JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

திமுக முன்னாள் எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான வீடு, மருத்துவ கல்லூரி மற்றும் மதுபான ஆலை உட்பட 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தற்போது அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான ஆலை, மருத்துவ கல்லூரி, தொழிற்சாலை, அலுவலகங்கள் உட்பட 40 இடங்களில் இந்த சோதனை நடக்கிறது. வரிஏய்ப்பு செய்ததாக வந்த தகவலையடுத்து வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

எம்.ஜி.ஆர். காலத்தில் அதிமுக எம்.பி.யாக இருந்தவர் ஜெகத்ரட்சகன். பின்னர் அவர் வீரவன்னியர் பேரவை என்ற தனிக்கட்சியை நடத்தி வந்தார். 2004-ம் ஆண்டு அந்த கட்சியை திமுகவுடன் இணைத்துவிட்டார் ஜெகத்ரட்சகன்.

இதனைத் தொடர்ந்து அவர் திமுக சார்பில் போட்டியிட்டு மத்திய அமைச்சராகவும் ஆனார். அப்போது அவரது வருமானம் மிக அதிகமாக உயர்ந்ததாக ஒரு சர்ச்சை எழுந்தது. அதேபோல் நிலக்கரி சுரங்க முறைகேடு மற்றும் மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கு அதிக பணம் பெற்றது என பல சர்ச்சைகளில் சிக்கியவர் ஜெகத்ரட்சகன்.

இந்த நிலையில் இன்று காலை முதல் ஜெகத்ரட்சகனின் வீடு, மருத்துவ கல்லூரி மற்றும் மதுபான ஆலைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மொத்தம் 40 இடங்களில் இந்த அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

இச்சோதனையில் சுமார் 27 கோடி ரூபாயை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்கள் பற்றி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இன்று நடைபெற்ற சோதனையில் சில முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. ஜெகத்ரட்சகன் சுமார் 200 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது குறிப்பிடதக்கது.

புதன்கிழமை, 13 ஜூலை 2016 00:00

ராணியாக மாறும் "சோனாக்ஷி சின்ஹா"

பாலிவுட்டில் வளர்ந்து வரும் முன்னணி நடிகை சோனாக்ஷி சின்ஹா. நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகளான இவர் வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். தற்போது முருகதாஸ் இயக்கத்தில் அகிரா என்ற படத்தில் ஒரு மிரட்டலான ரோலில் நடித்திருக்கிறார். சோனாக்ஷி, அடுத்தப்படியாக நூர் என்ற படத்தில் பத்திரிகையாளராக நடிக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியானது.இந்நிலையில் ராஜஸ்தானில் பிரபலமாக இருந்த ராணி ரத்னாவதியின் வாழ்க்கை படமாக உருவாக இருக்கிறது. இதில் சோனாக்ஷி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக இந்த வேடத்தில் நடிக்க முதலில் கரீனாவிடம் பேசப்பட்டதாகவும், அவர் மறுக்கவே இப்போது சோனாக்ஷி அந்த ரோலில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை அபாஸ் - மஸ்தான் இயக்க இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியிருக்கிறது.

பிரித்தானியாவில் குடிவரவு சட்டத்தில் மிகப் பெரிய மாற்றத்தை IMMIGIRATION ACT 2016 நிகழ்த்தியுள்ளது.

இச்சட்டம் மிகையான அதிகாரத்தை உள்துறை செயலகத்தின் (HOME OFFICE) அமுலாக்கும் அமர்வுக்கு (ENFORCEMENT UNIT) வழங்கியுள்ளது, அதனுடன் குடிவரவு விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனையும் வழங்குகின்றது.

வேலை பார்த்தல்

பிரித்தானியாவில் வேலை பார்ப்பதற்கு அனுமதி இல்லாமல் அல்லது குறிப்பிட்ட வேலை செய்வதற்கு விஷேட அனுமதி வழங்கி அவ்வேலை செய்யாமல் வேறாரு வேலை செய்தால், இச்சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கப்பட கூடிய குற்றமாகும்.

இச்சட்டத்தை மீறுபவர்களுக்கு சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்படும். அவ்வாறான குற்றத்தை இளைப்பவர்களுக்கு குடிவரவு ரிதீயான எவ்வித சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது.

வேலைபார்ப்பதற்கு அனுமதி இல்லாமல் வேலைக்கு அமர்த்துபவர்களுக்கு (employor) 5 ஆண்டுக்கு மேற்படாத சிறைத்தண்டனையும் அபராதமும் வழங்கப்படும். இச்சட்டமானது 12ம் திகதி ஆடி மாதம் 2016-ல் இருந்து அமுலுக்கு வருகின்றது.

வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்துபவர் தொடர்பான அனுமதிப் பத்திரம் வைத்திருப்பவர்கள் நிபுணத்துவக்கட்டணம் (skill charge) செலுத்த நிர்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.

உள்துறை அமைச்சு ஒரு வருடத்துக்கன நிபுணத்துவ கட்டணம் € 2,000யும் சிறிய அமைப்புகளுக்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் நிபுணத்துவ கட்டணம் € 364 அளவிட தீர்மானித்துள்ளது.

ஆனால் PHD-level மற்றும் tier-4 மாணவர்கள் வேலை பார்க்கும் குடிவரவு (tier-2) நிலைக்கு மாறும் போது இக்கட்டணம் அறிவிடப்படமாட்டது, இந்த சட்ட மாற்றமானது சித்திரை மாதம் 2017 ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரும்.

குடியிருப்புகளில் குடியிருப்பு தொடர்பான மாற்றங்கள் (Residential Finance)

பிரித்தானியாவில் குடிவரவு திணைக்களத்தின் அனுமதி இல்லாமல் வருபவர்களை வீட்டு உரிமையாளர்கள் அவர்களுக்கு சரியான முறையினை பின்பற்றி வெளியேற்ற வேண்டும்.

இச்சட்டமானது இச்சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்னுள்ள வாடகை ஒப்பந்தத்திற்கும் இனி வழங்க இருக்கும் வாடகை ஒப்பந்தத்திற்கும் ஏற்புடையதாகும். இச்சட்டத்தை பேணாத வீட்டு உரிமையாளர்களுக்கு 5 வருடத்துக்கு உட்பட்ட சிறைத்தண்டனையும் அல்லது அபராதமும் அல்லது இரண்டும் சேர்ந்து வழங்கப்படும்.

இவ்விடயம் சம்பந்தமாக வீட்டு உரிமையாளர்களும் (HOME OWNERS) வீட்டு உரிமையாளர்களின் முகவர்களும் (ESTATE AGENT) விரைந்து செயற்பட பணிக்கப்படுகின்றனர்.

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான மாற்றங்கள்

பிரித்தானிய வசிப்பிட உரிமை இல்லாத அனைத்து சாரதி அனுமதிப் பத்திரங்கள் ரத்து

செய்யப்படும். மேலும் வசிப்பிட உரிமை இல்லாமல் வாகனம் செலுத்துபவர்களின் வாகனம் அரசினால் எடுத்துக் கொள்ளப்பட்டு ஒட்டுநருக்கு 11கிழமைக்கு மேற்படாத சிறைத்தண்டனையும் அல்லது அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும்.

வங்கி கணக்குகள் (Bank Accounts)

வங்கி கணக்கு வைத்திருப்பவர்களின் வசிப்பிட உரிமை வங்கிகளால் சோதனை செய்யப்படும், இதனை செயல்படுத்தப்படும் வங்கிகளுக்கு கட்டுப்பாட்டு வரை முறை விரைவில் வெளியிடப்படும்.

வசிப்பிட உரிமையினை குடிவரவுத் திணைக்களத்துடன் உறுதி செய்வதில் ஏற்படும் செலவை வங்கி அதன் வாடிக்கையாளரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்படும்.

பிரித்தானியா வசிப்பிடவுரிமை இல்லாமல் வசிப்பவர்களின் வங்கி கணக்குகள் நிறுத்தப்படும் அல்லது நீதி மன்ற அனுமதியுடன் குறிப்பிட்ட கணக்குகள் உறைவு நிலை அனுமதியை (FROZEN ORDER) பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் இச்சட்டமானது பிரித்தானிய காவல்துறைக்கு உள்ள அதிகாரத்தை விட மேலதிகமான அதிகாரத்தினை பிரித்தானிய விதிவுடமை இல்லாதவரை பிடித்தல் அவரது உடமைகளை தேடுதல் மற்றும் உடமைகளை கைப்பற்றுதல் தொடர்பாக வழங்கியுள்ளது.

இச்சட்டமானது குடிவரவு விதிகளை மீறுபவர்களை குற்றவியல் தண்டனைக்கு உள்ளானவர்களுக்கும் மேலாக தண்டிக்கின்றது. இச்சட்டம் வரைவு நிலையில் இருக்கும் போது பல்வேறுபட்ட விமர்சனங்களை சந்தித்தாலும் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் சட்டமாகியுள்ளது.

மனித உரிமைகளை சிறப்பாக பேணிப் பாதுகாத்து வந்த பிரித்தானிய இன்று அதன் வரம்புகளில் ஏறி நின்று அதனை கவனிக்காமல் விடுவது காலத்தின் கட்டாயம் ஆகியுள்ளது. மேலும் இச்சட்டமானது குடிவரவாளர்களை விடிவிப்பது குடிவரவாளர்களை தடுத்து வைத்தல் மேல் முறையீட்டு அனுமதி மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் தொடர்பான பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது.

சாய் ரமணி இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ரானி, சத்யராஜ் மற்றும் பலர் நடிக்கும் 'மொட்ட சிவா கெட்ட சிவா' படப்பிடிப்பு மலேசியாவில் படமாக்கப்பட்ட பாடல் காட்சிகளுடன் முடிவுக்கு வந்தது. தெலுங்கில் வெளிவந்த 'பட்டாஸ்' படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். ஜீவா, ரம்யா, ஹனிரோஸ் நடித்த 'சிங்கம் புலி' படத்தை இயக்கிய சாய் ரமணி இப்படத்தை இயக்கி வருகிறார்.கடந்த ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டாக ஓடிய 'காஞ்சனா 2' படத்திற்கப் பிறகு ராகவா லாரன்ஸ் நடித்து வரும் படம் இது. தமிழ்த் திரையுலகில் முன்னணிக்கு வந்து கொண்டிருக்கும் நிக்கி கல்ரானி முதன் முறையாக ராகவா லாரன்ஸ் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ளார்.படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து விரைவில் இப்படத்தின் டீசர் வெளியீடும், இசை வெளியீடும் நடைபெற உள்ளது.

அரசு தேர்வின் போது பீகாரை மிஞ்சி ஜார்கண்ட் மாணவர்கள் புத்தக்ததை பார்தே தேர்வு எழுதியது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள கல்லூரியில் 11-ம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றன. ஒரே பெஞ்சில் 4, 5 மாணவர்கள் அதுவும் அருகில் புத்தகத்தை வைத்துக்கொண்டு எந்தவொரு அச்சமும் இல்லாமல் தேர்வு எழுதி உள்ளனர். மாணவர் ஒருவருக்காக அவரது தந்தையே தேர்வு எழுதியதும் அதே கல்லூரியில் நடந்துள்ளது. ஆனால் முறைகேடுகள் பற்றி செய்தியாளர்கள் கேட்ட போது எதுவுமே நடைபெறவில்லை மாணவர்கள் நேர்மையாகவே தேர்வு எதிர்கொண்டனர் என்று கல்லூரியின் பேராசிரியர் மனோ ரஜ்ஜன் குப்தா பதிலளித்துள்ளார். போதிய இடம் இல்லாததால் பள்ளி மைதானத்தில் அமர்ந்தும் மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர். பீகாரில் கடந்த ஆண்டு கல்லூரி பொதுத்தேர்வில் மாணவர்களுக்கான விடைகள் வகுப்புக்குள் தூக்கி வீசப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அண்டை மாநிலமான ஜார்கண்டில் நடந்துள்ள தேர்வு முறைகேடுகள் அம்மாநிலங்களில் கல்வியையே கேள்விக்குரியாக்கி உள்ளது.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…