸ்வேர்ட் முறையை மாற்றி விட்டு புதிய முறையை கையாள வங்கிகள் முடிவு செய்துள்ளன. இனி பாஸ்வேர்ட் முறைக்கு பதிலாக வாடிக்கையாளர்களின் கைரேகையை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யும் முறையை கொண்டு வர முடிவு செய்துள்ளன.

பயோமெட்ரிக் முறையில் வாடிக்கையாளர் பற்றிய சில தகவல்களை சேகரித்து வைக்க வங்கிகள் முடிவு செய்துள்ளன. உலகம் முழுவதிலும் பணபரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதாலும், ஒருவருக்கு பல வங்கிகளில் வங்கி கணக்கு இருப்பதால் பாஸ்வேர்டுகளை நினைவில் வைத்துக் கொள்வதில் ஏற்படும் குழப்பத்தை தவிர்க்கவும், பாதுகாப்பான பணபரிவர்த்தனையை மேற்கொள்ளவும் இந்த முறையை அறிமுகம் செய்ய வங்கிகள் தீர்மானித்துள்ளன.

இதில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து ஐசிஐசிஐ வங்கி, டிசிபி உள்ளிட்ட நிதித்துறை அமைப்புக்கள் ஆய்வு செய்து வருகின்றன. இதன் முதல்கட்டமாக மொபைல் பேங்கிங்கில் மட்டுமின்றி பயோமெட்ரிக் முறையில் இயங்கும் ஏடிஎம் இயந்திரத்தை டிசிபி வங்கி பெங்களூருவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் ஏடிஎம் கார்டு, டெபிட் கார்டு, பின் நம்பர் இல்லாமல் பணம் பெற முடியும்.

சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி., வளாகத்தில் ஆராய்ச்சி மாணவி மற்றும் போராசிரியரின் மனைவி ஆகிய இருவரும் ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரியை சேர்ந்தவர் மகேஸ்வரி.  சென்னை ஐ.ஐ.டி.,யில் தத்துவவியல் துறையில் பி.எச்.டி., படித்து வருகிறார். இவர் ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள சபர்மதி விடுதியில் இன்று துாக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இவர் திருமணமானவர், இவருக்கு 6 வயதில் ஒரு குழந்தையும் இருக்கிறது.

ஐ.ஐ.டி.,யில் பேராசிரியராக பணிபுரிபவர் கணேசன். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்கள் ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள பேராசிரியர்கள் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் விஜயலட்சுமி தனது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஐ.ஐ.டி.,யில் ஒரே நாளில் இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருவரின் உடல்களையும் கைப்பற்றிய கோட்டூர் புரம் போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். 

கோவையிலுள்ள காகித ஆலை அபகரிப்பு வழக்கு தொடர்பாக, சென்னை சேப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கு திருப்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு, கோவை மாவட்டம் கருமத்தம் பட்டியில் உள்ள காகித ஆலையை, உடுமலையை சேர்ந்த சீனிவாசன் என்பவர் விலைக்கு வாங்க ஒப்பந்தம் செய்திருந்தார். இந்நிலையில், ஆலை உரிமை யாளர் கிங்ஸ்லி, தனது தம்பியின் பங்கை அவருக்குத் தெரியாமல் ஒப்பந்தத்தில் சேர்த்துள்ளார்.

கிரயம் செய்யும் முன்பு பிரச் சினை ஏற்பட்டபோது, திமுக பிரமுகர்களிடம் பேச்சு நடத்தியுள் ளனர். ஜெ.அன்பழகன் எம்எல்ஏ., ஹன்ஸ்ராஜ் சரத் சக்ஸேனா ஆகியோர் தன்னை மிரட்டி, காகித ஆலையை அபகரித்ததாக உடுமலை நில அபகரிப்புப் பிரிவு போலீஸாரிடம் சீனிவாசன் புகார் அளித்தார்.

இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கு திருப்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…