JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இன்று நடைபெற்ற ஆடவர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே, கனடாவின் மிலோஸ் ரயோனிச்சும் மோதினார்கள்.

இதில் கனடா வீரர் ராவ்னிச்சை 6-4,7-6,7-6 என்ற நெட் செட் கணக்கில் வீழ்த்தி, பிரட்டன் வீரர் ஆண்டி முர்ரே சாம்பியன் பட்டம் பெற்றார்

கிராண்ட் ஸ்லாம் போட்டியில் ஆன்டி முர்ரே பெற்ற 3-வது பட்டம் இதுவாகும். முர்ரேவும், ரயோனிச்சும் இதுவரை 9 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் முர்ரே 6 முறையும், ரயோனிச் 3 முறையும் வென்றுள்ளனர். 

2012-ம் ஆண்டு அமெரிக்க ஒபனிலும், 2013-ல் விம்பிள்டனிலும் முர்ரே சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடதக்கது.

ரோப்பிய கோப்பை கால்பந்தில் சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ்– போர்ச்சுகல் அணிகள் இன்று நள்ளிரவு யுத்தத்தில் இறங்குகின்றன.  15–வது ஐரோப்பிய கால்பந்து திருவிழா (யூரோ) பிரான்சில் ஒரு மாத காலமாக நடந்து வருகிறது.

24 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி ‘கிளைமாக்ஸ்’ கட்டத்துக்கு வந்து விட்டது. பாரீஸ் நகரில் உள்ள ஸ்டேட் டி பிரான்ஸ் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரங்கேறும் சாம்பியன் மகுடத்துக்கான இறுதிஆட்டத்தில் பிரான்சும், போர்ச்சுகலும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

தோல்வியே சந்திக்காத பிரான்ஸ் அணியை சொந்த மண்ணில் வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. உலக சாம்பியன் ஜெர்மனியை அரைஇறுதியில் 2–0 என்ற கோல் கணக்கில் போட்டுத்தாக்கியதே அதற்கு உதாரணம். பிரான்ஸ் வீரர்கள் ஆக்ரோஷமாகவும், அதே சமயம் சாதுர்யமாகவும் விளையாடி வருகிறார்கள்.

6 கோல்கள் அடித்து தொடர்நாயகன் மற்றும் தங்க ஷூ வெல்லும் வாய்ப்பில் உள்ள ஆன்டோனி கிரிஸ்மான் மற்றும் டிமிட்ரி பயேத், ஆலிவியர் ஜிராட், பால் போக்பா, கோல் கீப்பரும், கேப்டனுமான ஹூகோ லோரிஸ் ஆகியோர் பிரான்ஸ் அணியின் தூண்களாக விளங்குகிறார்கள். நெருக்கடியை திறம்பட கையாள்வதோடு இவர்களின் பிடியும் இறுகினால் நிச்சயம் போர்ச்சுகலின் கதி கந்தல் தான்.

ஏற்கனவே 1984, 2000–ம் ஆண்டு ஐரோப்பிய கோப்பையை வென்றிருக்கும் பிரான்ஸ், இந்த முறையும் வாகை சூடினால் அதிக முறை இந்த கோப்பையை ருசித்த ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய அணிகளின் சாதனையை சமன் செய்யும். 

லீக் சுற்றில் மந்தமாக ஆடிய போர்ச்சுகல் போக போக முன்னேற்றம் கண்டு சரியான நேரத்தில் உச்சக்கட்ட பார்முக்கு வந்திருக்கிறது. அந்த அணி முழுக்க முழுக்க கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, நானி ஆகியோரைத் தான் மலைபோல் நம்பி இருக்கிறது.

போர்ச்சுகல் அணி இதுவரை எந்த சர்வதேச பட்டத்தையும் வென்றதில்லை. அதிகபட்சமாக 2004–ம் ஆண்டு ஐரோப்பிய கோப்பை இறுதி ஆட்டத்தில் கிரீசிடம் 0–1 என்ற கோல் கணக்கில் தோற்றிருந்தது. அந்த இறுதி ஆட்டத்தில் ஆடிய போது ரொனால்டோவுக்கு வயது 18. தோல்வியை தாங்க முடியாமல் சிறுபிள்ளை போல் தேம்பி தேம்பி அழுதார். ஆனால் இப்போது நன்கு பக்குவப்பட்டு புகழ்பெற்ற வீரராக விளங்குகிறார். தேச அணிக்காக கோப்பையை வெல்வதை கனவாக கொண்டுள்ள அவர், முழுமூச்சுடன் களத்தில் வரிந்து கட்டி நிற்பார்.

அவருக்கு மட்டும் நேர்த்தியான ஒத்துழைப்பு கிடைத்தால், பிரான்சுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து விடுவார்கள். காயத்தால் அவதிப்படும் போர்ச்சுகல் வீரர் பெப்பே இந்த ஆட்டத்திலும் களம் காணுவது சந்தேகம் தான்.

 வரலாறு எல்லாம் பிரான்சுக்கே சாதகமாக உள்ளன. இவ்விரு அணிகளும் கடைசியாக சந்தித்த 10 ஆட்டங்களிலும் பிரான்ஸ் அணியே வெற்றி பெற்றிருக்கிறது. போர்ச்சுகல் கடைசியாக பிரான்சை 1975–ம் ஆண்டு வீழ்த்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ பரபரப்பும், திரிலிங்கும் நிறைந்த இறுதிப்போட்டியாக இது அமையும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். 

இந்த போட்டி ப்ரான்சுக்கும் போர்ச்சுகலுக்கும் நடக்கும் காவிய மோதலா அல்லது புஸ்வாணமா ? இன்று நள்ளிரவு தெரிந்துவிடும். 

 

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன உற்சவத்தை முன்னிட்டு சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 9ஆம் நாளான சனிக்கிழமை தேர்த் திருவிழா நடைபெற்றது.

வீதிகளில் வலம் வந்த 5 தேர்கள்: இதையொட்டி, சித்சபையில் உள்ள மூலவர்களான ஸ்ரீமந் நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி மற்றும் உற்சவர்கள் சுப்பிரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித் தனி தேர்களில் அதிகாலையில் எழுந்தருளினர்.

பின்னர் கீழ வீதி தேரடி நிலையிலிருந்து 9 மணியளவில் தேர்கள் புறப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக ஒன்றன்பின் ஒன்றாக வந்த தேர்கள் மாலையில் கீழ வீதி நிலையை அடைந்தன.

காஷ்மீரில் ஆர்பாட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 11  பேர் உயிரிழந்தனர். காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நேற்று நடத்திய என்கவுன்டரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதனால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. பதற்றத்தை தணிக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் செல்போன் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பர்ஹன் வானி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஷ்மீரில் பல்வேறு பகுதிகளில் உள்ளூர் வாசிகள் ஆர்பாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்த ஆர்பாட்டத்தின் போது பாதுகாப்பு படையினருக்கும், ஆர்பாட்டகாரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 8 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்பு படையினர் உட்பட200 பேர் காயமடைந்தனர்.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…